கருப்பையன் முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்) தமிழாய்வுத் துறை, மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை திராவிட இயக்கம் தன்னோடு கலைகளையும் கலைஞர்களையும் வளர்த்துவந்தது. குறிக்கத்தக்கவகையில் எழுச்சி மிக்கக் கவிஞர்கள் மிகப் பலர் தோன்றி இயக்கத்தையும், தமிழையும், தமிழ் உணர்வையும் வளர்த்துவந்தனர். பாவேந்தர் பாரதிதாசன் முதலாகப் பல கவிஞர்கள் இவ்வியக்கத்தின் வழியாக வெளிவந்தார்கள். அவர்களில் குறிக்கத்தக்க கவிஞர் முடியரசனார் ஆவார். இவரின் கவிதை ஆற்றல் தமிழுக்கு, தமிழ உணர்விற்கு உயிரும் ஊட்டமும் அளித்தது. அவர் பற்றி அறிமுகத்தை இக்கட்டுரை […]
கருப்பையன் முனைவர் பட்ட ஆய்வாளர்,(பகுதிநேரம்) மா. மன்னர்கல்லூரி, புதுக்கோட்டை. தமிழ்க்கவிதை மரபில் மறுமலர்ச்சிக் கவிதைகள் என்றொரு வகைமை மகாகவி பாரதியாரில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளாலாம். மக்கள் விரும்பும் மெட்டில், மக்களுக்குத் தேவையான கருத்துக்களை எளிய இனிய முறையில் படைத்தளிப்பது என்பதே மறுமலர்ச்சிக்காலக் கவிதைகளின் இயல்பாகும். அரசர்களை, இறைவுருவங்களை முன்வைத்துப் புனையப்பெற்ற கற்பனை படைப்புகளை, சிற்றிலக்கிய மரபுகளை சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையைப் பாட மறுமலர்ச்சிக் கவிதைகள் தோன்றின. பாரதியில் இருந்துத் தொடங்கும் இக்கவிதைகள் புதுக்கவிதையின் எழுச்சியாகக் கருதப்படும் […]