author

முனகிக் கிடக்கும் வீடு

This entry is part 29 of 31 in the series 16 டிசம்பர் 2012

  கதவு காத்துக் காத்து தூர்ந்து கிடக்கும்.   இரவு பகல் எட்டி எட்டிப் பார்க்கும்.   அறை ஜன்னல்களின் அனாவசியம் காற்றடித்துச் சொல்லும்.   அறைக்குள் சிறைப்பட்ட வெளியைக் குருவிகள் வந்து வந்து விசாரித்துச் செல்லும்.   நடுமுற்றம் நாதியற்றுக் கூச்சலிடும்.   வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் காலத்தின் மொழியை அது கற்றிருக்கும்.   ஒற்றையடிப் படிக்கட்டு உச்சியில் நாய்க்குட்டி போல் ஆகாயம் காத்துக் கிடக்கும்.   முழுநிலா வெளிச்சத்தில் இறந்து போன மனிதர்கள் […]

காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்

This entry is part 7 of 26 in the series 9 டிசம்பர் 2012

I ஜென் வழி(The Way of Zen)-ஒரு விளக்கம் ஜென் வழியில் மெய்யுணர்வு (realization/enlightenment) அடையும் கருத்தாக்கங்களில், காளை மேய்த்தல் படங்கள் மிகவும் அறிமுகமானவை. காளை என்ற குறியீட்டின் மூலம் மெய்யுணர்வுக்கான அடுத்தடுத்த பத்துக் கட்டங்களை இந்தப் படங்கள் விளக்குகின்றன. காளை என்ற குறியீடு உணர்வுறும் எல்லா உயிர்களின்(sentient beings) ஆதி இயல்பு(primordial nature). அவற்றின் உண்மையான இயல்பு  (True-nature).  உண்மையான இயல்பு தான் புத்த இயல்பு அல்லது புத்த மனம்.( Buddha nature or Buddha […]

மரண தண்டனை- நீதியின் கருநிழல்

This entry is part 4 of 31 in the series 2 டிசம்பர் 2012

முகம்மது அஜ்மல் அமீர் கசாப் (Mohammed Ajmal Amir Kasab) பம்பாயின் 26/11 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரோடு பிடிபட்ட ஒரே பயங்கரவாதி. அவன் உரிய நீதி மன்ற விசாரணைக்குப் பின் , கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின் தூக்கிலிடப்பட்டு விட்டான். கடைசி வரை இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது அவன் துக்கிலிடப்பட்டது. அதைப் பற்றியும், அவன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிடாத இருண்மையும் மற்றும் அவனுக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்டத்தின் மேலான ஒரு நீதிமறு ஆய்வு(judicial […]

மனம் வெட்டும் குழிகள்

This entry is part 24 of 42 in the series 25 நவம்பர் 2012

ஊரை விட்டு உறவை விட்டு வந்தது போல் ஒரு வெறுமை. மனம் தனிமையின் குழிகளை வெட்டிக் கொண்டிருக்கும். கண்களில் விரிந்து கடந்த கால நினைவுகள் மண் மேடிட்டுக் கிடக்கும். ஓய்வு பெற்று எத்தனை காலம்? குழியில் விழுந்து கிடக்கும் கால நிழலை மேலும் குழி வெட்டி மனம் பிடிக்கப் பார்க்கும். ’மற்றவர்கள் தன்னை மறந்து விட்டார்களோ?’ பாறையாய்க் கேள்வி தடுக்கும். ’கொஞ்சம் காலமாகத் தான் பேச நினைத்த நண்பரோடு பேசினாலென்ன?’ ஒரு நினைப்பு ஈரமாகும். நினைப்பு நீளும் […]

பொய்மை

This entry is part 6 of 31 in the series 4 நவம்பர் 2012

(1) பொய்மை   காண வேண்டி வரும் தயக்கம்.   கண்டு விடக் கூடாது என்று முன் எச்சரிக்கை.   எதிர் அறையின் பேச்சரவங்கள் என்னைத் தீண்டுகின்றன.   அவன் அறைக்குள் இருப்பதை அவை உறுதி செய்கின்றன.   அவனை நேருக்கு நேர் காணாது சென்று விடும் வேளையைத் தேர்ந்து கொண்டிருப்பேன்.   மெல்லக் கதவைத் திறப்பேன் பூனை போல் வெளியேற.   ஓ! அவன் கதவை நான் திறந்தது போல் அவன் கதவை அவன் திறந்து […]

செல்பேசிகளின் பன்முகத் தாக்கங்கள்

This entry is part 31 of 41 in the series 23 செப்டம்பர் 2012

கு.அழகர்சாமி மனிதரின் இன்னொரு விரல் போன்று செல்பேசி(Mobile phone) ஆகி விட்டது. சிலர் மிட்டாய்கள் போல் ஒன்றுக்கு மேலும் செல்பேசிகள் வைத்திருப்பர். குடும்பத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு செல்பேசி. செல்பேசியின் தாக்கமோ இடம், காலம், சூழல் கடந்ததாயுள்ளது. சிலர் சாலையில் நடந்து போகும் போது கூட ஒரு பைத்தியம் பேசுவது போல பேசிக் கொண்டே போவர். கழிவறையில் சிறு நீர் கழிக்கும் போது கூடப் பேசிக் கொண்டே சிறுநீர் கழிப்பவர்களைக் காண்கிறோம். சிலர் உண்ணும் போது கூட […]

அம்மா

This entry is part 9 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  (1)   அம்மா இனியில்லை.   வெயிலில் வெறிச்சோடிக் கிடக்கும் ஒற்றையடிப்  பாதையாய் மனம் ஒடிந்து கிடக்கும்.   வேலைக்குப் போய் அம்மாவுக்கு வாங்கித் தந்தது ஒரே ஒரு சேலை.   அழுவேன் நான்.   ஆண்டுகள் பல அம்மாவிடம் பேசாத அப்பா நாற்காலியில் கிடத்தப்பட்டிருக்கும் ’அம்மாவின்’ தலைக்கு எண்ணெய் வைப்பார்.   அது இது வரை என் விவரம் தெரிந்த வரை அம்மாவுக்கு அப்பா செய்த ஒரே ஒரு சேவகம்.   அழுவார் அப்பா. […]

காலத்தின் விதி

This entry is part 20 of 37 in the series 2 செப்டம்பர் 2012

முன் பின் தெரியாத ஒரு அனாதைச் சாவிலிருந்து திரும்பும் ’அவனை’ வழி மறைப்பான் முன்வாசலில் முதியவன் ஒருவன்.   முதியவன் கால்கள் மண்ணில் வேர் கொள்ளவில்லையா?   சதா அழுக்கு சேரும் கோணிப்பை போன்ற கிழிந்த சட்டையில் கிழட்டு வெளவாலாய் அவன் தொங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றும்.   முதியவன் வாழ்ந்தும் செத்தும் கொண்டிருப்பதை விழிகள் திறந்தும் மூடியும் சொல்வான்.   அப்போது பெய்து முடிந்த அந்தி மழைக்குப் பின்னால் தான் அவன் வந்திருக்க  வேண்டும்.   […]

பிணம்

This entry is part 18 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

    கான்சரில் செத்துப் போனவரின் உடல் குளிர் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படிருக்கும்.   கண்ணீரில் ’ஸ்பாஞ்சாய்’ ஆகிய மனைவி களைத்தருகில் அமர்ந்திருப்பாள்.   அருகிலிருக்கும் ஒருத்தி அடையாளம் காட்டிக் கொண்டிருப்பாள் வந்து போவோரை.   செத்துப் போனவரை இளம் வயதில் கைப்பிடிக்க விரும்பியவள் அவள் என்று கேள்வி.   சாவுக்கு வந்த சிலர் சாவைத் தவிர ஏதேதோ கதை பேசிக் கொண்டிருப்பார்கள்.   இன்று நிகழும் வாழ்க்கை போல் அலங்காரமாயிருக்கும் பாடை காத்துக் கொண்டிருக்கும் பிணத்துக்கு. […]

மரமும், நானும், விட்டுப் போன உரையாடல்களும்

This entry is part 28 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  (1) ’செளக்கியமா—’ திரும்பிப் பார்ப்பேன். எங்கிருந்து குரல்? தெரியவில்லை. சிறிது நேரம் சென்று துணிகள் காயப்போட வெளிமாடம் வருவேன். ’செளக்கியமா—’ திரும்பிப் பார்ப்பேன். அருகிலிருந்து குரல். ஒரு மரம் விசாரிக்கும். பத்து வருடங்கள் முன் பார்த்த அதே மரம். என் ஞாபகம் இருக்கிறதா? -நான். ஞாபகமா? -மரம். வேலை மாற்றலாகி வந்து விட்டேன் இங்கே. ’வயசாயிருச்சே’? -நான். என்ன சொல்கிறாய்? புரியவில்லை. -மரம். எத்தனை வருடங்கள் இருக்கிறாய் இங்கு? -நான். இந்தக் கணத்தில் இருக்கிறேன். -மரம். […]