Articles Posted by the Author:

 • தொங்கும் கைகள்

  தொங்கும் கைகள்

  தலையை உடைத்து கொண்டிருந்த பிரச்சனை, தலை மேல் ஆடிக் கொண்டிருந்த கத்தி. கிருஸ்ணன் போல தேரை அழுத்தி தலையையும், தலைப்பாகையும் சேர்த்தே காப்பாற்றினாள் மிஸ். எலிசா கில்பெர்ட். அப்போது எலிசாவை அப்படியே பின்புறமாய் சென்று முத்தமிட்டு அழுத்தி ` என்ன சூப்பர் சொல்யூசன், கிளாசிக் ப்ரெசெண்டேசன் ` என்று சொல்லியவாறே அழுத்தி கட்டி கொள்ள வேண்டுமென்று தோன்றியது. எலிசா – எங்கள் நிறுவனம் அவுட் சோர்ச் செய்திருந்த நிறுவனத்தின் ஒரு பார்ட்னர். தேவைக்கு அதிகமாக பேசுபவள். தன் […]


 • பர்த் டே

  பர்த் டே

  ஒரு மாதத்திற்கு முன்பே தாமன் வரப்போகிற சுபதினத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான். அவன் அதை மறக்காமல் இருக்க எல்லா பிரயத்தன்ங்களும் செய்தான். அதில் ஓன்று : அந்த அடுக்கத்தில் அவனது ஓவ்வொரு நண்பர்களுக்கான பிறந்த நாள் முடிந்ததும் அவன் வீட்டின் சபையை கூட்டுவான். அன்றைய நிகழ்வு பற்றிய அவனது ஆச்சரியம், அதிசியம், ஏமாற்றம், விவரிப்பு, விளக்கம், பிரச்சாரம், அதிலிருந்து பெற்றது, கற்றது என்று அவன் லயிப்போடு பேசுகிற பாணியை வீட்டில் எல்லோரும் மெல்லிய சிரிப்போடு எதிர்ப்பார்த்திருந்தோம் என்பதே உண்மை. […]


 • ப்ளாட் துளசி – 2

  ப்ளாட் துளசி – 2

  2. வேர் : அலுவலகத்தில் கிடைத்த ஒரு மகத்தான வெற்றிக்கு பின் வந்த ஒரு ஞாயிறில் மிகப் பெரிய மன அழுத்தம் அவனுக்கு ஏற்பட்டது. வீட்டில் வேறு யாரும் இல்லை. மழை தூறலான சோம்பலான ஞாயிறு. வீட்டில் எல்லோரும் ஏதோ ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தனர். அவன் தனியனாய் இருந்தான். இலக்கியம் படித்தான். ஹிந்துஸ்தானி கேட்டுக்கொண்டே மது அருந்தினான். சுபா முத்கலை மறுமறுபடி கேட்டுக் கொண்டேயிருந்தான். பேகன் அக்தருக்கு மாறினான். கீர்த்தீ ஸ்கால் பாடும் காபி ராகத்தில் மெல்ல […]


 • ப்ளாட் துளசி – 1

  ப்ளாட் துளசி – 1

  இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை. 1. லிப்டிலிருந்த என்னைக் கையைப்பிடித்து இழுக்காதாவாறு இழுத்து தனது இல்லத்தை நோக்கி இழுத்து சென்றார் நாயர். நாயர் உயரம். பின்னாலிருந்து தள்ளாத குறை. “ தும் ஆக்கே காலி தோக்கோ “ [ நீ வெறுமன வந்து பாரு ] நான் ஏன் அவர் வீட்டுக்கு போய் ஏன் வெறுமனே பார்க்க வேண்டும். அதுவும் அலுவல அவசரத்தில். ’முடியாது’, […]


 • ப்ளாட் துளசி

  இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை. * 1. லிப்டிலிருந்த என்னைக் கையைப்பிடித்து இழுக்காதாவாறு இழுத்து தனது இல்லத்தை நோக்கி இழுத்து சென்றார் நாயர். நாயர் உயரம். பின்னாலிருந்து தள்ளாத குறை. “ தும் ஆக்கே காலி தோக்கோ “ [ நீ வெறுமன வந்து பாரு ] நான் ஏன் அவர் வீட்டுக்கு போய் ஏன் வெறுமனே பார்க்க வேண்டும். அதுவும் அலுவல அவசரத்தில். […]


 • தெய்வத்திருமகள்

  நான் வாழும் உலகத்துக்குள் மழையாய் நீ…. நீ வாழும் உலகத்துக்குள் மழலையாய் நான்…. வளர்ச்சி அற்று போனாலும் மகிழ்ச்சி உற்று போவேன் உன்னால்.. கள்ளம் இல்லை கபடம் இல்லை என் பாச முல்லை என் செல்ல பிள்ளை உன்னை தவிர எனக்கு யாருமில்லை என்னை விட்டு நீ பிரிந்தால் உடலைவிட்டு உயிர் பிரியும்…. உன்னை விட்டு நான் பிரிந்தால் உயிரை விட்டு உடல் பிரியும்…. நிலவோடு பேசுகையில் உன்னை கொஞ்சிய ஞாபகம்… உன்னோடு பேசுகையில் நிலவுக்கு கொஞ்சம் […]


 • காலம் கடந்தவை

  காலம் கடந்தவை

  பின்பு ஒரு நாளில் உன்னிடம் கூடுத்து விடலாம் என்று முன்பு ஒரு நாளில் உன்னக்காக வாங்கப்பட்ட பரிசு ஒன்றை காலம் கடந்து காத்து வருகிறது என் பெட்டகத்தின் உள் அறை…. பின்பு ஒரு நாளில் சொல்லி விடலாம் என்று முன்பு ஒரு நாளில் தோன்றிய காதலை காலம் கடந்து காத்து வருகிறது என் இதயம் …. ச. மணி ராமலிங்கம் (smrngl@gmail.com)


 • கவிதை

  எங்கே போயிருந்தது இந்த கவிதை மழை வரும் வரை.   * ஈரநிலமாய் மாறுதலுக்கு தயாராகிறார்கள் சன்னல்கள், கார் கண்ணாடி, சுவர்கள், மெட்ரோ ரயில்கள்   மரங்கள் அகோரிகள் வெயில், மழை, தூறல், பனி..   *   தாமதமாய் வந்த கணவன் மீது கோபம் கொள்ளும் மனைவி   படித்து முடித்து வரும் பையனை முதலில் சாப்பிடு என சந்தோசமாய் விரட்டும் அப்பா   விடுமுறை முடிந்து கிளம்பும் உறவுகாரப் பையன்களின் கடைசி நாள் மூடிய […]