என் சித்தி மகள் கதறிகொண்டிருக்கிறாள். நான் கண்டுகொள்ளவே இல்லை. என்னுடைய சித்தி மகளின் கணவன் காரை கார் சத்தியமங்கலத்திலிருந்து சாமராஜபுரம் போகும் ஹேர்பின் வளைவில் வேகமாக ஓட்டிகொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் ஹாரனும் அடிக்காமல், வண்டியின் வேகத்தையும் குறைக்காமல் அவன் வேகமாக வண்டியை திருப்பும்போது என் சித்தி மகள் இன்னும் கூச்சல் போட்டு அலறினாள். அந்த அலறலை, அவன் கண்டுகொள்ளவே இல்லை. அல்லது அவன் கண்டுகொண்டாலும் அது அவனுக்கு இன்னும் வேகத்தை கொடுத்தது போல சிரித்துகொண்டே இன்னும் தூண்டும் […]
இன்று எந்தப் பெருமழையும் பெய்யவில்லை. இன்று எந்த தலித்தும் கொல்லப் படவில்லை. இன்று எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவில்லை. இன்று எந்த பெருநடிகன் படமும் வெளியாகவில்லை. எந்த அபிமானப் பெருந்தலைவரும் மறைந்து விடவில்லை. எந்த கட்டளையும் வரவில்லை , தெண்டனிட்ட கட்சியிலிருந்து. எந்த தொலைவண்டியும் கவிழவில்லை. எங்கும் துப்பாக்கிச் சூடு இல்லை. எப்படிப் பொங்கி வரும் கவிதை? நடிகன் வாய்ப்புக் கொடுத்தால் இக்கால நாயகன். அரசியல் தலைவனோ , எழுத்து விற்பனை மாயவனோ பணம் பண்ண வழி செய்தால் […]
வீடு எரிகிறது எழுத்தோ தொடர்ந்து கொண்டிருக்கிறது. கிழிந்த சிவந்த புடவை காற்றில் பறப்பது போல கூரை எரிகிறது பின்னங்கட்டில் நீ மட்டும் பத்திரமாய் வேப்பமரத்த்திலிருந்து விழும் கடைசி பூ போல பூச்சி பறந்து போகிறது. புருஷனோ போய்விட்டான். இருந்தாலும் எழுத்து தொடர்கிறது. பக்கங்களுக்கு இடையே எழுத்து பரிதவிக்கிறது நீருக்கு நடுவே அலைகிறது. புருஷன் வயதாகி இறந்திருக்கலாம். உடம்பு சரியில்லாமல் போயிருந்திருக்கலாம். பிள்ளைகள் உன்னுடன் இருக்க முயற்சியை கைவிட்டிருக்கலாம். ஆனால் எழுத்து தொடர்கிறது நீ உருவாக்கும் ஆன்மாவை கடைத்தேற்ற […]
மஞ்சுளா நவநீதன் கர் வாபஸி என்ற இயக்கம் ஹிந்துக்களாய் மாற்றம் பெறுவோருக்கான வசதிகளைப் பற்றுத் தந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது. இந்த இயக்கம் ஏன் இவ்வளவு காலமாய் முறையான ஒரு செயல் திட்டத்துடன் இயங்க வில்லை என்பதும், இதற்கு எழும் எதிர்ப்புகள் ஏன் இவ்வளவு நச்சு தோய்ந்த முறையில் எழ வேண்டும் என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று. ஹிந்து மதம் யாரையும் மதம் மாற்ற நினைப்பதில்லை, மாறாக ஒரு முஸ்லிம் சிறந்த முஸ்லிம் ஆக வேண்டும் […]
டேவிட் பென் குரியன் சமீபத்திய வரலாற்றில் பாலஸ்தீன் என்று அழைக்கப் படுவது இன்றைய இஸ்ரேல் ஜோர்டான் பகுதிகளாகும். 1517 முதல் 1917 வரையில் இந்தப் பகுதி ஆட்டமன் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. முதல் உலகப் போரின் முடிவில் ஆட்டமன் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. அதன் பின்பு பிறந்த நவீன காலத் துருக்கி ;பாலஸ்தீனத்தை பிரிட்டிஷ் வசம் ஒப்படைத்தது. இது லாசன் ஒப்பந்தம் எனப்படும். 1917-ல் பிரிட்டன் பால்பூர் திட்டம் என்ற ஒன்றை அறிவித்து […]
(மறு பிரசுரம்) தமிழ் நாட்டில் நான்கு பேர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றிருக்கிறார்கள். அந்த மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாய் மாற்ற வேண்டும் என்று போராட்டங்களும் , கையெழுத்து இயக்கங்களும் நடை பெறுகின்றன. ஒரு நவீன அரசமைப்பில் மரண தண்டனை என்பது இருக்கக் கூடாது என்பது பல சமூகவியல் நிபுணர்களின் கருத்து. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருபதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை முதலில் வழங்கப் பட்டது. இது மாதிரியான […]
அன்னா ஹசாரே தொடங்கிய போராட்டம் இந்தியாவில் ஒரு ஆரோக்கியமான போராட்ட அரசியலைத் தொடங்கியுள்ளது. அந்தப் போராட்டத்தில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டதும், தொடர்ந்து நடத்துவதும் இந்தியாவின் பொது மக்கள் ஜன நாயகத்தில் பங்கு பெறுவதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. பொது மக்கள் வாக்களிப்பதை மட்டும் ஜன நாயகக் கடமையாய்க் கொள்ளாமல், தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்ததன் அறிகுறி இது. அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகப் பணியாளர்கள் என்று தம்மை அடையாளம் கண்டுகொண்டவர்கள் அரசியலின் பிரசினைகளை […]
தேர்தலுக்கு முன்னால் ராஜா கைது தேர்தல் முடிந்ததும் கனிமொழி கைது, இருவர் தவிர சரத்குமார் கைது – வேறு யாரும் இன்னமும் கைது செய்யப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்குமானால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று வீரவுரை பேசி மக்கள் மன்றத்திற்கு முன்னால் நீதி மன்றங்கள் தலை பணிய வேண்டும் என்றெல்லாம் வசனங்கள் எழுதப் பட்டிருக்கும். அதற்கு வழியில்லாத படிக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து தீர்ப்பும் வழங்கி விட்டார்கள். ஆனால் இது போதாது. […]