இன்று புத்தக அலமாரியை மாற்றி அடுக்கும்போது இவ்விரு புத்தகங்களும் கண்ணில் பட்டன. முன்பொரு காலத்தில் எதோ ஒரு வெகுஜன இதழை மேய்ந்து கொண்டிருந்தபோது இதில் ஒரு புத்தகம் குறித்த சின்னஞ்சிறிய குறிப்பு ஒன்று அதில் இருந்தது. ஆறு வரிதான் இருக்கும். கூடவே பதிப்பகம் பெயர். உடனே அந்த கோடைக்கால பின்மதிய வேளையில் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். பதிப்பகம் என்றவுடன் கற்பனையில் பிரம்மாண்டமாக நினைத்துக் கொண்டு சுலபமாக கண்டுபிடித்துவிடலாம் என்று போனேன், ஆனால் லாயிட்ஸ் ரோடு ஆரம்பத்திலிருந்து ஆறு […]
நேற்று அந்த நீளமான பஃபே லைனில் பக்கத்தில் வந்து நின்றவர் தூரத்து நண்பர். மனநல மருத்துவர். ரொம்ப நாள் கழித்து பார்க்கிறோம். சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்தவுடன் தொழிலில் இருக்கும் சவால்கள் குறித்து பேச்சு வந்தது. “சமீபத்துல ஒரு பேஷண்ட்.. எது பேசினாலும் பார்ப்பனர் பார்ப்பனர்னே முடிக்கிறாரு, வர வர தொண தொணப்பு ரொம்ப ஜாஸ்தியாகிட்டே போகுது, கொஞ்சம் என்னன்னு பாருங்கன்னு அவர் பிரண்ட்ஸ் கூட்டிட்டு வந்தாங்க… சரின்னு உக்கார வச்சி Rorschach test கொடுத்தேன்” “அப்படின்னா” “அதாம்பா.. […]
ரஜினி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்ற அரிச்சுவடியையும் மீறி படம் பார்க்கும்போது மைண்ட் வாய்ஸ் எழுப்பிய குண்டக்க மண்டக்க கேள்விகள்: உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனை கடத்தி வைத்து கோத்தகிரி பெண்டுக்கு வந்து பணத்தை கொடுத்து மீட்டுக்கொள்ளும்படி சொல்லும்போது, அந்த நாய்க்காக அவ்ளோ தூரம்லாம் வரமுடியாதுடா அப்பிடி வேலியோரமா வந்து வாங்கிக்க என்பார் கவுண்டபெல். அது போல இந்த படத்தில் எதற்கு மும்பை? போதைப்பொருள் கடத்தல் மாஃபியா டான் என்றவுடன் மும்பை என்று முடிவு செஞ்சிட்டாங்க […]