Articles Posted by the Author:

 • மழையெச்ச நாளொன்றில்…

  மழையெச்ச நாளொன்றில்…

  வெயிலில் தலையுலர்த்திக் கொண்டிருந்தது நேற்றுபெய்த மழையில் தொப்பலாய் நனைந்த அந்தக் குடிசை. பெய்த மழையாய் கூரைவழி எட்டிப்பார்த்தது மேகத்தின் கண்ணீர் ஏழைகளின் வாழ்க்கையை… மெதுமெதுவாய் மேகப்போர்வையை விலக்கி சோம்பல்முறித்தெழுந்தான் தன் சுட்டெரிக்கும் ஒளிக்கதிர் பற்கள் காட்டி… குடிசைக்குள் மழைநீர் குளமாய்… மிதக்கும் பாத்திரங்கள்… கைகால்கள் நடுநடுங்க சோர்வாய் திண்ணையில் குழந்தைகள். கடலோடு வலைவீசி கயல்தேடி கரைதிரும்பாக் கணவன். கால்கடுக்க வாசலில் நின்றவாறு தெருமுனையை வெறிக்கப்பார்க்கும் அவள் புயலின் கூரிய நகங்கள் பிய்த்து எறிந்திருந்தன குடிசைகளின் கூரைகளை… ஆறுதல் […]


 • விவசாயி

  விவசாயி

    வானம்பார்த்த பூமி விதைத்தால் விறகாகும் கருவேல மரங்கள் ——————————————————-   கண்ணீர்விட்டு வளர்த்தோம் இந்தவருடம் பூப்பெய்தியது எங்கவீட்டு புளியமரம் ——————————————————-   கண்ணைப் போல் தென்னை வளர்த்தோம் இளநீர் தந்தது ——————————————————-   குழிவிழுந்த வயக்காடு தாகம்தீர்த்துச் சிரித்தது மழையால் ——————————————————-   உழைத்துக் களைத்த உழவன் உறங்கத் துடிக்கும் தாய்மடி மரங்கள்


 • சொல்லி விடாதீர்கள்

  சொல்லி விடாதீர்கள்

  பேன்ட் சட்டை அணிந்த அனைவருமே அவன் கண்களுக்கு கோடீஸ்வரர்கள் தான் நானும் அப்படித்தான் தெரிந்திருக்கக் கூடும்! நான் அவனைக் கடந்துபோன அந்த சில நொடிகளில்… நடைபாதையில் அமர்ந்திருந்தான் அவன் கைகளை நீட்டி என்னிடம் எதையோ எதிர்பார்த்தபடி… நிச்சயமாய் என்னிடம் அவன் பணத்தையோ உணவையோ தான் எதிர்பார்த்திருக்கக் கூடும் கல்வி வணிகமாகிப் போன எங்கள் பண(ஜன)நாயக நாட்டின் விலைவாசி ஏற்றத்தால் இப்பொழுதெல்லாம் நானுங்கூட அவனைப்போல் ஒரு நாளைக்கு ஒருமுறையோ இரு நாட்களுக்கு ஒருமுறையோ தான் அரைகுறை வயிறோடு உணவருந்துகிறேன் […]


 • வரவேற்போம் தீபாவளியை!

  வரவேற்போம் தீபாவளியை!

  தீய எண்ணங்களை தொலைத்துவிட… நல்லெண்ணங்களை நம் நினைவில் நிறுத்த… வரவேற்போம் தீபாவளியை! உணர்வுகளைத் தொலைத்துவிட்ட தீவுகளாகிப் போன நம் வாழ்வில் வசந்தம் வீச… வரவேற்போம் தீபாவளியை! மின்னஞ்சல் அனுப்பி அனுப்பியே உறுதியான நட்பில் தற்காலிகமாய் மறந்துபோன முகங்களை தேடும் முயற்சியாய்… வரவேற்போம் தீபாவளியை! நேற்றுவரை காதலர்களாய்… இன்றுமுதல் கணவன் மனைவியாய்… இல்லற பந்தத்தில் இணைத்த பூரிப்பில் வரவேற்போம் தீபாவளியை! உண்மையான அன்பு நம் குடும்பத்தினரிடம் மட்டுமே கிடைக்கும் என்று உணரவைக்கும் திருவிழா ஆதலால் வரவேற்போம் தீபாவளியை! புத்தாடை […]


 • தாய்மை!

  தாய்மை!

  நீண்டதொரு சாலையில் மிதிவண்டியை இழுத்தபடியே என்னோடு பேசிக்கொண்டே நடந்தாய் நீ! நாமிருவரும் தற்காலிகமாய் பிரியவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியது சாலையின் பிரிவு! என்னிடம் விடைபெற்றபடியே சாலையின் வலதுபுறமாய் அழுத்தினாய் நீ உன் மிதிவண்டியை! என் கண்ணைவிட்டு நீ மறையும்வரை உன்னை பதைபதைக்கும் உள்ளத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்!! நடைவண்டியை தள்ளிக்கொண்டு உற்சாகமாய்க் கிளம்பும் தன் குழந்தை கீழே விழுந்துவிடக்கூடாது எனத் தவிக்கும் தாய் போலவே…


 • அடைமழை!

  அடைமழை!

  அடைமழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது!   அலுவலகம் முடிந்து வீடு திரும்புவதற்காய் சாலையோரமாய் நடந்தேன்!   என் கைகுலுக்கிவிட்டு தேநீர் அருந்தச் சொன்னது தென்றல்!   ஸ்ட்ராங்காய் ஒரு டீ குடித்தவுடனே மீண்டும் கிளம்பினேன் சாலையோரமாய் நிறுத்திவைத்திருந்த நடராஜா சர்வீசில்…!   பூக்கடைப் பெண்மணி உரக்கக் கூவினாள் ‘நான்கு முழம் பத்து ரூபா… நான்கு முழம் பத்து ரூபா…’ என்று!   கடந்து போகயிலே அவள் முகம் பார்த்தேன் கூவியபடியே அவள் கண்கலிளிருந்து மீண்டும் வலுத்தது அடைமழை…!!