author

ஆவி எதை தேடியது ?

This entry is part 5 of 13 in the series 6 செப்டம்பர் 2020

நத்தை தனது ஓட்டையும்   பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று,  அவுஸ்திரேலியர்களும்  தாங்கள் வாழும் வீட்டை  ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்கிறார்கள்.  அதனால்  அவர்கள் வாழ்ந்த  வீடுகள்  ஏழு வருடங்களுக்கு ஒரு முறை விற்பனைச் சந்தைக்கு வரும்.  வயதானவர்கள்   பெரிய வீட்டை விற்றுவிட்டு,  மற்றும் ஒரு  சிறிய வீட்டைத் தேடுவார்கள்.அதேபோன்று   குடும்பம் பெருகுவதால் மட்டுமன்றி,  குடும்பம் பிரிவதாலும் வீடுகள் மாறுகின்றன.  இலங்கை,   இந்தியா போன்ற நாடுகளிலிருந்து  இங்கு வாழ வந்தவர்களால்   அவுஸ்திரேலியர்களின்  இந்த மனப்பான்மையை  நம்ப […]

மாமனார் நட்ட மாதுளை

This entry is part 19 of 22 in the series 22 ஏப்ரல் 2018

நொயல் நடேசன் பழங்களில் எனக்கு விருப்பமானது மாதுளை. இப்பொழுது மட்டுமல்ல எனது விடலைப் பருவத்தில் காதல் கடிதம் எழுதும்போதும் மாதுளையை உவமையாக்கினேன். மற்றவர்கள் செவ்விளனியையோ, மாம்பழத்தையோ, அல்லது எஸ். பொ நனவிடைதோய்தலில் எழுதியது போன்று முயல்குட்டியையோ உவமையாக்கலாம். நான் உவமையாக எழுதும்போது கூட பொய்மையோ, தேவையற்ற புகழ்ச்சியோ இருக்கக் கூடாதென நினைப்பவன். எங்கள் மெல்பன் வீட்டின் பின்புறத்தில் ஒரு மாதுளைச் செடி எனது மாமனாரால் நடப்பட்டது. அவரது மகளுக்கு அது அப்பா நட்டது என்று சொல்வதில் ஆனந்தம்.அவரது […]

சதைகள் – சிறுகதைகள்

This entry is part 12 of 13 in the series 25 ஜூன் 2017

  சதைகள் – சிறுகதைகள் காவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம். ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் […]

பாரதி பள்ளியின் நாடகவிழா

This entry is part 9 of 14 in the series 18 ஜூன் 2017

பாரதி பள்ளியின் நாடகவிழாவிற்குச் சென்றபோது, மீண்டும் என்னை ஒரு சிறுவனாக நினைத்து சிறுவர் நாடகங்களை அனுபவித்து நினைவோடையில் நீந்த முடிந்தது. ஒருவிதத்தில் நாங்கள் சிறுவயதில் அனுபவிக்காத விடயங்கள் என்பதில் பொறாமை மதியத்து நிழலாக மனத்தில் படிந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலியா வந்தபின்பு ஆங்கிலத்தில் பார்த்து, படித்து சிறுவர் இலக்கியங்கள், நாடகம் மற்றும் சினிமாவை புரிந்து கொண்டபோது ,எமது நாடுகளில் முக்கியமாக தமிழ்மொழியில் வறுமைக்கோட்டின்கீழ் கவனிப்பாரற்ற ஒரு துறையாக உணர்ந்தேன். அதனால் பல முறை மனத்தில் ஏக்கம் ஏற்பட்டது. மொழி […]

தமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “

This entry is part 11 of 16 in the series 6 மார்ச் 2016

  நடேசன் இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப்புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன் அரசியல் முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும் வைத்து […]

அந்தரங்கங்கள்

This entry is part 13 of 23 in the series 11 அக்டோபர் 2015

  தேவகுமார (தேவ்) என்ற டேவிட்டின் கதை எமது திருமணமாகி முப்பது வருட நிறைவு நாளுக்காக பிள்ளைகளால் ஒழுங்கு செய்யப்பட்ட அந்த விருந்திற்கு, நானும் மாலினியும் சென்றபோது எதிர்பாராமல் எனது வாழ்கையில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக, இரண்டு வருட காலம் என்னுடன் உறவில் இருந்த எமிலியை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வருமென நான் எதிர்பார்க்கவில்லை. பழையனவாக நினைத்து புதைத்தது, துளிர்த்து மீண்டும் செடியாகியதுபோல், எதிர்பாராமல் நிகழும் சம்பவங்களின் கோர்வைதானே இந்த மனித வாழ்க்கை. சிட்னியில் ஜுலை மாதம் […]

ஜி. நாகராஜனின் சிறுகதைகள்

This entry is part 10 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

  நடேசன் சிறுகதைகள் மனித வாழ்வின் தருணத்தை மின்னலாக வெளிச்சமிடுபவை. சிறுகதைகளின் தொடக்கம் ஜாதகக்கதைகள், விவிலியம் ஈசாப் கதைகளிலிருந்து தோன்றினாலும் அமரிக்கா, இரஸ்சியாவில் 19ஆம் நூற்றாண்டிலே இலக்கியமாக வரையறை செய்யப்படுகிறது. சிறுகதைகளை மதிப்பிடுவதில் உள்ளடக்கம், மொழி, அமைப்பு, என்பவற்றுடன் நம்பகத்தன்மை, சர்வதேசியத்தன்மை, வாசிப்போரது உள்ளத்தில் உருவாக்கும் தாக்கம் எனப்பல கூறுகள் அடங்கியது ஜி நாகராஜனின் சிறுகதைகள் அவரது நாவல்கள் போல் உள்மன உணர்வுகளையும், கனவுகளையும் வெளியே கொணர்ந்து மனிதர்களின் மனதை கூறுபோட்டு மேசையில் காட்சிப்படுத்தும். அவருடைய சிறுகதைகளைக் […]

யார் பொறுப்பாளி? யாரது நாய்?

This entry is part 22 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

குடும்பங்களில் நாய்கள் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகள் பல்லாயிரம் ஆண்டு காலமாக வேட்டைத் தோழனாகவும், அதன் பின்பு வேட்டையாடுதல் அருகி தோழமைக்காக என வீட்டின் பின் வளவுகளில் வளர்க்கப்படும். தற்பொழுது சிறிய குடும்பங்கள், பெரிய வீடுகள் என நிலமை மாறிக்கொண்டு வருவதால், செல்லப்பிராணிகள் வீட்டினுள்ளே வந்துவிட்டன. தற்பொழுது படுக்கை அறைவரையும் செல்கின்றன. எங்கள் வீட்டில் படுக்கையின் அருகே எங்களது சிண்டி நாய் படுத்து குறட்டை விட்டு தூங்கும். ஏதாவது கனவு கண்டால் எங்களை நித்திரையில் இருந்து எழுப்பும். தனக்கு […]

டோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison) அயல்மொழி இலக்கியம்

This entry is part 19 of 23 in the series 7 டிசம்பர் 2014

  பெண் இலக்கியம் என்றால் என்ன? பலகாலமாக என் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வி. இலக்கியத்தில் ஆண்கள் சொல்லும் விடயங்கள் பெண்கள் சொல்வதாக  இருந்தால் அது பெண் இலக்கியமாகுமா?. அதுக்கு மேல் அர்த்தம் உள்ளதா? பெண்கள் இலக்கியமாக எழுதும் கருத்து மொழியை ஆண்களும் சொல்லமுடியும். பல பெண்கள் சொல்லும் கவிதைகள் கதைகளும் அப்படித்தான். ஆனால் படைக்கப்பட்ட இலக்கியமே பெண்மைக்கு மட்டும் உரியதாகவும்,அதை ஆணால் நினைத்தும் பார்க்கமுடியாததாக இருக்கும்போது மட்டுமே அது பெண்ணிலக்கியமாகிறது. அங்கே உடலில் -அதனது உணர்வுகள் எனும்போது […]

ஜெயமோகனின் புறப்பாடு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

    ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகத்தில் மிகவும் முக்கியமான எழுத்தாளர். நாவல் சிறுகதை சமூகவியல் முதலான பல துறைகளில் திறமையுள்ளவர். அப்படிப்பட்டவரது இளம் வாழ்க்கை பற்றிய குறிப்பு புறப்பாடு. அவரது வீட்டில் வைத்து அந்த நூல் எனக்குத் தரப்பட்டது. ஏற்கனவே ஒரு சில அத்தியாயங்களை அவரது இணையத்தில் வாசித்து இருந்தேன்.  சில மாதங்களுக்கு முன்பு முழுதாக வாசித்து விட்டு மீண்டும ஒருமுறை வாசிக்க வேண்டும் என்ற எணணத்துடன் கட்டிலருகே வைத்தேன். பல மாதங்கள் கடந்த பின் […]