காலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த காஞ்சனாவுக்கு யாரோ வீட்டின் கதவை பலமாகத் தட்டிய சத்தம் கேட்டது. சமயலறையில் நின்றவள் வெளியே வந்தாள். பிள்ளைகள் இருவருக்கும் உணவு கொடுத்து மூத்தவளை பாடசாலைக்கும், இளையவளை பல்கலைக்கழகத்திற்கும் சில நிமிடங்கள் முன்பாகத்தான் அனுப்பியிருந்தாள். காலை எட்டரைமணிக்கு முன்பாக அதை செய்தால்தான் அவள் தயாராகி தனது வேலைக்குப் போகமுடியும். மருத்துவராக தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் அவசரம் அவளைப் பரபரப்பில் தள்ளியது.. இந்த நேரத்தில் யார் தட்டுகிறார்கள்? செஞ்சிலுவைக்காரரோ இல்லை வேதாகம […]
நடேசன் உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்;பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும். எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய மயானம் இருக்கிறது. அது நமது ஊர் மயானம் போல் அல்ல யாழ்ப்பாணத்து கோம்பயன்மணல் மாதிரியாக நாலு ஆலமரங்கள் […]