– நாகரத்தினம் கிருஷ்ணா அம்பை சிறுகதைகளைப் பிரெஞ்சு மொழிபெயர்பாளர் டொமினிக் வித்தாலியொ என்ற பெண்மணியுடன் இணைந்து மொழி பெயர்த்த அனுபவம் காலச்சுவடு பதிப்பகத்தால் நிகழ்ந்தது. ஒரு பக்கம் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட, பல இந்திய படைப்புகளை (குறிப்பாக மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும்) மொழிபெரத்திருந்த பிரெஞ்சுப் பெண்மணி; இன்னொருபக்கம் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட, பிரெஞ்சு மொழியிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்திருக்கும் தமிழன். மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொண்டது அம்பை சிறுகதைகள். ஒரு படைப்பாளியுமாகவும் இருப்பதால், அம்பை சிறுகதைகளை நன்கு உள்வாங்கிக்கொண்டு, மொழிபெயர்ப்புக்கென்று வகுத்துக்கொண்ட […]
-நாகரத்தினம் கிருஷ்ணா Straskrishna@gmail.com அஹமது மெராபத்தைத் தெரியுமா? என்ற கேள்வியைக் கட்டுரையாளர் யாரிடம் கேட்டிருப்பார் என்று தெரியவில்லை. அவரைக் (அஹமது மெராபத்தைக்) கொன்றவர்களிடம் கட்டுரையாளர் கேட்டிருக்கமாட்டாரென நம்பலாம். பிரெஞ்சு அரசாங்கத்திடமும் அல்லது பிரெஞ்சு மக்களிடமுமென்றால் (இஸ்லாமியர்களும் அதில் அடக்கம்.) அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவரோடு பத்திரிகை அலுவலகத் தாக்குதலில் இறந்த மற்றொரு காவல்துறை அதிகாரி பிரான்க் பிரன்சொலாரொ (Franck Brinsolaro). இவர்கள் இருவரையும் சேர்த்து பத்திரிகை அலுவலகத்தில் கொல்லப்பட்டவர்கள் பன்னிரண்டுபேர். இது தவிர மருத்துவமணையில் உயிருக்குப் […]
பிரான்சில் என்ன நடக்கிறது? அ. வொல்த்தேருக்கு நேர்ந்த கதி: நமக்கு நகைச்சுவை என்ற பெயரில் குறளை விருப்பம்போல திருத்திச் சொல்வதைத் திரைப்படங்களில் கேட்டுப் பழகிவிட்டது. அதையே சகித்துக்கொள்ளலாம் என்பதுபோல வேடிக்கையொன்று பிரான்சு நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. Ferney- Voltaire என்பது பிரான்சு நாட்டில் உள்ள ஒரு கொம்யூன், அதாவது பேரூராட்சி. பிரான்சு -சுவிஸ் எல்லையிலிருக்கிற ஊர். சுவிஸ் நாட்டிற்கு குறிப்பாக ஜெனீவாவிற்கு வெகு அருகிலிருந்ததாலும் அப்போதைய அரசியல் சூழலாலும் இவ்வூரை வசிப்பதற்கென வொல்த்தேர் […]
1. படைப்பாளி இறப்பதில்லை : யு.ஆர் அனந்தமூர்த்தி நீட்சே கடவுள் இறந்துவிட்டார் என்றார், பெரியார் கடவுள் இல்லை என்றார். அறிவென்பது முரண்படுவதற்கு. அவ்வகையில் முரண்பட்டார்கள். இவற்றையெல்லாம் அப்படியே ஏற்றாகவேண்டிய கட்டாயம் நமக்கில்லை. நைவேத்தியம் செய்பவன் வேண்டுமானால் “கடவுள் இறந்துவிட்டார்”, “கடவுள் இல்லை” என்று சொன்னால் ஒரு வேளை நம்புவான். ஆடு, கோழி அறுக்கிறவனிடம் போய்ச் சொன்னால், “ஏதோ அய்யனாரப்பன் பேரைசொல்லி வாய்க்கு ருசியா சப்பிடலாம்னு நெனைச்சா அதுக்கும் வேட்டு வைக்கிற, போய்யா போய் வேலையை பாரு” என்பான். […]
நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்சில் என்ன நடக்கிறது? காதலுக்குப் பூட்டு: எல்லா நாடுகளிலும் ஏதோவோரு நம்பிக்கை இருக்கவே செய்கிறது. கன்னிப்பெண்கள் விளக்கேற்றுவதும், பிள்ளைவரம் கேட்டுத் தொட்டிற் கட்டுவதும், அதிர்ஷ்ட்டம் வேண்டி நீர் ஊற்றுகளில் நாணயம் எறிவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாரீஸ் நகருக்குள்ள பிரச்சினை காதல் நிறைவேற காதல்ஜோடிகள் பாரீஸ் நகரத்தின் சிலபாலங்களில் தடுப்புக் கம்பிகளில் போடப்படும் பூட்டுகள். தொடக்கத்தில் அழகாகத்தான் இருந்தது, வருடந்தோறும் பூட்டுகளை அகற்றும் செலவு அதிகரித்துவருவதால், இன்று தொல்லைதரும் பிரச்சினையாக முடிந்திருக்கிறது. குறிப்பாக le […]
1. பிரான்சில் என்ன நடக்கிறது? : கச்சைக் கட்டி நிற்கிறார்கள் ‘மார்புக் கச்சை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு பிரெஞ்சில் ‘soutien -Gorge’. தமிழைப்போலவே இருசொற்கள் கொண்டு உருவான சொல். Soutien என்பதற்கு support என்றும் Gorge என்பதற்கு bosom என்றும் பொருள். தற்போது இச் சொல்லைப் பன்மையில் எப்படி எழுதலாம் என்பதில் பிரெஞ்சு அகராதிகளுக்குள் பெரும் பிரச்சினை. கச்சை என்ற பொருள் குறித்த வார்த்தையில் இணைந்துள்ள மார்பு என்ற சொல்குறித்து பிரச்சினை உருவாகியுள்ளது. வருடா […]
நாகரத்தினம் கிருஷ்ணா உண்டாலம்ம இவ்வுலகம்: செல்வேந்திரா அச்செய்தியை வெகு சாதாரணமாகக் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. செல்வேந்திராவைப் பார்க்கிறபோதெல்லாம் கீழ்க்கண்ட பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன: இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன்; வந்தனம்; அடி பேரருள் அன்னாய்! வைரவீ! திறர் சாமுண்டி! காளி! சிந்தனை தெளிந்தேனிதை! யுந்தன் திருவருட்கென அர்ப்பனம் செய்தேன்! நண்பர் செல்வேந்திராவிற்கு எல்லோரும் வைத்துள்ள பெயர் ‘ஆசை’ நானும் ஆசை என்ற பெயரில்தான் அவரை அறிவேன். […]
நாகரத்தினம் கிருஷ்ணா மே -10 -2014 இத்தொடரின் இறுதிப் பாகத்திற்கு மட்டுமல்ல, கொடுத்துள்ள தலைப்பிற்குள்ளும் இப்போதுதான் வந்திருக்கிறேன். படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு பிராகு என்றதும் ஞாபகத்திற்கு வந்திருக்கவேண்டிய பெயர்கள் மிலென் குந்தெரா, மற்றொன்று பிரான்ஸ் காஃப்கா. அப்படி வந்ததா என்றால் இல்லை. வரவில்லை. இருந்தும் காஃப்காவை (?) சந்தித்தேன். ஆமாம் சந்தித்தேன். அவரோடு உரையாடினேன். இக்கணம்வரை அப்படியொரு வாய்ப்பு எனக்கு எப்படி அமைந்தது? ஏன் அமைந்தது? எனப்பலமுறை திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். செக் நாட்டிற்கு […]
மே 9 -2014 பொதுவாகவே புதிய மனிதர்களின் சந்திப்புகளும் சரி, புதிய இடங்களின் தரிசனங்களும் சரி, அல்பெர் கமுய் கூறுவதைப்போல எதிர்பார்ப்பிற்கும் கிடைக்கும் அனுபவத்திற்குமான இடைநிலையாகவோ அல்லது பிராய்டு வகைபடுத்துகிற திருப்தி-அதிருப்தி இரண்டுக்குமான நனவிலி மனநிலையாகவோ இருப்பதால் இதுபோன்ற பயணங்களில் ஓர் ஆர்வத்துடனேயே கலந்துகொள்கிறோம். தவிர நண்பர்கள் அல்லது நமது மக்களுடன் செய்கிற குறுங்கால பயண அனுபவங்கள் பிராய்டுகூறுகிற அதிருப்தி விழுக்காடுகளைக் குறைக்க உதவுகின்றன என்பது சொந்த அனுபவம். தங்கியிருந்த ஓட்டலில் காலை உணவுக்கு மட்டும் ஏற்பாடு […]
நாகரத்தினம் கிருஷ்ணா மே 8 -2014 -தொடர்ச்சி: ‘Staromestiske Namasti’ ஸ்லாவ் மொழிவருமெனில் உச்சரித்து பாருங்கள். கடந்த வாரத்தில் வென்ஸ்லஸ் சதுக்கம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா (Wenceslas Square) அதுவும் இப்படி “nநூme(stங்” என்று தான் முடிந்தது. எனவே ஸ்லாவ் மொழியில் ‘nநூme(stங்’ என்றால் சதுக்கம் என வைத்துக்கொள்ளுங்கள். ஸ்லாவ் மொழி பேசுபவர்களை முதன்முதலாக பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களில்தான் கண்டிருக்கிறேன். பனிப்போர் காலங்களில் ஸ்லாவ் மொழி பேசுபவர்கள் ஒன்றிரண்டு பேராவது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தலைகாட்டுவார்கள். ரோஜர் […]