-நாகரத்தினம் கிருஷ்ணா பாரீஸ் புறநகர் பகுதியிலுள்ள ‘வொரெயால்’ தமிழ்க் கலாசார சங்கம் என்றதொரு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த செக் (Czech) நாட்டு தலை நகரம் ‘பிராகு'(Prague)விற்கு மூன்று நாட்கள் பயணமாக சென்றுவந்தேன். பிரான்சுநாட்டில், எல்லா நாடுகளையும் போல தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் சங்கங்கள் வைத்துள்ளனர். உழைப்பு, ஊதியம், பிள்ளைகள் கல்வி என தாயகத் தமிழர்களைப்போலவே வாழ்க்கையை செலுத்துகிற அயலகத் தமிழர்களுக்கு இடைக்கிடை உற்சாகமூட்ட பண்டிகை தினங்களைக் கொண்டாடுதல், உள்ளூர் நகர நிர்வாகங்களின் உதவியுடன் வார இறுதியில் தமிழ்க் […]
[கடந்த பிப்ரவரி மாதம் (16) விருத்தாசலத்தில் நடைபெற்ற திரு வே.சபாநாயகத்தின் 80வது அகவை விழாவை முன்னிட்டு வெளிவந்த மலருக்கு எழுதிய கட்டுரை. கவிஞர் பழமலய் முன்னின்று நடத்திய விழாவில் திரு.வே.சா.வின் நண்பர்களும், மாணாக்கர்களும், எழுத்தாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்] “கணினி பயன்பாட்டிலொன்று வணக்கத்திற்குரிய திரு வே.சபாநாயகம் அவர்களை எனக்குத் தெரியவந்தது. இக்கட்டுரையை எழுதும் தருணம் வரை அவரை பார்த்ததில்லை ஆனால் பருவப் பெண்கள்(அந்தநாள்) வீட்டில் கதவை அடைத்துக்கொண்டு தொடர்கதை வாசித்த ஆர்வத்துடன் அவரது எழுத்துக்களை நிறைய வாசித்திருக்கிறேன். […]
கடந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதமாக இருக்கும், நண்பர் மாலனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கோவையில் நடைபெறவுள்ள ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டில் கலந்து கொள்ள இயலுமா எனக்கேட்டிருந்தார். என்ன பதில் சொல்வேன் எதிர்பார்ப்பீர்களோ அப்பதிலை மிக்க மகிழ்ச்சியுடன் எழுதினேன். கரும்பு தின்ன கூலியா என்பார்கள். ‘கோவை தமிழ் பண்பாட்டுமையம்’ கருப்புத்தோட்டத்தையும் கொடுத்து கருவூலத்தையும் திறந்துவைத்திருந்தார்கள். உயிர் உள்ளவரை மறக்கவொண்ணாத கனிவான விருந்தோம்பல் கோவ தமிழ்பண்பாட்டு மையம் (http://www.centerfortamilculture.com): கோவையில் தமிழ்ப்பண்பாட்டு மையம் […]
1. பிரான்சில் என்ன நடக்கிறது பிரெஞ்சு அரசாங்கத்திற்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடி. வருவாயை அதிகரிக்கவும், வீண் செலவுகளைக் குறைக்கவும் கணக்கியல் துறையும், ஐரோப்பிய நிதி நிர்வாகத் துறையும், கண்டிப்பான சில வழிமுறைகளைப் பிரெஞ்சு அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கமும் நிதி வருவாயைப் பெருக்கிக்கொள்ள சிக்கன நடவடிக்கைகள் மட்டுமே போதாதென்ற நிலையில் நாள்தோறும் புதிய புதிய வரிகளை விதித்துவருகிறார்கள். ஏற்கனவே அன்றாட உபயோகத்துகான மின் சக்தியும், எரிவாயுவும் கடுமையான உயர்வை சந்தித்து உள்ளன. […]
1. பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு பிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும், கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும் ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு தமிழுக்கு […]
மின்னுவதெல்லாம் பெண்ணல்ல அழகில் தேவதை, அஞ்சப்பரையும் முனியாண்டியையும் அசத்தும் சமையற் கைபக்குவம், “களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி, கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே, உடன்போய் வரைதலும் உண்மையான வாழ்க்கைத் துணை – 19 ஆண்டுகால இல்லற வாழ்க்கை -இன்று பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டதென ஒப்பாரிவைக்கிறார் மனிதர் -பெயர் ஜான், பெல்ஜியம் நாட்டின் 64 வயது குடிமகன். இந்திய உபகண்டத்தில் ‘சர்தார்ஜி ஜோக்குகள்’ எத்தனை பிரசித்தமோ அத்தனை பிரசித்தம், ஐரோப்பியர்களிடையே – குறிப்பாக பிரான்சுநாட்டில் […]
நட்பு காலத்திற்கேற்ப, வயதொத்து, தேடலுக்கொப்ப, எடுக்கும் நிலைப்பாடு சார்ந்து தோன்றுகிறது மறைகிறது. கோப்பெஞ்சோழன் பிசிராந்தையார், அவ்வை அதியமான் போன்ற நட்புகள் இன்றிருக்க வாய்ப்பில்லை, அப்படியே இருந்ததென்றாலும் அரிதாகவே இருக்கக்கூடும். இளமை காலத்தில் நட்புக்குள்ள வீரியம், வயது கூடுகிறபோது நமத்துப்போகிறது. இளமைக்கு முன்னால் மேடுபள்ளங்கள் இருப்பதில்லை. கல்வியில், பொருளாதாரத்தில் சமுதாயத்தில் தங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யவும் நட்பிற்கு கெதிரான குறுங்கற்களை, சிடுக்குகளை வெகு எளிதாகக் களையவும் துடிப்பான இளம் வயது உதவுகிறது. ஆனால் வயது அதிகரிக்கிறபோது […]
சந்திப்பும் இருநோக்கும்…. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் […]
1. புதுச்சேரி சுதந்திரம் கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன. இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை இந்தியாவில் இணைய 15 ஆண்டுகள் காத்திருந்தன.புதுச்சேரியில் சுதந்திரப்போராட்டமென்பது நமத்துப்போனதொரு (மொ-யன் (Mo-Yan) பட்டாசு. 1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ந்தேதி பிரெஞ்சு அரசாங்கமும் நேரு தலமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் ‘De Jure’ ஒப்பந்தத்தில் கைச்சாற்றிட அதுவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரி, […]
1. Domaine de Courson நீங்கள் இயற்கையை உபாசகராகவோ அல்லது தோட்டக் கலைஞராகவோ இருந்து பாரீஸ¤க்கும் வரநேர்ந்தால், பாரீஸ¤க்கருகில் ‘எஸ்ஸோன்’ (Essonne) என்ற புறநகரிலிருக்கும் தாவரஇயற் பூங்கா ‘Domaine de Courson’ உங்கள் பயணத் திட்டத்தில் இடம்பெறவேண்டும். தோட்டக்கலைஞர்களும், தாவரஇயல் விற்பன்னர்கள் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக தங்கள் கைத்தூரிகைக்கொண்டு விதைத்து, நட்டு, பதியமிட்டு வளர்த்துத் தீட்டிய பாரீஸின் சஞ்சீவி பர்வதம் அது. வேட்டுவப் பெண்களையும், காட்டுமறவர்களையும் எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் பாரதிதாசன் வர்ணிக்கிற அத்தனை காட்சிகளுக்கும் […]