– நாகரத்தினம் கிருஷ்ணா 1. உ.வே.சா “தம்மின் தம்மக்கள் அறிவுடமையை” மருந்தாளுனர் பையன் மருத்துவர்; தாலுக்கா அலுவலக ஊழியர் மகன் மாவட்ட ஆட்சியர்; எனப் பொருள்கொள்ளாமல் இரு வேறு காலத்தைச்சேர்ந்த ஒரு […]
கி.பி. 2050 பவானி 60 – ‘செஞ்சி அழிந்து சென்னை பட்டினம் உருவாயிற்று‘ – அப்படீங்களா? – உன் பேரு என்னன்னு சொன்ன? – பவானி, உங்கள் சினேகிதி ஹரிணியுடைய பெண். – புதுச்சேரின்னு சொன்ன ஞாபகம்? – தற்போதைக்கு புதுச்சேரி. பிரான்சு நாட்டிலிருந்து வந்து மூன்று மாதமாகுது நல்ல கோதுமைநிறத்தில் வயதுக்குப்பொருத்தமின்றி மனிதர் ஆரோக்கியமாகவே இருந்தார். கோடைவெயில் நிறத்தில் குர்த்தாவும் பைஜாமாவும், அவர் உயரத்திற்கு நன்றாகவே பொருந்தியது. தலைமயிர் வெள்ளைவெளேர் […]
நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 54. மறுநாள் திங்கட் கிழமை. காலை பத்துமணிக்கு அண்ணாநகர்வரை போகவேண்டியிருந்தது. நான்கு தினங்களுக்குமுன்பு புதுச்சேரி கடற்கரையில் சந்தித்த பிரெஞ்சு இளைஞர் குழு, தொண்டு நிறுவனமொன்றுடன் இணைந்து புதுச்சேரிக்கு மேற்கே ஒருகிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் கட்டித் தரவிருப்பதாக கூறியிருந்தார்கள். காலை எட்டுமணிக்கு எழுந்திருந்தபோது, கௌசல்யா அம்மா தோசைவார்த்துக்கொண்டிருந்தார். பல்துலக்கி குளித்து முடித்து, வழக்கம்போல ஒரு டெனிம், காட்டன் ஷர்ட் என்று தயாராகவும், மேசைக்கு தோசைதட்டு வந்தது. அவசர அவசரமாக தோசை விள்ளல்களை கார சட்டினியுடன் […]
1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் பிரான்சு நாட்டில் கோடைவிடுமுறை என்பது ஜூலை ஆகஸ்டுமாதங்களில் வருகிறது. கல்வி ஸ்தாபனங்கள் மட்டுமல்லாது, தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பலவும் பொதுவாக இக்காலங்களில் மூடப்படுவதுண்டு. அவ்வாறில்லாத நிறுவனங்களின் ஊழியர்கள் விடுப்பெடுப்பதும் இக்காலங்களிலேயே. அரசு அலுவலங்களிற்கூட அதிக எண்ணிக்கையில் விடுப்பெடுப்பதற்கு இக்காலங்களையே தேர்வு செய்கின்றனர். நாட்டின் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கடையை கட்டிவிடும் காரியமும் அரங்கேறும். சோர்வைத் தொலைத்து புத்துணர்வுடன் இயங்கும் பிரான்சைக் காண்பதற்கு செப்டம்பர் […]
நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 53. மீண்டும் மனம் தற்செயல் நிகழ்வு பற்றிய விவாதத்தில் இறங்கியது. செஞ்சியிலிருந்து புதுச்சேரி திரும்பும்போது எரிக் நோவாவிடமிருந்து பெற்ற தகவல்களும், நேற்று எனக்கேற்பட்டிருந்த அனுபவமும், திசைதெரியாமல் அலைக்கழித்தது. பெரியவரை பார்ப்பது, அவரது செஞ்சி நாவல் பற்றிய எழும் ஐயங்களை கேட்டு விளக்கம் பெறுவது, நாவல் பதிப்புச் சம்பந்தமான தகவல்களைத் தெரிவித்துவிட்டு இரவு புதுச்சேரி திரும்புவதென்பது எனது திட்டங்கள். என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட சாமிநாதனும், அவன் மாயமாய் […]
நாகரத்தினம் கிருஷ்ணா 51. மயக்கம் தெளிந்திருந்தேன். பறவைகளும் விலங்குகளும் கூடி உரையாடுவதுபோல குரல்கள் தெளிவின்றி கேட்டன. வீட்டின் முன்வாசலிலிருந்த பூவரசமரங்களிலும், இடது புறம் களைத்து காலை பரப்பியபடி வாயில் நுரையொழுக கண் துஞ்சும் எருதுகளிடமும் வெக்கையின் பாரிய வீச்சு. விநோத கயிறுகளால் இழுப்பட்ட சர்க்கஸ் கூடாரம்போல வீட்டு வாசலை வெயில் மூடியிருந்தது. என்னைக் கண்டதும் அலை இயக்கம் நின்ற கடல்போல அங்கே மௌனம். விழல் வேய்ந்து கீழே சிமெண்ட் மெழுகிய அக்கொட்டகை […]
– நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 49. நீண்ட விஸில் சப்தம். பேருந்து குலுங்கி நின்றது. ஒரு பெருங்கூட்டமே இறங்குவதுபோலிருந்தது. இரண்டு நடுத்தர வயது பெண்மணிகளுடன் ஓர் இளைஞனும், கைக்குழந்தையுடன் பெண்ணொருத்தியும் இறங்கினார்கள். அவர்களைத்தொடர்ந்து இறங்கினேன். வேகமாக வந்த சைக்கிளொன்று என்மீது இலேசாக இடித்து நின்றது. நிலை தடுமாறி விழ இருந்தவள் சமாளித்து நின்றேன். சைக்கிளில் பத்துபன்னிரண்டு வயது சிறுவன். சட்டென்று பிரேக் அடித்து பாரில் இறங்கி காலை ஊன்றினான். ‘கோவிச்சுக்காதீங்க அக்கா, பெல்லடித்துக்கொண்டுதான் வந்தேன். நீங்க கவனிக்கலை’, […]
1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்: Ponts des arts பாரீஸ் நகரை அறிந்தவர்கள் சேன் நதியைப்போலவே அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களும் புகழ்பெற்றவை என்பதை அறிவார்கள். குறிப்பாக பாரீஸ் நகரின் இதயப்பகுதியில் சேன்நதியைக்கடக்க உபயோகத்திலிருக்கும் பாலங்கள் அனைத்துமே பாரம்பரியச் சின்னங்கள் தொகுப்புக்குள் வருபவை. Ponts des arts என்பதும் அவற்றில் ஒன்று.. பாரீஸ் நகரத்தின் ஆறாவது வட்டத்தில் (arrondissement) இப்பாலம் உள்ளது. பாலத்தின் பிறப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம். இக்கறையிலிருந்து அக்றைக்குச்செல்ல இரும்புக் கிராதிகளைக்கொண்டு நடைபாதை போன்றதொரு […]
– நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 47. வேணுகோபாலை கைத்தொலைபேசியில் பிடித்தேன். நாளை செஞ்சி வருகிறேன் வீட்டில் இருப்பாயா என்றேன். சென்னைக்கு போக வேண்டியிருப்பதாகவும் மாலை நான்கு மணிக்குத் திரும்பிவிடுவதாகவும் உறுதியளித்தான். படித்துமுடித்த செஞ்சி நாவலைக்குறித்து சில சந்தேகங்கள் இருந்தன. உண்மையின் விழுக்காடுகள் எவ்வளவு என தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. சடகோபன் பிள்ளையுடன் விவாதிக்கவேண்டும். முடிந்தால், செஞ்சியின் காவலரண்கள் குறித்து ஆய்வுசெய்த ழான் தெலொஷையும் பிள்ளையையும் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும். கையெழுத்துப்பிரதியை நூல்வடிவில் கொண்டுவரவேண்டுமென்ற […]
1. வாசிப்பு எவரெஸ்டுகள்’ The millions இணைய இதழ் ‘வாசிப்பு எவரெஸ்டுகள்’ என்ற விருதுக்கு தகுதியானவையென 10 இலக்கிய படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறது. உலகில் இதுவரை எழுதிவெளிவந்த படைப்புகளில் கடுமையானதாகவும், எரிச்சலூட்டும்வகையிலும் இருப்பவையென தேர்வு செய்ததோடு அப்படியொரு நிலைக்கு அப்படைப்புகள் தள்ளப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது. 1. Nightwood – Djuna Barnes. 2. A tale of a Tub – Jonathan swift 3. The Phenomenology of the sprit -G.F. Hegel 4. to […]