ஹரிணி 46. எரிக் நோவா தெரிவித்திருந்த கதை ஆர்வமூட்டுவதாக இருந்தது. என்ன படித்தாய்? எனக்கேட்டேன். Philology என்று எனக்கு விளங்காத சொல்லைக் கூறினான். உனக்கு சமூக உளவியல் தெரியுமா என்றேன். மென்றுகொண்டிருந்த ரொட்டி வாயிலிருக்க முகத்தை உயர்த்தி கீழிறக்கினான். அசைவற்றிருந்த வாயில் ரொட்டியையும் உமிழ்நீரையும் சேர்ந்தார்போல பார்த்தபிறகு தொடர்ந்து சாப்பிட எனக்கு ஒப்பவில்லை. தயவுசெய்து வாயிலிருப்பதை விழுங்கித்தொலை, நான் சொல்லவந்ததை முடிக்கிறேன் என்றேன். அவசரமாக விழுங்கினான். – சமூக உளவியல் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் […]
எரிக் நோவா 44. வெள்ளித்தகடுபோல பிரகாசித்த நீரில் தூரத்தில் இரண்டொரு படகுகள் தெரிந்தன. அவை நிற்கின்றனவா போகின்றனவாவென்று சொல்வது கடினம். ஒரு படகுக்கு மேலே கூட்டமாகக் சாம்பல்நிறக் கடற் காகங்கள். அவை எழுப்புபிய ஒலிகள் காற்றில் கலந்திருந்தன. பறவைகளில் ஒன்றிரண்டு படகைத் தொடுவதுபோல சறுக்கிப் பாய்ந்தன. பின்னர் விரட்டப் பட்டவைபோல மேலே ஏறவும் செய்தன. எந்திரப்படகொன்று வடக்கிலிருந்து தெற்காக கரைக்கு வெகு அருகில் கடந்துபோனது. அதிலிருந்த ஒருவன் கைகளை அசைத்தான். பதிலுக்கு நானும் கை அசைக்கலாமாவென்று உயர்த்தியபொழுது […]
மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது. சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் புதிய சிறுகதை தொகுப்புகள் வருவதில்லை அல்லது கவனம் பெறும் அளவிற்கு இல்லை. வாலிப வயதும், மனதிற்கொஞ்சம் காதலும், தனக்குக் மொழி கொஞ்சம் வளைந்து கொடுக்கிறதென்று கண்மூடித்தனமாக நம்பவும் செய்தால் கவிதை எழுத ஆரம்பித்துவிடலாமென நினைத்து எழுதுபவர்கள் பலரும் தாங்கள் அங்கே இங்கேயென்று நகலெடுத்த எழுத்து உதவத் தயங்குகிறபோது ஓடிவிடுவார்கள். […]
42. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய நகர சாம்ராச்சியத்தை உலுக்கிய உள்நாட்டு பிரச்சினை முடிவுக்கு வந்ததைப்போல தெரிகிறது. கிருஷ்ணபுர படை எறும்பு கூட்டத்தில் தீக்கங்கு விழுந்ததுபோல சிதறி ஓடுகின்றது. ஆளுயர புரவியொன்றில் இரகுநாதநாய்க்கர் கம்பீரமாக அமர்ந்திருந்தார். ஆழம்குறைந்திருக்குமென நம்பப்பட்ட கொள்ளிட நதியின் நீர்ப்பரப்பைத் தேடி நடந்தும் நீந்தியும் அவரது படைகள் பின் தொடர்வதையும் அவதானித்தாள். குதிரைகளின் அடிவயிற்றை எந்தி வெருட்ட அவை நுரையொழுக முன்கால்களை வதைத்துக்கொண்டு பரபரப்பதும்; ஆற்றை நெருங்க யோசித்து துதிக்கையை உயர்த்தி பின்னர் பெரும் […]
40. மகன் சிக்கம நாயக்கனா, கிருஷ்ணப்ப நாயக்கரா யாரை குற்றம் சொல்வது, ஏதோவொரு அமானுஷ்ய சக்தி ஜீவனுள்ள பொம்மைகளைக்கொண்டு காட்சிகளாக நகர்த்துகிறது. கடந்த சில தினங்களாக தெற்கே யுத்தமென்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் கொலைகளுக்கும், உயிர்ப்பலிகளுக்கும், காட்டு விலங்குகளைப்போல மனிதர்கள் ஒருவரை ஒருவர் மூர்க்கமாக வெட்டிமடிவதற்கும் ராஜகிரிபோல, தில்லை கூத்தபிரான்போல, காவற்காட்டு மரங்களைப்போல இவளுமொரு ஊமை சாட்சி. பசியால் வாடும் வீரர்கள் மீது கடும் வெயிலும் தாக்குதலை நடத்துகிறது. வீரர்களில் பலர் கூர் மழுங்கிய வேல்களை ஏந்தியிருந்தனர். உடைந்த […]
– நாகரத்தினம் கிருஷ்ணா 39. பிள்ளை மனம் குழப்பத்தில் இருந்தது. கிருஷ்ணபுரத்தில் நாளைய தினம் எதுவும் நடக்கலாமென்ற நிலை. இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயநகரத்தில் ஏற்பட்டிருருந்த தலைகீழ் மாற்றம், பேரரசின் கீழிருந்த சிற்றசர்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. விஜயநகர சாம்ராச்சியத்தை உரிமைகோரி, இரு அணிகள் மோதிக்கொள்ளும் நிலமை உருவாகியிருந்தது. மன்னர் வெங்கடபதியாருக்குப்பின் விஜய நகர சாம்ராச்சியம் வேறொருவர் கைக்குப் போகக் கூடாதென்றெண்ணி அவருடைய மூத்ததாரமும் கோபுரி வம்சாவளியைச் சேர்ந்தவளுமான வையாம்பிகாவும் அவள் சகோதரர் ஜெகராயரும் எங்கோ பிறந்த சிக்கமராயனை […]
38. குத்துக்காலிட்டு தெருவாசலில் உட்கார்ந்திருந்த ஜெகதாம்பாள் வீட்டெதிரே கூண்டு வண்டி நிற்பதைக்கண்டு எழுந்தாள். பூட்டியிருந்த எருதுகள் சிறுநீர்கழிக்கும் சத்தம் கேட்டது. கிழக்கில் சூரியன் எதிர்வீட்டு மோட்டுவளையை அவதானித்தபடி இருந்ததால் வந்த வண்டியையும் அதிலிருந்து யார் இறங்குகிறார்களென்பதும் தெளிவாயில்லை. தரையில் ஊன்றிருந்த கையைஎடுத்து புருவத்திற்கு மேலே மடக்கிப்பிடித்து கண்களை குறுக்கிப்பார்த்தும் பிரயோசனமில்லை. – யாரு? குரலை நீட்டிக் கேட்டாள். வண்டியின் பின்புறம், ஏறுபலகையில் கால்வைத்து செல்வக்களையுடன் யாரோ இறங்குகிறார்கள் என்பதை மாத்திரம் விளங்கிக்கொண்டாள். ஒரு வேளை தண்டல்காரனாக இருக்குமோ. […]
38. குத்துக்காலிட்டு தெருவாசலில் உட்கார்ந்திருந்த ஜெகதாம்பாள் வீட்டெதிரே கூண்டு வண்டி நிற்பதைக்கண்டு எழுந்தாள். பூட்டியிருந்த எருதுகள் சிறுநீர்கழிக்கும் சத்தம் கேட்டது. கிழக்கில் சூரியன் எதிர்வீட்டு மோட்டுவளையை அவதானித்தபடி இருந்ததால் வந்த வண்டியையும் அதிலிருந்து யார் இறங்குகிறார்களென்பதும் தெளிவாயில்லை. தரையில் ஊன்றிருந்த கையைஎடுத்து புருவத்திற்கு மேலே மடக்கிப்பிடித்து கண்களை குறுக்கிப்பார்த்தும் பிரயோசனமில்லை. – யாரு? குரலை நீட்டிக் கேட்டாள். வண்டியின் பின்புறம், ஏறுபலகையில் கால்வைத்து செல்வக்களையுடன் யாரோ இறங்குகிறார்கள் என்பதை மாத்திரம் விளங்கிக்கொண்டாள். ஒரு வேளை தண்டல்காரனாக இருக்குமோ. […]
அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் ஏப்ரல் ஒன்றாம் தேதி பிற்பகல் அண்ட்டல்யாவின் பழைய நகரத்தோடு கழிந்தது. ஒரு தேசத்தைப்போலவே ஊர் அல்லது நகரத்திற்கும் நெடிய வரலாறுகளுண்டு. இலக்கியம் போன்று பாடல் போன்று இசைபோன்று கடந்த காலத்திய நீங்காத நினைவுகளை மீட்கவென்று ஊரின் ஒரு தோப்போ, குளமோ நகரத்தின் கோபுரமோ, கோட்டை மதிற்சுவரோ காலக் கறையானுக்கு இரையாகமல் நிற்கலாம். இம்மகிழ்ச்சியும், களிப்பும் அந்தி நேரக் காற்றுபோல மனதோடு சலசலப்பவை கல்வெட்டுபோல காலத்தை எதிர்கொள்ளும் எச்சங்கள் அவை வரலாற்றின் […]
அன்புடையீர் தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்தவேண்டுமென்கிற முனைப்பில் சில எளிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். மேற்குலகிற்கும் பிரெஞ்சு சூழலுக்கும் பொருந்தக்கூடிய ஒரு சிறுகதையைத் தேர்வு செய்து பிரெஞ்சில் மொழி பெயர்த்து வெளியிட திட்டம். இதுவரை பாவண்ணன், பிரபஞ்சன் சிறுகதைகள் வந்துள்ளன. விரைவில். கி.ரா சிறுகதையொன்று வெளிவரவிருக்கிறது. நமது மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தனையும் மறக்கவியலாது. அவருடைய சிறுகதையொன்றும் விரைவில் இடம்பெறும். அன்னாரின் பாரீஸ¤க்குப்போ நாவல் குறித்து நண்பர் வி.எஸ் நாயக்கரின் ஆழமான விமர்சனம் அண்மையில் வெளிவந்து பல பிரெஞ்சு நண்பர்களின் பாராட்டுதலையும் […]