நீச்சல்காரன் அன்று காலை உணவு முடிந்தவுடண்டு காலை மடித்தமர்ந்துகொண்டு பல்குத்திக் கொண்டிருந்த சக சிறைவாசிகளிடம் தனது சோகக்கதையை சுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் தோசைமணி. அதுவொரு தேர்தல் காலம் தெருவிற்குத் தெரு பிரச்சாரங்கள் சூடு பிடிக்க, தனது துண்டு பீடியில் சூடுவைத்துக் கொண்டு களத்தில் இறங்கினார் தலைவர் சுருளி. சுருளி வாழ்க சுருளி வாழ்க என்று கத்திக் கொண்டு தலைவருடன் வேட்புமணு தாக்கல் செய்யப்போனவர்களில் ஒருவர்தான் தோசைமணி. வேட்புமணுவைத் தாக்கல் செய்தவுடன் பிரச்சாரப் பொறுப்பை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்தார் சுருளி. […]
நீச்சல்காரன் எரிகிற கொள்ளியில் சுள்ளிகள் எடுத்து எரிக்க முனைந்தால் பொசுங்கியது ஆசை இது தான் வெற்றியென்று முடித்துக் கொள்ள முடியாமல் வெற்றிகரமாக தோல்வி கொள்கிறேன் கொதிக்கும் நீரில் குதித்தாடும் குமிழ்கள் வாய்பிளந்து மரணத்தை குடிக்கும் கற்பூரத்தை சர்க்கரை என நிருபிக்க சொன்ன பொய்கள்தான் அதை காற்றிலே கரைத்துவிட்டது புதிராக இருந்தாலும் ஒரு திசை போதும் மற்றவற்றை காட்டிக்கொடுக்க திறந்திருந்த ஒன்றை திறந்து வைத்தவர் யாரென்கிறது ஆற்றுப் பாலத்து கல்வெட்டு ஊரெல்லாம் தூங்கிக் கொண்டிருக்க மனித இனத்தையே உலுப்பியது […]