ஒவ்வொருநாளும் பல முகங்களை கையிலேந்தி அலைகிறேன் யாருக்கும் தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து மீண்டும் அணிந்துகொள்கிறேன். ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு முகம் மாட்டி அலைகிறேன். எந்த முகம் என்முகம் என்பது யாருக்கும் தெரியாமல் சமமாக பாவித்து வருகிறேன் ஒருவருக்கு தெரிந்த முகம் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பு கொடுக்காமல் கையிலிருந்து மாட்டிக் கொள்கிறேன் சில துளி வினாடிகளில் நல்லவன் கெட்டவன் வஞ்சகன் சாது அப்பாவி வெகுளி என ஒவ்வொருமுகங்களுக்கும் பெயர் வைத்து தினமும் அதற்கு உணவூட்டி வளர்த்து வருகிறேன் ஒரு […]
பிடிக்காத வாத்தியாரின் பாட நேரங்களில் கூர்ந்து கவனிக்கிறார்கள் அடுத்த பாட வாத்தியாரை வரவேற்க போகும் மணியோசையை அந்த நாளின் இறுதி பாடத்தின் கடைசி பத்து நிமிடங்களில் போர்கால அடிப்படையில் ஆயத்தமாகிறார்கள் விடுப்பு மணியின் மூன்றாவது மணி யாரும் கேட்காமல் ஆனாதையாய் வகுப்பறையில் உட்கார்ந்தபடியே ஒளிந்துக் கொள்கிறார்கள் வீட்டுப்பாடம் செய்யாத நாட்களில் கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே கத்துக் கொடுத்தார் ஆசிரியர் முதன் முறையாக வீட்டுப்பாடம் முடித்தும் படித்தும் வந்தவனிடம் அவர் ஒன்றும் கேட்கவில்லை வாத்தியார் அடிக்கும்போது […]
எங்கோ பறந்து வந்து இளைப்பாறி எச்சமிட்டபோதும் அதே புன்னகையுடன் இருக்கிறார் காந்தி தடி இருந்தும் அந்த பேருந்தில் பத்து பதினைந்து காந்தி சிலையாவது பயணித்து இருக்க வேண்டும் நிறுத்தம் வந்ததும் ‘காந்தி சிலை இறங்கு’ என இரு முறை கூவும் நடத்துனர் உச்சி வெயிலிலும் தன் கைத்தடி நிழலில் அரைமணி நேரமாய் ஏதோ படித்து கொண்டிருக்கிறான் இளைஞன் ஒருவன் மெதுவாய் அவன்மேல் காந்தியின் பார்வை பட ஏதோ செய்தி வர அவசர அவசரமாய் புறப்பட்டான் அவன் காதலி […]
ப.பார்த்தசாரதி. துரு பிடித்த ஜாமெட்ரி பாக்ஸ் ஒன்றை பல்லால் கடித்து திறந்த குழந்தை தினமும் அரிசி போட்டாள் என்றாவது ஒரு நாள் மயிலிறகிலிருந்து மயில் வருமென நம்பிக்கையில்.