ப.இரமேஷ் தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம் தொடங்கி இன்று வரை வெளிவந்துள்ள காப்பியங்களில் பாடுபொருள்களும் அவற்றின் வடிவங்களும் பல்வேறு நிலைகளில் மாற்றம் பெற்றாலும், இன்றைய காலகட்டத்தில் தமிழில் காவியங்கள் தோன்றுவது என்பது மிகவும் அருகிப்போன நிலையிலேயே உள்ளது. அதுவும் மரபுக்கவிதையில் காவியம் படைப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. மரபுக்கவிதை எழுதுவோரின் எண்ணிக்கை இன்றைய காலத்தில் பெருமளவு குறைந்துள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் தமிழ்மொழியில் ஆழ்ந்த அறிவும் யாப்பிலக்கணப் புலமையும் மரபுக்கவிதை எழுதுவதற்கு இன்றியமையாதனவாக விளங்குகின்றன. யாப்பிலக்கணப் புலமைப்பெற்ற […]