முனைவர் ப. சரவணன் 1964ஆம் ஆண்டில் ரா. ஆறுமுகம் எழுதிய ‘கவலைக்கு மருந்து’ என்ற நாடகம் சுதேசமித்திரன் இதழில் வெளிவந்துள்ளது. பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றுவோர் அடையும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களையும் அக்காலப் பத்திரிகைத் ‘தர்மத்தை’யும் இந்நாடகம் எடுத்துரைத்துள்ளது. ‘வாடாமல்லி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் தன் சிந்தனைத் திறத்தையும் உதவியாசிரியர் சந்தானத்தின் மூளையுழைப்பையும் அச்சுக்கோர்ப்பாளர் கனகரத்தினத்தின் உடலுழைப்பையும் உறுதுணையாகக்கொண்டு பத்திரிகையை நடத்திவருகின்றார். தன் பத்திரிகை வாசகர் பலரையும் சென்றடையவேண்டும் என்பதற்காகப் பல்வேறு பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் துணிந்துசெய்கின்றார். இயன்றளவு […]