நம் நாட்டில் வாழும் பல்வேறு உயிரினங்களையும் தொடர்புபடுத்தி சொல்லப்படும் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிகிறது இந்த நூல். பறவைகள், விலங்குகள், பூச்சிகள், இரு வாழ்விகள், ஊர்வன, மீன் இனங்கள் பற்றிய பல்வேறு செய்திகளையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது. இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும் பற்று கொண்ட ஒவ்வொருவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம். வன உயிர்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான முறையில் பதில் சொல்லியிருக்கிறார் திரு. முகமது அலி அவர்கள். மூட நம்பிக்கைகளை பற்றி எழுதும் போது […]
“” என்ற நூலை வாசித்து முடிக்கும் போது, எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உலகின் மிகப் பெரிய தரை வாழ் விலங்காக விளங்கும் யானைகள் எப்படி அழிவை சந்திக்கின்றன என்னும் பேருண்மை நம் முகத்தில் அறைகிறது. நம் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் யானைகள் பிரிக்க முடியாதவை. ஆனால் அவற்றின் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் இந்தயாவில் லட்சக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஆப்ரிக்க யானைகளும் லட்சகணக்கில் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. […]
அழிந்து வரும் இயற்கையின் மீதான தன்னுடைய வருத்தத்தை “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” என்னும் நூலில் கனத்த இதயத்துடன் பதிவு செய்திருக்கிறார் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள். தமிழ் நாட்டில் காட்டுயிர் பற்றிய ஆர்வம் குறைவாக இருப்பது பற்றியும், காட்டுயிர் தொடர்பான பல சொற்கள் தமிழில் வழக்கொழிந்து வருவது பற்றியும் வேதனை தெரிவிக்கிறார். புலிகள் ஏன் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற இவருடைய விளக்கம் தமிழ் நாடு அரசின் பாட புத்தகங்களில் இருக்க வேண்டும். ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் ஒரு […]
கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின் என்ற நாலடியார் பாட்டில் இருந்து பெறப்பட்ட தலைப்பு “கானுறை வேங்கை”. ஆங்கிலத்தில் கே.உல்லாஸ் காரந்த் எழுதிய “The Way of the Tiger” என்ற இந்த நூலை தமிழில் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். புலிகள் வாழ்க்கை முறை பற்றியும், அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட/எடுக்க வேண்டிய நடை முறைகள் பற்றியும் […]
நாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் – நகரும் கதைகள். ஒரு மரம் எங்கும் நகர்ந்து போவதில்லை. ஆனால் அது வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதை சுற்றிலும் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் அது அப்படியே தான் இருக்கிறது. எத்தனை மனிதர்கள் வந்து போனாலும் அதனிடம் எந்த மாற்றமும் இல்லை. அது தனக்கான வாழ்க்கையை வாழ்கிறது. வாழ்ந்து […]
திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. அவரின் இயல்பான நடையில், காற்றில் அடித்துச் செல்லப்படும் இறகை போல, இந்த நூலை வாசிக்கும்போது பறக்கத் தொடங்கி விடுவீர்கள். பல்வேறு தளங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் மிகச் சிறந்த கதையாக நான் விரும்புவது, “குதிரைகள் பேச மறுக்கின்றன”. பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில், நின்று நிதானிக்க நேரம் இல்லை. ஊரில் இருந்து வரும் அவனின் அப்பா வீட்டில் வளரும் நாயை வெளியே கூட்டிச் […]