Articles Posted by the Author:

 • மச்சம்

    உருது மூலம் – இஸ்மத் சுக்தாய் தமிழில் – ராகவன் தம்பி kpenneswaran@gmail.com “சௌத்ரி… ஓ சௌத்ரி…  கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்” கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார். “உஷ்… உஷ்”… “எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கே?” “எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு” “மரியாதையா சும்மா உட்காரு.  இல்லேன்னா…” “இனிமேலும் என்னால உட்கார முடியாது.  இங்கே பாரு.  உக்காந்து உக்காந்து முதுகெல்லாம் பலகை மாதிரி ஆகிப்போச்சு.  ஹே ராம்” “ச்சு… ச்சு… […]


 • லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)

  லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)

  ஆங்கிலம் வழி தமிழில்: ராகவன் தம்பி பெரும் பாதகமான படுகொலைகளுக்குப் பின் தங்கள் உடல்களிலிருந்து ரத்தக் கறைகளைக் கழுவிய பின் பிரிவினையால் கிழித்துப் போடப்பட்ட இதயங்களின் மீது கவனத்தைத் திருப்பினார்கள் மனிதர்கள். ஒவ்வொரு தெருவிலும் சிறிய சந்து பொந்துகளில் கூட மறுவாழ்வுக் கமிட்டியை அமைத்தார்கள். ஆரம்பத்தில் மிகவும் உற்சாகத்துடன் வேலைகள் நடந்தன. பணி வாய்ப்பு முகாம்கள் வழியாக அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அகதிகளை பண்ணை நிலங்களிலும் வீடுகளிலும் வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். ஆனால் […]


 • கங்குல்(நாவல்)

  கங்குல்(நாவல்)

  07 டிசம்பர் 1052 மிஹிராவாலி அமர்சிங் பேனிவால் இன்று மஹராஜ் என்னை அழைத்து இருக்கிறார். ஏதோ மிகவும் அவசியமாகவும் ரகசியமாகவும் பேச விரும்புகிறார் என்று அந்த ஒற்றன் சொல்லிப் போனான். எப்போதும் என்னிடம் செய்திகளை சுமந்து வரும் ஒற்றன் இல்லை இவன். மஹராஜ் முன்பு என்னிடம் எப்போதும் வழக்கமாக அனுப்பி வைக்கும் ஒற்றன் என்னுடைய தூரத்து உறவினன். அவனுடைய தகப்பனை எனக்கு நன்றாகத் தெரியும். அவனும் தன் தகப்பனைப் போலவே சற்று திக்கித் திக்கிப் பேசுவான். இந்த […]


 • மணமான அந்தப் பெண்களின் பெயரில்…

    உருது மூலம் – இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி மாலை நான்கு அல்லது நாலரை மணி இருக்கலாம். வாசலில் அழைப்பு மணி அலறியது.  வேலைக்காரன் ஓடிச்சென்று கதவைத் திறந்தவன் கலவரமான முகத்துடன் ஓடிவந்தான். “யார் அது?” “போலீஸ்”.  இந்தத் தெருவில் ஏதாவது ஒரு வீட்டில் களவு போனால் இங்குள்ள எல்லா வீடுகளின்  வேலைக்காரர்களிடம் முதலில் விசாரணை நடக்கும். “போலீஸ்?” என்று எரிச்சலுடன் கேட்டுக் கொண்டே பரபரப்புடன் எழுந்தார்  ஷாஹித். “ஆமாம் […]


 • நினைவு

  மராத்தி மூலம்- சதீஷ் அலேக்கர் ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி   திரை விலகும் போது மேடையில் அடர்த்தியான இருள்.    மெல்ல ஒளிபடர்ந்து மேடையில் இருப்பவை மங்கலாகக் காட்சிக்குக் கிடைக்கின்றன.  மேடையின் ஒருபுறம் உயர்ந்த சாய்மானம் கொண்ட சிம்மாசனம் போன்ற இரு நாற்காலிகள் இருக்கின்றன.  இந்த நாற்காலிகளிலும் ஒரு ஆணும் ஒரு பெண்மணியும்  ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து இருக்கின்றனர்.  பெண்மணிக்கு   35 வயது இருக்கும். ஆணுக்கு சுமார் 40 வயது இருக்கலாம். இரு […]


 • வேர்கள் (உருது மூலம்- இஸ்மத் சுக்தாய்)

  வேர்கள் (உருது மூலம்- இஸ்மத் சுக்தாய்)

  தமிழில் ராகவன் தம்பி அனைவரின் முகங்களும் வெளுத்திருந்தன.  வீட்டில் அன்று சமையல் எதுவும் நடக்கவில்லை.   பள்ளிக்கூடங்களில் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்ட ஆறாவது நாள் அது.  குழந்தைகள் வீட்டை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.   குழந்தைகள் வீடு முழுதும் அலைந்து திரிந்தார்கள்.  சிறுபிள்ளைத்தனமான சண்டைகள், கூச்சல்,  ஆரவாரம் என ரகளைகளில் ஈடுபட்டும் அங்கங்கு தாவித் தாவி குட்டிக்கரணங்கள் அடித்தும் வீட்டை இரண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.    பதினைந்து ஆகஸ்டு வந்து போனதே தெரியாதது போலக் குதித்துக் கொண்டிருந்தார்கள்.   ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு […]


 • பாரதி

    மராத்தி மூலம் – விஜய் டெண்டுல்கர் தமிழில் – ராகவன் தம்பி ஓவியங்கள் : வெ.சந்திரமோகன்   கதை மாந்தர்கள் 1. பாரதி 2. பீர்பால் 3. அக்பர் 4. வீர சிவாஜி 5. மிக்கி மவுஸ் 6. நிலா 7. கழைக்கூத்தாடி 8. கோமாளி 9. குதிரை 10. தேவதை 1 11. தேவதை 2 பாரதி (பாரதி வீடு, வீட்டுக்கான மேடை அமைப்பு, மாலை நேரம், பாரதி ஆண்பிள்ளைக்கான உடுப்புக்களை உடுத்தியிருக்கிறாள், வீட்டில் […]


 • இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை

  உருது மூலம்- இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழி தமிழில்-ராகவன் தம்பி     காட்சிரூபமான வகையில் என்னுடைய நினைவின்  சுவடுகளைப்  பின்னோக்கித் தேடிப் பயணிக்க வேண்டும்.  – எனக்கு எதிரே சிகப்பு நிறத்தில்  கண்ணாடிகள் சுழன்று கொண்டிருக்கும்  ஒரு வட்டமான அறை.  அந்தக் கண்ணாடி அறையில்  என் கைகளைத் தட்டி நான்  களித்து விளையாடுவதை என் மனக்கண்களால்  காண்கிறேன்.   அந்தக் கண்ணாடி அறையானது நான் சில மாதங்கள் வாசம் செய்த என் அம்மாவின் கருவறை.  இன்று […]