author

இடைவெளிகள் – 12: மண்ணும் மனிதர்களும் இடைவெளிகளும்

This entry is part 9 of 23 in the series 14 அக்டோபர் 2012

      நாட்டுக்கு நாடு, பாரம்பரியத்துக்குப் பாரம்பரியம் இடைவெளிகள் இருக்கின்றன. இரண்டு வேறுபட்ட மனோபாவத்தில், பாரம்பரியத்தில் வந்தவர்கள் ஒன்றாய் சேர்ந்து வாழும் போது அதனால் ஏற்படுகிற தாக்கங்களை அசைபோட்டுப் பார்க்கிறது மனசு.     சிங்கப்பூரில் சமீப காலத்தில் அதிகமாகப் பேசப்படுகிற ஒரு விசயம் இடைவெளி பற்றியதுதான். சிங்கப்பூரியர்களுக்கும், சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் உள்ள இடைவெளி பற்றியது. அவர்கள் ஒன்றாய்க் கலப்பதில்லை. காரணம் இருவேறுபட்ட மனோபாவங்களும், இருவேறுபட்ட விழுமியங்களும், இருவேறுபட்ட நம்பிக்கைகளும்தான். அவரவர் ஊறிய குட்டைகள் அப்படி. அந்தக் குட்டைகளின் […]

இடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்

This entry is part 5 of 28 in the series 9 செப்டம்பர் 2012

இராம. வயிரவன் rvairamr@gmail.com             பங்குச்சந்தை நிலவரத்தைப் போல, வாழ்க்கையும் மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்சினையானாலும் சரி, வங்கியின் வட்டிவிகிதம் மாறினாலும் சரி, மழைவந்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதோ ஒரு காரணத்துக்காகப் பங்குகள் கிடிகிடுவென ஏறும்! அடுத்தநாளே மளமளவெனச்சரியும்! எல்லாவற்றுக்கும் காரணம் ‘செண்டிமெண்ட்’ என்பார்கள் அந்தத்துறையில் இருப்பவர்கள். அதைப்போலத்தான் வாழ்க்கையும் ரோலர் கோஸ்ட்டர் விளையாட்டைப் போல ஏறுவதும், இறங்குவதும், விழுவதும் எழுவதுமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது! எல்லா உறவுகளிலும் கணவன் மனைவி […]

இடைவெளிகள் (10) – மிகைப்படுத்தலும் மனத்துள்ளலும்

This entry is part 6 of 37 in the series 2 செப்டம்பர் 2012

இராம.வயிரவன் rvairamr@gmail.com   ஐபோனில் இரண்டு விரல்களால் ஒரு படத்தைப் பெரிதாக்கி விடுவதைப் போல எதையும் பெரிதாக்கி விடுகிறான் மனிதன். ஆம் மனிதன் எதையுமே மிகைப்படுத்தி விடுகிறான். யதார்த்தம்தான் இயல்பானது; அதுதான் உண்மை நிலை; அதற்கு எப்போதுமே சக்தி அதிகம். ஒருவரை விரும்பினால் ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளுவதும், வெறுத்தால் அடியோடு வெறுத்து ஒதுக்குவதும் மிகைப்படுத்தல்களே. அவை உண்மையிலிருந்து இடைவெளி விட்டு வெகுதூரம் போய்விடுகின்றன. வெகுதூரம் போய்விடாமல் திருக்குறள் இப்போது நம்முடனேயே இருக்கிறது. அதற்கு ஐபோனுக்கும், அதில் திருக்குறள் […]

இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்

This entry is part 39 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

இராம. வயிரவன் (11-Aug-2012)   நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடைவெளிகளைத் தொடர்வது சந்தோசமாகத்தான் இருக்கிறது. தங்கமீன் இணைய இதழில் ஏழு மாதங்கள் இடைவெளிகள் கட்டுரைத்தொடர் வெளிவந்தது. அதன்பிறகு சில இடைவெளிகளால் இடைவெளித் தொடர் நின்றுபோனது. இப்போது மீண்டும் தொடர்கிறேன். முந்தய  கட்டுரைகளைப் படிக்க விரும்புவோர் தங்கமீன் இணைய இதழைப் புரட்டுங்கள். கடந்த இதழ்களில் என் கட்டுரைகளைக் காணலாம். முகவரி இதோ: http://thangameen.com/ அங்கே சென்று படிக்கமுடியாதவர்கள், கவலை வேண்டாம் என்னோடு தொடருங்கள். நானே சுருக்கமாக உங்களுக்குச் […]

இறப்பின் விளிம்பில். .

This entry is part 11 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

இந்த வழ்க்கையை வாழ்ந்து தீர வேண்டியிருப்பதால் கட்டிலில் காட்சிப் பொருளாய் நான்…மக்கள் என்னைப் பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அவர்களின் கழுத்தைப் பார்க்கிறேன். இல்லை; அது இல்லை. ஐயோ… அது வேண்டும். கட்டாயம் வேண்டும். எப்படிச் சொல்வது? புரிந்து கொள்வார்களா? அவர்களுக்குச் சொல்ல என்னிடம் நிறைய இருக்கிறது. என் கண்கள் அவர்களைப் பார்த்து ஆயிரமாயிரம் பேசுகின்றன. அவர்கள் என் பார்வைக் குத்தலிலேயே நான் சொல்ல நினைப்பதையெல்லாம் உணர்ந்து கொண்டிருப்பார்கள். நினைவுகளின் ஆழத்தில் விழுவதும் பின் எழுவதுமாக இருக்கிறது என் கவனத்தவளை. […]

பரிணாமம் (சிறுகதை)

This entry is part 2 of 35 in the series 29 ஜூலை 2012

தெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் ‘சுளீர், சுளீர்’ என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம்பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன. அவன் மனைவி ‘உர்ர்ர், உர்ர்ர்’ எனத்தேய்த்துக் கொண்டிருந்த உருமிமேளம் அந்த நிகழ்வை மேலும் உக்கிரமாக்கிக் கொண்டிருந்தது. கூட்டம் வேடிக்கை பார்த்து விட்டுப் போய்க்கொண்டே இருந்தது. அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் ஜெகனும் ஒருவன். ஜெகனுக்கு நமக்கென்ன என்று சும்மா பார்த்துக் கொண்டிருக்கமுடியவில்லை. அவன் அடித்துக் கொள்கிற ஒவ்வொரு சாட்டையடியும் ஜெகனின் மனத்தில் அடிப்பதாக இருந்தது. […]

‘பினிஸ் பண்ணனும்’

This entry is part 10 of 37 in the series 22 ஜூலை 2012

கார்த்திக் வழக்கமாகச் செல்கிற அதே வழியில் தான் அன்றைக்கும் சென்று கொண்டிருந்தான். இன்னும் ஒரு மாதத்திற்குத்தான். அதன் பிறகு அவன் வேலை எங்கே எப்படி விதிக்கப்பட்டிருக்கிறதோ? அவன் வேலை செய்கிற ஸ்டார் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை அடைய இன்னும் இரண்டு புளோக்குகளுக்குள் புகுந்து பேருந்து நிறுத்தத்தில் சற்று நின்று திரும்பிப் பார்த்துவிட்டுச் சாலையைக் கடக்க வேண்டும். ‘புளோக்’குகளுக்கிடையே இருந்த முதியோர் உடற்பயிற்சி செய்கிற இடத்தில் பெரிசுகள் சிலர் கைகளைக் கால்களை நீட்டி மடக்கித் தங்கள் வாழ்நாளைக் கூட்டிக்கொண்டிருந்தார்கள். அங்கே […]

100 கிலோ நினைவுகள்

This entry is part 22 of 32 in the series 15 ஜூலை 2012

சிறுகதை – இராம வயிரவன் —————————- ‘நண்பா…சாரி டு டிஸ்டப் யு. நாலுநாள் ஹாலிடே வருதுல்ல. ஜென்ட்டிங் போலாமுன்னு கெளம்பியாச்சு. எல்லாம் அந்த லதாவின் ஏற்பாடு. ரெண்டுநாள் அங்கே தங்கப்போறோம். ரூம் எல்லாம் அவளே புக் பண்ணிட்டா..யாராவது என்னை கேட்டா தெரியாதுன்னு சொல்லிடுங்க… ரொம்பத்தொந்தரவு பண்ணினாச்செத்துட்டான்னு சொல்லிடுங்க..நண்பா!..வர்ட்டா…? என்ஜாய்னு சொல்லி வாழ்த்தி அனுப்புங்க நண்பா!…’ நவீன் என்னை வாழ்த்தச் சொல்லிக் கேட்டபோது வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி. சற்று முன்னர்தான் கடின உழைப்புக்குப் பிறகு கட்டையை நீட்டிக் […]

துரத்தல்

This entry is part 18 of 32 in the series 1 ஜூலை 2012

சிறுகதை – இராம.வயிரவன்     துரத்துகிறார்கள்; நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மூச்சு வாங்குகிறது. எங்காவது மறைவிடம் இருக்கிறதா என்று என் கண்கள் உருளுகின்றன. கழுத்து வட்டம் போடுகிறது. ஒடிக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். முன்பு ஒருவன் தான் துரத்தி வந்தான். இப்போது நான்கைந்து பேராகக் கூட்டமாகத் தெரிகிறது. அவர்களின் வேகம் அதிகரிக்கிறது. கால்களை எட்டிப்போடுகிறார்கள். என்னால் முடியவில்லை. கீழே விழுந்துவிடுவேன் போல இருக்கிறது. மாட்டிக்கொண்டால் என்னாவேன் என்று நினத்துக் கொண்டே ஓடுகிறேன். எப்படியும் தப்பித்துவிட வேண்டும் […]