author

கடைச்சொல்

This entry is part 15 of 29 in the series 25 டிசம்பர் 2011

கிளையிலிருந்து தரைக்கு வீழ்கிற இலையைப்  போன்றே கணித நுட்பம் தவிப்பு மனிதர்களின் தந்திர வழி என்கிறார்கள் ? தீர வலிக்குச்செய்து கொள்ளும் நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ? காதல் ஜோடிகளின் கைகளிலிருக்கிற கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ? போதுமான தொரு வாழ்விலிருந்து மீளும் சுய விலகல் என்கிறான் ஞானி ஒரு வேளை துடித்தடங்கும் இக்கயிற்றை அறுத்து தரையிறக்குகையில் உடைந்த என் குரல்வளையில் எஞ்சியிருக்கலாம் ஒரு தற்க்கொலையின் காரணத்திற்கான கடைசிச்சொல்

கை மாறும் கணங்கள்

This entry is part 28 of 38 in the series 20 நவம்பர் 2011

முகராத பூ காற்றின் வாசத்தோடு பேசிவிடுகிறது இழுபறி நிலை இறுதி முடிவிற்குவருகிறது ரகசியமொன்று நெகிழ்ந்துபோய் எல்லாவற்றையும் திறந்து காட்டுகிறது உதற இயலாதவொன்று நிழலின் சாயாலாகி அச்சமூட்டுகிறது யாரும் காணதகணமொன்று சட்டென கைமாறிவிடுகிறது பிறகு சேவல் சிறகை பூனையின் காலடியில் காண நேர்ந்து விடுகிறது

விலகா நினைவு

This entry is part 16 of 53 in the series 6 நவம்பர் 2011

எப்பொழுதும் எங்கள்நெஞ்சில் துஞ்சிய குழந்தையை மண்அடுக்குகளின் கீழ் புதைத்து விட்டு வெறுமையோடு வீடுதிரும்புகிறோம் மயானத்திலிருந்து. தோள்களில் இன்னும் ஊர்கிறது எறும்பைப்போல குழந்தையின் மெல்லிய மூச்சுக்காற்று. ரவிஉதயன் raviuthayan@gmail.com

ஒருகோப்பைத்தேநீர்

This entry is part 5 of 44 in the series 16 அக்டோபர் 2011

கண்ணாடிப்பேழையில் உறங்கும் புத்தர் சற்று நேரத்தில்விழித்து எழக்கூடும். அதற்க்குள் தயாரிக்க வேண்டும் அவர் அருந்த ஒருகோப்பைத்தேநீர். RAVIUTHAYAN raviuthayan@gmail.com

பறவையின் இறகு

This entry is part 7 of 45 in the series 2 அக்டோபர் 2011

வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் 67 -ம் பக்கஎண் அடையாளமாக ஒரு பறவையின் இறகை செருகி இருந்தேன். மீண்டும் வாசிக்கஎடுத்தபோது 83  -ம்பக்கத்தில் பறவையின் இறகு இருந்தது. இப்பொழுது பறவையின் இறகை கையில்வைத்துக்கொண்டு கற்க ஆரம்பித்திருக்கிறேன் 67 -ம் பக்கத்தில் இருந்து 83  -ம் பக்கத்திற்கு எப்படி பறப்பதென்று? ரவி உதயன் raviuthayan@gmail.com

வாசிக்கஇயலாதவர்களுக்கு

This entry is part 18 of 37 in the series 18 செப்டம்பர் 2011

இன்றைய நாளிதழ் செய்தியில் நேற்று இறந்து இருந்தான் இன்று அதிகாலை வரை உயிரோடு இருந்தவன் வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து சிறிது சிறிதாக இறக்க தொடங்கியிருந்தான் அன்றைய நாளிதழ் செய்திகளை அன்றைக்கே வாசிக்க இயலாதவர்களுக்காக இறந்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான். பின்னொரு நாளில் அவர்கள்அச்செய்தியை வாசிக்கநேரும் தருணம் மீண்டும் அவன் இறக்க வேண்டியிருந்ததது. ரவிஉதயன் raviuthayan@gmail.com

தீயின் தரிசனம்

This entry is part 10 of 33 in the series 11 செப்டம்பர் 2011

சருகுப் புதரிடை மூங்கிலைமூங்கிலோடு செருகியுரசி நெருப்பைக் கடைகிறான். அம்மா தயிர் கடைகிற அதே பாவனையோடு . டிஸ்கவரி சேனலில் நான் கண்ட காட்சி வேகவேகமாக கடையக் கடைய சட்டென்று புகை அவிழ்கிறது நெருப்புக் கங்குடன் புகையும் அக் கூட்டை கைகளில் ஏந்தி எடுக்கிறான் அக்னி குஞ்சொன்றை அன்று தான் கண்டேன். ரவிஉதயன்

உன்னைப்போல் ஒன்று

This entry is part 34 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

அதைப் போலொரு பறவையைப் பலியிட்டு படையலுடன் பிரார்த்தனனகளுடன் அண்ணாந்து வானம் நோக்கி அழைத்த படியிருந்தான். குறித்த நேரத்தில் அவ்விடத்தைத்தினம் வந்தடைகிற அது அன்று வரவே இல்லை. ஆளற்ற வானந்தரத்தில் நாற்றமடிக்கத்தொடங்கியிருந்த அவனை போலொரு அழுகிய ஒன்றை கொத்தி தின்று கொண்டிருந்தது அது . ரவிஉதயன் raviuthayan@gmail.com

காகிதத்தின் மீது கடல்

This entry is part 32 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

சிறுமி காகிதத்தின் மீது ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதில் ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள் ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதன் முகடுகளில் ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள் ஏழு மேகங்கலிருந்து சில மழை துளிகளை உதிர விடுகிறாள் மழைத் துளிகள் விழுமிடத்தில் ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதனடியில் தன் பெயரை எழுதுகிறாள் இனி அவளை காண்பதென்றால் ஏழு கடல் ஏழு மலைளைத் தாண்டி பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு. ரவிஉதயன் raviuthayan@gmail.com

சிறுகவிதைகள்

This entry is part 24 of 51 in the series 3 ஜூலை 2011

நள்ளிரவில் கனவு வந்தது சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தொடருமென்றது. எப்படி நிகழந்தது என்று தெரியவில்லை. தெரிந்த பிறகும் நிகழந்தது அது. ஆடிய தாண்டவம் ஒய்ந்து பாதங்கள் சிவக்க,வலிக்க நடனத்திலிருந்து நடைக்கு மாறுகிறார் நட ராசர். ரவி உதயன்