author

ஞானோதயம்

This entry is part 3 of 30 in the series 15 ஜனவரி 2012

பழநிக்கு அருகில் நெய்க்காரப்பட்டி என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே ஒரு பெரிய மிராசுதார். நெய்க்காரப்பட்டி மைனர் என்றால் தெரியாதவர்களே கிடையாது. பெயருக்கேற்ற மாதிரி ஐந்து சவரனில் வடக்கயிறு போன்ற மைனர் செயின் அவரது பொன்னிற மேனியில் தவழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் நெற்றியில் மட்டும் பட்டைப்பட்டையாக விபூதி. பெரிய முருகபக்தர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் “முருகா! முருகா!” என்று வாய் முனகிக்கொண்டே இருக்கும். முருகன் பெயரை எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக ‘முருகன்’ என்ற […]

சில்லறை நோட்டு

This entry is part 2 of 40 in the series 8 ஜனவரி 2012

சந்துருவுக்கு பெரும் பணக்காரனாக வேண்டும் என்று ஆசை! எப்படி பணக்காரனாக ஆவது? உழைத்துச் சம்பாதிப்பதென்றால் – அது அன்றாட உணவுக்குக்கூடப் போதாது! லட்சம் லட்சமாக – கோடி கோடியாகச் சிலரிடம் பணம் இருக்கிறதே – அவர்களெல்லாம் உழைத்துத்தான் சம்பாதிக்கிறார்களா? அவனுக்கென்னவோ நம்பிக்கையில்லை! அவனுக்குத்தான் நன்றாக தெரியுமே – உழைத்து உழைத்துக் களைத்ததுதான் மிச்சம்! கோடீசுவரனாக வேண்டாம் – ஒரு நூறீசுவரனாகவாவது அவனால் ஆக முடிந்ததா? இல்லையே! பின் ஏன் உழைத்து உழைத்து ஓடாகப் போக வேண்டும்? சந்துருவின் […]

சிந்தனைச் சிற்பி

This entry is part 36 of 42 in the series 1 ஜனவரி 2012

மாமேதைகள் பிறந்த கிரேக்க நாடு! அங்கே மஞ்சு சூழ் மலைப் புறத்தில் ஒரு சிற்றூர்! அங்கிருந்து கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொள்கிறார்கள். “ஆஹா! என்ன மேதா விலாசம்! வாய் திறந்தால் போதும் சத்தான சிந்தனைகளை வாரித் தெளிக்கிறார்! முத்தான கருத்துக்களை கொட்டிக் கொடுக்கிறார்!” யார் இந்தப் புகழ்ச்சிக்குரிய சிந்தனைச் சிற்பி? மக்களின் சிந்தை கவர்ந்து மிதிப்பைப் பெற்ற மாமேதை! எல்லோரும் அவரை டயாஜெனிஸ் என்று அழைக்கிறார்கள்.  அவர் குடியிருந்த குடிசை வீட்டிற்கே […]

எப்படி இருக்கும்?

This entry is part 28 of 29 in the series 25 டிசம்பர் 2011

அந்தப் படம் லண்டன் மாநகரில் ஆயிரமாவது நாளாக ஓடிக் கொண்டிருந்தது. அதைச் சிறப்பிக்கும் வகையில் அந்தக் கொட்டகையில் பெரிய விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். படத்தின் கதாநாயகி நேரிலே மேடையில் தோன்றுகிறாள் என்பதால், ஒரு பவுண்ட் டிக்கெட் ஐம்பது பவுண்டுக்குக்கூட, கள்ளமார்க்கெட்டில் கிடைக்கவில்லை. கொட்டகை முழுதும் கூட்டம் பொங்கி வழிந்தது. இந்த விழாவில் இன்னொரு சிறப்பு. அகில உலக மேதை பெர்னாட்ஷா தலைமை தாங்குகிறார். அவர்தான் அந்தப் படத்திற்கு கதை அமைத்து உரையாடல்களை எழுதியிருந்தார். நடிகை மேடைக்கு வந்ததும் […]

எங்கே போக விருப்பம்?

This entry is part 5 of 39 in the series 4 டிசம்பர் 2011

அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரம். முச்சந்தியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மேடையில் ஒரு பேச்சாளர் முழங்கிக் கொண்டிருந்தார். “சீமான்களே! சீமாட்டிகளே! எனக்கு நீங்கள் வாக்களிப்பீர்களேயானால், அது உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொண்டதாகும். நான் சார்ந்திருக்கிற கட்சி அத்தனை செல்வாக்கு வாய்ந்ததாகும்! எங்கள் கட்சி பெருபான்மையாகத் தேர்ந்தெடுக்கப்படுமானால், பிறப்பு முதல் இறப்பு வரை உங்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கும். We will give you protection from the cradle to the grave”. இந்தப் பேச்சைக் கேட்டதும் கூடியிருந்த […]

சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!

This entry is part 15 of 37 in the series 27 நவம்பர் 2011

சிறந்த அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆல்ஃபிரட் ஹிச்காக், திறமையான இயக்குநருங்கூட. பார்ப்பவர்களை நொடிக்கு நொடி திகிலுக்குள் மூழ்க வைக்கும் சஸ்பென்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவரைப் பாராட்டிப் பெரிய ஓட்டல் ஒன்றில் விருந்து வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க வணிகப் பெருமக்கள் பலரும் வந்திருந்தார்கள். ஹிச்காக் அருகில் அமர்ந்திருந்த செல்வந்தர் திடீரென்று, “உங்கள் படங்களில் மயிர்க்கூச்செறியும் சஸ்பென்ஸ் நிரம்பியிருப்பது உண்மைதான். அவை உங்கள் கை வண்ணம் தான் என்று நான் நம்ப வேண்டுமானால், இப்போதே […]

முள் எடுக்கும் முள்

This entry is part 13 of 38 in the series 20 நவம்பர் 2011

கோதையாறு நீர்த் தேக்கத்துக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கிராமம். இது குமரி மாவட்டத்தில் கேரள நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ளது. அங்கு, சின்னச்சாமி ஒரு பெரிய புள்ளி! நிறைய ரப்பர் எஸ்டேட்! வயது அறுபதுக்கு மேல் ஆனாலும் உடம்பில் ஒரு மினுமினுப்பு! சம்சாரம் தவறிப்போய் நாலைந்து வருஷமிருக்கும்! ஒரே மகன். டாக்டருக்குப் படித்துவிட்டு உள்ளுரிலேயே வேலை பார்க்கிறான். சின்னச்சாமியின் ரப்பர் எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் ஒரு காணி நிலம். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள்! அத்துடன் சின்ன […]

சிலையில் என்ன இருக்கிறது?

This entry is part 29 of 41 in the series 13 நவம்பர் 2011

விவேகானந்தருக்கு எங்கே பார்த்தாலும் பரபரப்பான வரவேற்பு? ஏனிந்த வரவேற்பு? 1893-ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் நடந்த அனைத்துலக மதப் பேரவையில் கலந்து கொண்டு இந்து மதத்தின் பெருமையை நிலைநாட்டி விட்டு அப்போதுதான் இந்தியாவிற்குத் திரும்பி இருந்தார். அப்படி அவர் அங்கே என்னதான் சாதித்தார்? ஆரம்பத்தில், பேரவையில் பேச விவேகானந்தருக்கு வாய்ப்பிருக்குமா என்ற சந்தேகம். பிறகு அவருக்கு, சில நமிடங்கள் பேசும் வாயப்புக் கிடைத்தது.  “சீமான்களே! சீமாட்டிகளே! என்று எல்லோரும் பேச்சைத் தொடங்க, “;சகோதரிகளே! சகோதரர்களே!” […]

மூன்று தேங்காய்கள்

This entry is part 44 of 53 in the series 6 நவம்பர் 2011

சந்திரகிரி என்ற ஊரில் திருமேனி என்பவன் தன் மனைவியுடன் எளிய வாழ்க்கை நடத்தி வந்தான். ஏழையாக இருந்தாலும் விருந்தோம்பும் நல்ல பண்பு அவனிடம் இருந்தது. அவன் மனைவி அமிர்தம் விருந்தினர் யார் வந்தாலும், வீட்டில் உள்ளதை இன்முகத்தோடு முதலில் அவர்களுக்குக் கொடுத்து, மிஞ்சியதை உண்ணும் பழக்கமுள்ளவள். இவ்விதம் இவர்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் வீதி வழியே முனிவர் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்ததும் வணங்கிய திருமேனி, தன் வீட்டிற்கு வந்து உணவு […]

எது உயர்ந்தது?

This entry is part 19 of 44 in the series 30 அக்டோபர் 2011

அது ஒரு நூறு அடுக்கு மாடிக் கட்டிடம். அந்த நகரத்தில் மட்டுமல்லாமல், அந்த நாட்டிலேயே அது தான் உயர்ந்த கட்டிடம். கட்டிடக் கலைக்கே பெருமையும் புகழும் தேடித் தரத்தக்க அவ்வளவு அழகான கட்டிடம்! வந்தவரைப் பிரமிக்க வைக்கும் வரவேற்பு அறை! வழவழக்கும் மொஸைய்க் தரை! வடிவழகு மிளிர தலைக்கு மேல் ஆறடி உயரத்திலிருக்கும் விதானம். அறைக்கு அறை அழகாகப் பொருத்தப்பட்டிருக்கும் வாயிற் கதவுகள்! சுவரே தெரியாமல் அதன் மேல் பதிக்கப் பெற்று, சுத்தமாக ‘வார்னிஷ்’ செய்யப்பட்டுப் பளபளத்துக் […]