கறுப்பு, வெள்ளைப் பணங்கள் உரமாகி கழனிகளில் கான்கிரீட் காடுகளின் வளர்ச்சி அமோகமானதால், கவலைக்குக் கூட மோட்டுவளையைப் பார்க்கமுடியாத கவலை.. மரக்கிளைகள் மறைந்துபோனதால், தொங்கும் மின்விசிறிக்கும் தலைக்கும் துப்பட்டா இணைப்புக் கொடுத்து தற்கொலையாக்கும் துயரம்.. தூதுப்புறாக்கள் மனிதனின் பசிப்பிணிக்கு மருந்தாகிப்போனதால், பல சேதிகள் பலான சேதிகளாய் கைபேசியால் பரிமாறப்படும் பரிதாபம்.. குடியிருப்புக்களில் இடக்குறைவால், முடக்கோழிகளாய் முதியோர்கள் முதியோர் இல்லங்களுக்குக் கடத்தப்படும் கொடுமை.. சாதிக் கணக்கெடுத்து சாதிக்கு சங்கம் வைத்து சாதிக்காய் சண்டையிட்டு சாதியால் விலைபேசி ஜனநாயகம் காக்க நிற்கும் […]
பூமிக்குப் போர்வையாய் பச்சைக் கம்பளம் – அந்தப் புல்வெளியில் தெரிகிறது அகிலத்தின் அழகு, அழித்து அதைமேயும் ஆட்டு மந்தை, ஆடுகளை வேட்டையாடும் ஓநாய்க் கூட்டம், ஓட ஓட விரட்டி ஓநாயை; கொல்லும் கொம்பன் காளை, அதன் ஜம்பம் பலிப்பதில்லை சிங்கத்திடம் – அடிபட்டு ஆவி துறக்கிறது.. இப்படித்தான் செல்கிறது.. இதையே சொல்கிறது இயற்கைச் சட்டம் ! இந்த மனிதன் மட்டும் ஏன் இத்தனை மட்டம் – தனியே ஒரு சட்டம் தன் இனத்தையே அழித்திட மட்டும் […]
வேடங்களில் மூடி வைத்த மேடை நாடகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது மண்ணில் மனித வாழ்க்கை ! உறவின் மடியில் உல்லாசத்தில் இருப்பவன் போதிக்கிறான் துறவின் தூய்மை பற்றி ! பாலுக்காகக் கூட பிள்ளைக்கு அவிழ்க்காத மார்பை காசுக்காக எவனுக்கோ காட்டும் காரிகை பேசுகிறாள் கற்பைப் பற்றி ! ஆடுமுதல் அனைத்து ஜந்துவையும் அடித்துத் தின்பவன்தான் அடியாராம், அவன் போதனைதான் சுத்த சைவமாம் ! சம்பளம் ரூபாய் மாசம் பத்து, சம்பாதித்தது மா சம்பத்து, மற்றவரையும் மனச்சாட்சியையும் ஏய்க்கும் அவன்தான் […]