செய்யாறு தி.தா.நாராயணன் குப்பை…குப்பை..,.தெருவோரங்களில்,காலிமனைகளில்,முச்சந்திகளில், எங்கும்..எங்கும் குப்பைகள்.. நம்ம மக்களுக்கும் பொது நல சிந்தனைகளோ,போராட்டகுணங்களோ அறவே கிடையாது .. குப்பைகளை நடுத்– தெருவிலா கொண்டு வந்துக் கொட்டுவார்கள்?கெட்டுப் போன உணவுகள்,அழுகிப்போன காய்கறிகளும், ,பழ்ங்களும், ஊசிப்போன பிரியாணிப் பொட்டலங்கள்,, எலும்புத்துண்டுகள்,செத்த எலி,பிளாஸ்டிக் குப்பைகள்,பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட குழந்தைகளின் மலங்கள்,இன்னும் சொல்லக் கூசும் எல்லாக் கழிவுகளும் வீதியோரங்களில். கொட்டப்படுகின்றன. தெருவே நாறுகிறது. நாலு தூறல் போட்டுவிட்டதோ குப்பென்று கிளம்பும் கவிச்சை வாடையில் உவ்வே ! குடலைப் புரட்டும். இதுதான் எட்டாம் வார்டில் […]