புவி கொதித்துக் கொண்டிருக்கிறது. உயிரினங்கள் வறுத்தெடுக்கப் படுகின்றன. வளி மண்டல சராசரி வெப்பம்128°F. காற்றில் கார்பன்டையாக்ஸைட் அளவு 430 ppm ஐ கடந்தது. பிராணவாயுவின் அளவு 14.2% என்ற ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. இருநூறு வகையான பறவை இனங்கள், கொசு, கரப்பான் பூச்சி, உள்ளிட்ட பல வகையான பூச்சியினங்கள், ஊர்வன, கணக்கிலடங்கா தாவர இனங்கள், அத்தனையும் வெப்பத்தில் பொசுங்கி, அடியோடு பூண்டற்றுப் போய்விட்டன. பரவலாக ரொம்ப வயதானவர்களும், இளம் சிசுக்களும் கூட டீஹைட்ரேஷனில் மடிந்துக் கொண்டிருந்தார்கள். […]
“பரிணாமத்தை கணிக்க முடியாது. இயற்கையை வரையறுக்க முடியாது. இதற்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும். மீண்டும் ஜீன்களில் மாற்றம் வரலாம், மனிதகுலம் துளிர்க்கலாம், அப்படி நிகழாமலும் போகலாம்.” இப்போது விஞ்ஞானி கோபன் அடுத்த கேள்வியைத் தட்டினார். “மனித ஜீன்களில் நாங்கள் ஏதாவது திருத்தங்கள் செய்து பழைய மனிதர்களை உருவாக்க முடியுமா?..” —அது சிறிது நேரம் மவுனம் சாதித்தது. “வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்.” மறுநாள் காலை விஞ்ஞானியிடமும்,தலைவரிடமும் சிலவற்றை கலந்து ஆலோசிக்க வேண்டி ஜீவன் […]
இவர்கள் குறுக்கே வந்து தடுத்து, ஏதோ கையால் சமிக்ஞை காட்ட அவர்கள் திரும்பிப் போனார்கள். “ தோழர்களே! பிரிவு—88 ன் தலைவரின் சார்பாக உங்களை வரவேற்கிறோம். பயம் வேண்டாம் அவர்கள் உங்களின் உடையைப் பார்த்துதான் நீங்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்த எதிரிகள் என்று துரத்தினார்கள். உங்களின் இந்த உடையைக் களைஞ்சிடுங்க.இங்கே கிருமிகள் ஆபத்து எதுவுமில்லை.” —-இவர்களுக்கு அவர்கள் பாணியிலான மாற்று உடை அணிய ஏற்பாடு செய்தார்கள்.சற்று ஒதுக்குப்புரமாக சென்று இருவரும் உடையை மாற்றினார்கள். அவர்களுடன் வந்திருந்த ஸோம்னா […]
” நம் பூமியில், புழங்கும் மறை நூல்கள், அணு, உயிரியல்,ரசாயணம், இயற்பியல். வானியல், தத்துவம் எதைப் பற்றியும் இதனிடம் சந்தேகங்கள் கேட்கலாம். ஓரியன்னில் புழங்கும் நூல்கள், அறிவியல் சங்கதிகளில் கூட புகுந்து விளையாடலாம். உனக்கு அவைகளில் திறமை இருந்தால்.. ”—என்று ஜீவன் சிரித்தான். “அப்படியா? ஒரு சுலபமான கேள்வி. இதுக்கு பதில் சொல்லட்டும் பார்ப்போம். ஒத்துக்கறேன். ஏய் ஸீகம்—II..! காயத்திரி மந்திரத்தைச் சொல்லு.” —-ஒரு நிமிடம் அது வேலை செய்யாமல் ஸ்தம்பித்தது. “பார்த்தியா இந்த டப்பா […]
அவன்….? ஜீவன். இடையில் மட்டும் ஒரு உள்ளாடையுடன் வெட்டவெளியில் உட்கார்ந்து சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றான். உடலுக்கான வைட்டமின் D3 தயாரிப்பு. ஈரக் காற்று சிலுசிலுவென்று வீசுகிறது. சென்ற நூற்றாண்டில் உரசிக் கொண்டு போன ஒரு வால் நட்சத்திரத்தின் தாக்குதலால் பூமியின் சுழற்சி அச்சியினுடைய கோணம் லேசாக மாறியது.. தாக்குதலின் விளைவாய் உலகில் கோடிக்கணக்கான மக்கள் சில மணி நேரங்களில் மடிந்து போனார்கள். பேரழிவு. இந்த இயற்கை வலிமையானதும், கொடைத்தன்மை கொண்டதுவும் மட்டுமில்லை, கொடூரமானதும் […]
. கி.பி.2040. உலகளவில் உள்ள சுற்றுச் சூழல் விஞ்ஞானிகளும்,உலகின் எல்லா நாட்டு பிரதிநிதிகளும் அந்த அரங்கத்தில் நிறைந்திருந்தனர். இதுஅக்டோபர் மாதக் கடைசி. அடைமழையில் எங்கும் சேறும்சகதியுமாய் இருக்கவேண்டிய மாதம்., ஆனால் இந்தமாலைப் பொழுதில் கூட வெப்பம் மனிதர்களை வறுத்தெடுக்கிறது.. நகரத்தைத் தாண்டி புற நகர் பகுதியில் கூட எங்கெங்கும்பொட்டல் வெளிகள். தென்னை பனை ,பாக்கு போன்ற சல்லிவேர் மரங்கள்உலர்ந்து பாடம் பண்ணிய சவம் போல அசையாமல் நிற்கின்றன.. இந்த மாலை நேரத்திலும் வெப்பம்—120 டிகிரிF என்றால்,.நடுப்பகல் வேதனையைப்பற்றி […]
இரவு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது காலிங் பெல் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. எரிச்சல் எழுந்தது. யாரது?. நடுராத்திரியில நாகரீகமில்லாமல். இப்படியா அடிச்சிக்கிட்டே இருப்பான்?..செல்லை ஆன் பண்ண, நோக்கியா இரவு 11–50. என்றது. அதற்குள் இரண்டு தடவை ஒலித்துவிட்டது.. திறந்தேன். வெளியே ஆபீஸ் ஹெட்கிளார்க்கும், கூடவே கிளார்க்குகள் ஏ1 ம், ஏ3யும் நின்றுக் கொண்டிருந்தார்கள். வெளியே ஆபீஸ் ஜீப் நிற்கிறது. அய்யோ! யாரைக் கேட்டு இவங்க ஜீப்பை வெளியே எடுத்தாங்க? அதிகாரிக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவாரு. “சார்! […]
செய்யாறு தி.தா.நாராயணன். வெளியீடு—நியூ செஞ்சுரிஹவுஸ்(பி)லிட்., விலை-ரூ.85-00 41-B-,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை—600 098. போன் –044—26359906. எழுத்தாளர் உஷாதீபன் அவர்களை வாசகர் உலகம் நன்கு அறியும். தொடர்ந்து சிறுகதைகளை ,குறுநாவல்களை ,நாவல்களை,கட்டுரைகளை என்று எழுதும் பன்முகம் கொண்ட திறமையாளர். நான் உணர்ந்த அளவுக்கு இவரது எழுத்துக்கள் ஜாலிக்கானதோ,பொழுதை கொல்லுவதற்கானதோ அல்ல. சிந்திக்க வைக்கும் தரமுள்ளது. இது இவருடைய பத்தாவது சிறுகதைத் தொகுப்பு என்றறிய அ.ப்.ப்.ப்.பா…!..எனக்கு மூச்சு முட்டுகிறது.. ஆமாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறாராம்?. ஒரு சின்ன […]
செய்யாறு. தி.தா.நாராயணன் ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் களத்து மேட்டுப் பக்கம் மக்கள் திரண்டிருந்தனர்.. பெரிய பெருந்தனம் வேணு கோனார் வேட்டியை தூக்கிப் பிடித்தபடி உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் விரிந்துக் கிடக்கிறது நெற் பயிர். கதிர் முற்றி விட்டதால் பசுமை குறைந்து தலை சாய,, அறப்புக்கு தயாராய் படுத்துக் கிடக்கிறது.. சற்று தூரத்தில் அறுவடை இயந்திரம் ஒன்று அசுரனைப் போல் காத்திருக்கிறது,துவம்சம் பண்ணுவதற்காக… நாலஞ்சி வருசமாகவே இந்த பக்கம் சரியான மழையில்லாம வெள்ளாமை அத்துப் போச்சுது. ஏதோ […]
செய்யாறு தி.தா.நாராயணன் கஸ்தூரி அக்கா சீரியஸாக கிடக்கிறாள் என்று செய்தி வந்தபோது, அந்த செய்தி எங்கள் தெருவில் என்னைத் தவிர ஒருத்தரிடமும் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவள் இந்தத் தெருவில்தான் பிறந்து, ஊர்ந்து, தவழ்ந்து, வளர்ந்து, பின்பு வாழ்க்கைப்பட்டு போனவள். அவளுடைய சமவயது நண்பர்கள், நண்பிகள், மூத்தவர்கள், என்னைப் போன்று ஐந்தாறு வயது இளையவர்கள், உறவுக்காரர்கள், என்று எல்லோரும் இன்னமும் இந்தத் தெருவில்தான் வசிக்கிறோம்.. தகவல் கொண்டுவந்த ஆள் இன்னமும் எங்கள் எதிரில்தான் நின்றுக் கொண்டிருக்கிறான் […]