author

கவிதைப் பிரவேசம் !

This entry is part 15 of 19 in the series 8 ஏப்ரல் 2018

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மா மடியில் தூக்கம் தோள் தொட்ட குழந்தையின் பிஞ்சு விரல்களும் குறுகுறு பார்வையும்… மலரில் கவிதைகளே இதழ்களாய் … பழுத்த பழத்தின் மஞ்சள் புன்னகை நண்பர்களின் சுவாரஸ்யமான பேச்சு வெளிர் நிறத்துத் துளிர் இலைகளில் மெல்லிய நரம்போட்டம் … செங்குழம்பென செவ்வானத்தின் ஆழ்ந்த கோபம் சிட்டுக்குருவியின் படபடப்பிலும் புரியா மொழியிலும் என என் கவிதைப் பிரவேசங்கள் எத்தனை முறைதான் என்னை மகிழ்வூட்டின ? ஓ ! கவிதைக்குள் வாழ்க்கை மிகவும் ரசமானது !

சில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்

This entry is part 2 of 20 in the series 25 பெப்ருவரி 2018

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதை வாசகர்கள் விதவிதமான கவிதைகளைப் படித்து ரசிக்கிறார்கள். எந்த விதமான மொழி நயங்களும் இல்லாத யதார்த்தக் கவிதைகளும் பலரால் எழுதப்படுகின்றன. நகுலன் , விக்ரமாதித்யன் , ரவி சுப்ரமணியன் , ஜீவி , இளம்பிறை எனப் பலர் யதார்த்தக் கவிதைகள் எழுதியுள்ளனர். நகுலன் கவிதைகளை எதிர் – கவிதைகள் [ anti – poetry ] என வகைப்பபடுத்தலாம். யதார்த்தக் கவிதை உரைநடை போலத்தான் இருக்கும். வழக்கமான உரைநடைக்கும் இதற்கும்வித்தியாசம் உண்டு. நகுலன் கவிதைகளில் […]

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 4 of 20 in the series 25 பெப்ருவரி 2018

[ 1 ] நீரில் கிடக்கும் ஆயுதம் ! உலகின் மிகக்கூரான அந்த ஆயுதம் அழகானது தொட்டால் மென்மையானது செயல்படும் போது மட்டும் சில நேரங்களில் மிக அற்புதமாகவும் பல நேரங்களில் மனம் கிழிக்கும் பேராயுதமாக மாறிவிடும் அது கண் காணாத தீயால் நிரம்பியிருக்கிறது பெண் மனத்திலும் ஆண் மனத்திலும் மாறாத வடுக்களை விட்டுச் செல்கிறது மனம் கிழித்தல் அதன் வாடிக்கை நாக்கு ! கிடக்கும் இடம் வற்றுவதில்லை எப்போதும்… இதன் பயன்பாடு விசித்திரங்களில் சோதனைகளில் நல்ல […]

இரண்டாவது கதவு !

This entry is part 7 of 14 in the series 18 பெப்ருவரி 2018

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பொய்த்துப் போகும் வானிலை அறிவிப்பு வேலை கிடக்காமல் போன நேர்காணல் பிரசுரமாகாத கதை படிக்காத பிள்ளை தந்தையை அடிக்கும் மகன் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் போட்டுப் போகும் தாய் வீண் செலவு வைக்கும் மருத்துவர் விருதே பெறாத இலக்கியவாதி பாடம் நடத்தாத ஆசிரியர் எனப் பலநேரங்களில் நம் எதிர்பார்த்தலின் இரண்டாம் கதவு அடிக்கடி திறக்கிறது ஒவ்வொருவருக்கும் … இரண்டாம் கதவைத் திறக்கும் கரம் யாருடையது ? பதில்கள் எதிரெதிர் கோணத்தில் … சிலருக்கு வாழ்க்கைப் […]

அகன்ற இடைவெளி !

This entry is part 7 of 20 in the series 11 பெப்ருவரி 2018

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவள் மிக அழகான பெண் அவன் மிக அழகான ஆண் இருவருக்கும் திருமணம் முடிந்தது நாட்கள் செல்லச் செல்ல ஒருவரின் கரும் பகுதியை மற்றொருவர் புரிந்துகொண்டனர் அவள் சுதந்திரம் கண்டு அவன் கோபப்பட்டான் அவன் அறியாமை கண்டு அவள் எரிச்சல் அடைந்தாள் வாழ்க்கை இடைவெளியின் பரப்பளவு அசாதாரண நீள அகலங்களால் மௌனத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறது! மனம் ஒன்றுபடாமல் அவர்களின் அழகு வெளியே பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறது வாழ்க்கை விசித்திரங்களில் நாம் ஓரிடத்தில் நிற்கிறோம் அந்த இடம் அவ்வப்போது […]

வெங்காயம் — தக்காளி !

This entry is part 8 of 13 in the series 4 பெப்ருவரி 2018

  ” வெங்காயம் — தக்காளீ…” என்ற   தள்ளுவண்டி வியாபாரி ராஜசேகரின் கம்பீரமான குரல் அவ்வூருக்கு மிகவும் பரிச்சயமானதுதான்   விளையாட்டு போல் இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன ராஜசேகருக்குச் சில வாடிக்கையாளர்கள் உண்டு அதிலும் கட்டிட ஒப்பந்தக்காரர் ஸ்ரீராம் வீடு முக்கியமானது மிக முக்கியமானது   வாரத்திற்கு இரண்டு கிலோ வெங்காயம் இரண்டு கிலோ தக்காளி வாங்குவார் அவர் விலை ஏற்ற இறக்கம் பற்றிய எந்தக் கவலையும் இல்லை   பணம் மாதா மாதம் மிகச் […]

திரைகள்

This entry is part 11 of 13 in the series 28 ஜனவரி 2018

  அவன் இந்தப்புறமும் அவன் அப்பா அந்தப்புறமும் இடையில் சில திரைகள் …   அவன் காதலிப்பது அப்பாவுக்குத் தெரியாது அவன் குடிப்பதும் அவன் அப்பாவுக்குத் தெரியாது   வேலை தேடும் காலத்தில் இடையில் விழுந்த திரைகளில் ‘ ஹாய் ‘ யாக அவனும் கருமமே கண்ணாக அவரும்   மனித மனம் விரிந்து பரந்த மைதானம் இல்லை எல்லா மனித உறவுகளுக்குமிடையேயும் திரைகள் எப்போதும் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன !   ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 9 of 15 in the series 14 ஜனவரி 2018

    {  1  } வெப்பம் சுவாசிக்கும் மாலைகள்   இருவர் தோள்களிலும் உள்ள மணமாலைகள் வெப்பம் சுவாசிக்கின்றன   நடக்கும்போது அவளை அவள் மனம் பின்னோக்கித் தள்ளுகிறது   வீட்டிற்குத் தெரியாமல் ஓர் அம்மன் கோயிலில் மாலைகள் தோள் மாறின இப்போது அவன் அவள் கைப் பிடித்திருப்பது மட்டுமே ஒரே ஆறுதல்   ” அம்மா என்ன சொல்வாள் … ? ” எரிமலைக் குழம்பை குடித்து முடிக்க அவள் நம்பிக்கையின் வாய் அகலத் […]

மகிழ்ச்சியின் விலை !

This entry is part 11 of 12 in the series 7 ஜனவரி 2018

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அப்பா நினைவு நாள் காலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கீழ் அமர்ந்துள்ள ஏழைகளை நோட்டமிட்டான் அவன் மூன்று மாத தாடி மீசை இனி அழுக்கே ஆகமுடியாமல் கருத்த வேட்டி வறுமை துயரமாய் மாறி அந்தப் பெரியவர் முகத்தில் ததும்புகிறது அவர் கையில் அந்தக் கைலியைக் கொடுத்தான் அவன் அதை வாங்கிக் கண்கள் அகலப் பார்த்த அவர் கைகளை உயர்த்திக் கடவுளை வாங்கினார் அந்தக் கணங்களில் அவர் முகத்தில் அதிக மகிழ்ச்சி அந்த மகிழ்ச்சியின் விலை அந்தக் […]

கண்ணீர் அஞ்சலி !

This entry is part 6 of 19 in the series 31 டிசம்பர் 2017

கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டியில் விஜயலட்சுமி புன்னகையுடன் … முதலில் அவர் யாரோவென நினைத்தார் இடது புருவ மத்தியில் இருந்த தழும்பு ஐம்பது வருட நினைவுகளை வரிசைப்படுத்த ஆரம்பித்தது அவரும் அவளும் மனமொத்த காதலில் ஒவ்வொரு கல்லையும் பார்த்துப் பார்த்துக் கற்பனைக் கோட்டையை உருவாக்கினார்கள் அவள் கண்களில் அவரைப் பற்றிய ஆசைகள் மிதந்துகொண்டிருக்கும் அவர் சொற்களில் அவர்களது எதிர்காலச் சம்பவங்கள் வரிசைப்பட்டுக் கொண்டே இருக்கும் சங்கீதத்தின் மகிழ்ச்சியான எல்லா ராகங்களும் அவர்கள் உரையாடலில் வந்து போகும் மலர்களின் மென்மையை […]