200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பூமியில் வாழ்ந்த டூடூ என்ற அபூர்வ பறவை இப்போது எந்த சுவடும் இல்லாமல் அழிந்து விட்டது சுற்றுச்சூழலியலாளர்களுக்கு அதிர்ச்சிதான் .மொரிசிஸ் அரசின் சின்னமாக அதன் இறப்பைச் சொல்லி அது உறுத்திக் கொண்டேயிருக்கிறது. ஆனால் ஒரு புது விலங்கு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆறுதலான செய்தி. பூவிவெப்பமாதலும், காடழிப்பும் தட்பவெட்பநிலை மாறுதலும் பலஅரியஉயிரினங்களைக்கொன்று அழித்து வரும்நாளில் இதுவரை கண்டறியப்படாமல்இருந்தததும், இந்தநூற்றாண்டில் கண்டறியப்பட்டமிகப்பெரியவிலங்குமான ‘டாப்ரியல்கபோமணி’ உலகுக்குத்தெரியவந்துள்ளதைவிலங்கினமேதைகள்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். டாப்பியாஎனும்விலங்குவகையில்ஒருபுதுவிலங்குவகையாகஇதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைஅறிவித்தவிஞ்ஞானிகள், விலங்கினமேதைகள்பலஅறியவகைவிலங்கினங்கள்அறிந்துவரும்நாளில்புதுவகைவிலங்குகண்டுபிடிப்புஎன்பதுஅழிவின்விளிம்பில்உள்ளவிலங்குகளைக்காப்பாற்றவேண்டும்என்றஅக்கறையையும்கொண்டுவந்துள்ளது. மலேசியா, கொலம்பியா, […]
பொதுவுடமையாளர்கள், பொதுவுடமை ஆதரவாளர்கள், தங்களுக்குப் பணம் தர மறுப்பவர்கள் என்று 5 லட்சம் பேரை 1965ல் இந்தோனொசியாவில் கொன்று குவித்தார்கள். தொடர்ந்து மனிதகுலம் இன, துவேச அழிப்பால் துயரங்களைத் தந்து வருவதைக் காணமுடிகிறது. இரண்டு உலக் யுத்தங்கள் முதல் முள்ளிவாய்க்கால் நிகழ்வு வரை இவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிபர் சுகர்னோ தூக்கி எறியப்பட்டு சுகர்தோவின் ஆட்சி வந்தது. அந்த வகை கொலைச் செயலுக்கு பலர் பயன்படுத்தப்பட்டனர். அதில் அன்வர் காங்கோ என்ற சுமித்ராவைச் சார்ந்தவரைச் சுற்றி […]
* “ தூங்குவது போலும் சாக்காடு தூங்கி விழிப்பதும் போலும் பிறப்பு “ – – சித்தர் பாடலொன்று. * “ காலா என்னருகில் வாடா உனை காலால் மிதிக்கிறேன் “ –பாரதி * சாவே உனக்கொரு சாவு வராதா” – கண்ணதாசன் * “ சாவு சாவல்ல சாவுக்கு முன் நிகழும் போராட்டமே சாவு “ – புகாரி * “இறந்து போகிறவனின் சரீரம், இந்திரியம், மனம், புத்தி இவைகளிலிருந்து வேறாக ஆத்மா என்று […]
சுப்ரபாரதிமணியன் தங்கர் பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு ” வெள்ளை மாடு ” வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை அவ்வளவு நகாசு தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருபதாக ஒரு விமர்சனம வந்தது, பின் நவீனத்துவ எழுத்து தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின்நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே.காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ நகாசோ எதிர்பார்பது ஒரு நாகரீக சமூகமாகாது. அந்தக் குறறச்சாட்டு போல் அக்கதைகள் இல்லை.பசியின் கோரம் […]
சுப்ரபாரதிமணியன் ஏழு நாவல்களை இதுவரை எழுதி வெளியிட்டிருக்கிறார் நிஜந்தன். “ பேரலை “ நிஜந்தனின் ஆறாவது நாவல்.முந்தின நாவல்களைப் போலவே இதிலும் பெரு நகர மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்திருக்கிறார்.இவரின் முதல் நாவல் “ மேக மூட்டம்” ரமணி, மீனலோசனி தம்பதிகளின் பிணக்கையும் மீனலோசினியின் முன்னாள் காதலன் பீட்டரின் குறுக்கீட்டால் சிதையும் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் விவரித்தது. மனநலவியாதியில் எதிர் விளைவு இல்லாத மருந்தைக் கண்டு பிடிக்கும் மனநல வைத்தியர் முயற்சிகளையும், சாவு பற்றிய மனக்குழப்பங்களையும் விவரித்தது. “ […]
– சுப்ரபாரதிமணியன் ————– படைப்பிலக்கியவாதிகளுக்கு இணையப் பதிவர்கள் மீது ஒரு வகைத் தீண்டாமை குணம் உண்டு. பெரிய தடுப்புச் சுவர் நின்றிருக்கும். பதிவர்கள் தமிழைப்பயன்படுத்தும் விதம், ஹைபிரிட் மொழி , அலட்சியத்தன்மை, குறைந்த வாசிப்பு, தன்னை வெகுவாக முன்னிறுத்தல் இவையெல்லாம் நெடும்கால தவமாய் இருந்து படைப்பிலக்கியம் செய்பவனை புறந்தள்ளும். பதிவர்களிடம் பேச விரும்பாத இலக்கியவாதிகளும் உள்ளனர்.வெகு சிலரே விதிவிலக்கு நான் அவ்வகைத் தீண்டாமையை வெகுவாக அனுஷ்டிக்கக்கூடியவனல்ல. நண்பர் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி ( ஆனந்த விகடன் குழுமம்) என்னிடம் […]
1. மரண பயம் என்னை வரவேற்ற எமன் கண்ணில் திகைப்பு நான் முன்வந்த காரணத்தை முக்கண்ணன் அறிந்தால் மூன்றாம் கண் திறக்குமென்ற மலைப்பு. மூன்று நாள் பசிதின்ற உடல் சுமந்து கேட்டேன் சிவன் என்தோழனென்றால் நீ யாரென? சொல்கேட்டு பயந்த எமன் கேட்டான் நான் உன் நண்பன் /நன்று ஆயின் சிவன் உன் தோழனென முன்பே ஏன் பகிரவில்லை? 2 உயிரை எரிக்க நெருப்பு தேடி அலைந்தேன் சாவின் மணம் நுகர்ந்த மூக்கு சிரிக்கும் இருகாட்டின் முருங்கை […]
பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து… சுப்ரபாரதிமணீயன் கவிதை என்பது கைவாளா, போர்வாளா , காலவிரையமான பொழுதுபோக்கா, சொல்விளையாட்டா, ஆன்ம தரிசனமா, உளறலா, தத்துவமா, மொழியியல் ஜாலமா, கலாச்சார பரிவர்த்தனையா,கடவுளா, சாத்தானா, உயிரா , மயிரா என்று விவாதம் எப்போதும் இருக்கிறது. கட்சி சார்ந்து இயங்குகிறவனுக்கு அது எப்படியும் ஆயுதம்தான். வெகுஜன அரசியல் சார்ந்த வாக்குப்பொறுக்கிக்கு அது வெற்று ஜாலம். ” நீ நிமிர்ந்தால் இமயமலை, நடந்தால் பாரத நதி ” என்று […]
சுப்ரபாரதிமணியன் “எத்தனை முறை உற்றுப்பார்த்தாலும் மறுபக்கம் காட்டுவதில்லை கண்ணாடி ” கவிஞர் – கவிதையின் பின் மறைந்துள்ளதையும் மறுபக்கத்தையும் காட்டாமல் நேரடியாக அவரின் முகத்தையும், அபிப்பிராயங்களையும் இக்கவிதை போல் இத்தொகுப்பில் காட்டுகிறார். அதை அவரின் பாணியாகவும் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். காக்கிக் சட்டைக்குள் மனிதாபிமானம் இருக்கிறது.ஈர நெஞ்சம் இருக்கிறது. காக்கிக் சட்டைப்பணியில், பயிற்சியில் மனதைத் தொட்ட அனுபவங்கள் கவிதைகளாய் மிளிர்கிறது. அம்மாவின் பெயர் பொறித்த தட்டு போன்ற கவிதைகளில் இது பட்டென வெளிப்படுகிறது. இன்னும் நெகிழ்ச்சியாகவும் சொல்லியிருக்கலாம் […]
சுப்ரபாரதிமணியன் ஆவணப்படத்தயாரிப்பிற்கான பணி அனுபவங்களை இனவரவியல்;, நிலவரவியல் அம்சங்களோடு “ டாக்கு நாவல் ‘ என்ற முத்திரை கொள்ளும்படி இந்த நாவலை இரா. முருகவேள் கட்டமைத்திருக்கிறார். இனத்தைப் பற்றிப் பேசும்போது நிலவரவியல் அம்சங்களும், அரசியலும் இயைந்து போவது சாதாரணம்தான். தான் சார்ந்து இயங்கும் சமூக ஆய்வுத்துறையின் அனுபவங்களைக் கொண்ட முறைப்படுத்தலில் இவை அலசல்கள், உரையாடல்கள் , எதிர்வினைகள் என்று முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஓர் ஆவணப்படத்தயாரிப்பு சார்ந்த அனுபவ விசயங்கள் அப்படம் தயாரிப்பில் சாத்தியமாகாத போது நாவலின் வெளிப்பாடு என்ற […]