– சுப்ரபாரதிமணியன்., நேரு தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் “ கண்டுணர்ந்த இந்தியா “. (டிஸ்கவரி ஆப் இந்தியா ) இன்று நீ கண்டுணர்ந்த இந்தியா, கண்டுணரும் இந்தியா என்று நான் குறிப்பிடும் விசயங்கள் கசப்பானவை. ஆனாலும் பகிர்ந்து கொள்ளத்தானே வேண்டும். ” மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ- இந்தப் பாரில் அறங்கள் வளரும் ,அம்மா “ ( கவிமணி தேசிக விநாயகம் ) ” […]
ஜனநாயகத்தின் அய்ந்து தூண்களைப் பற்றி இருக்கும் பிரைமைகள் எப்போதோ தகர்ந்து விட்டன. மிச்சம்மீதி நம்பிக்கை நீதிமன்றங்கள் மீது இருப்பதாய் அவ்வப்போது சில மின்னல் கீற்றுகள் தென்படுவதுண்டு. அதுவும் மாயைதான். இளவரன், திவ்யா காதல் திருமணம், கலவரம், இளவரசன் சாவு ஆகியவற்றை முன் வைத்து அந்த நம்பிக்கை பொய்த்துப் போயிருப்பதை திருப்பூர் குணா இந்த நூலில் தகுந்த தரவுகளுடன் மெய்ப்பித்திருக்கிறார். இந்நூலில் இளவரசன் திவ்யா விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகளின் மனப்பதிவுகளும் நடவடிக்கைகளும் எவ்வாறு […]
சுப்ரபாரதிமணியன் “ துண்டுத்துணி ஒன்னு ஆகும்போல இருக்குது. நெய்யறேன் ”” “ மல்லிகா சொன்னாள். அவள் கண்களில் புதுத்துணி பல வர்ணங்களுடன் மின்னியது.பட்டாம்பூச்சியொன்று பறந்து போனது.. “நாளைக்குதானே பாவு. நெய்யி. எப்பிடியும் இன்னிக்கும், நாளைக்கும் சும்மா இருக்கறது தானே. நெய்யி” ராதிகா அப்பாவின் தறிப்பக்கம் வந்து உட்கார்ந்தாள். “அப்பா.. அக்கா, துண்டுத்துணி நெய்சா நீங்க கேக்கக் கூடாது. அதெ வித்து நாங்க ரெண்டு பேரும் சினிமாவுக்கு போறதுக்கு காசு வெச்சுக்குவம்..” ரங்கசாமி கண்களை இடுக்கிக் கொண்டு […]
” சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013 ” ” சேவ் “ அமைப்பு ஒருநாள் சுற்றுச்சூழல் திரைப்பட விழாவை விரைவில் நடத்த உள்ளது . அதில் சுற்றுச்சூழல சார்ந்த திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் நாள் முழுக்கத் திரையிடப்பட உள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கல்ந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் பங்கு பெற விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கைபேசி எண்ணில் குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். தேதியுடன் பிற விபரங்கள் அனுப்பித்தரப்படும்.சுற்றுச்சூழல் குறித்த கவிதைகள், படைப்புகளோடு […]
சுப்ரபாரதிமணியன் “இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள் பஞ்சவர்ணம் “என்னவோ திடீர்னு விருந்து கெடச்ச மாதிரி.” முதலில் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. யாராவது பெயரைக் கேட்டால் பஞ்சவர்ணம் என்று சொல்கிறபோதே ஒரு வகைத் தாழ்வு மனப்பான்மையால் தலையைக் குனிந்து கொள்வது போலாகிவிடுகிறது அவளுக்கு. கிராமத்துப் பெயராகத்தான் இருக்கிறது. […]
: சுப்ரபாரதிமணியன் பாவடிக்கு இடம் தேடுகிற அவஸ்தை மனசிற்கு சிரமம் தந்தது. பாவடிக்கு இடம் பத்தாது போலிருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சின்ன விளையாட்டு மைதானம் பின்பக்கத்தில் கொஞ்சம் காலி இடம் இருந்தது. இரண்டாம் முளைக் கடப்பாரையை அந்த மைதானத்தில்தான் அடிக்க வேண்டும் போலிருந்தது. அப்போதுதான் இடம் பத்தும், அய்ம்பது கெஜம் என்றால் சற்று சிரமம்தான். பள்ளிக்கூடம் ஆரம்பப் பள்ளிதான். அதிகம் குழந்தைகள் படிப்பதில்லை. தெரிந்த ஒரு வாத்தியாரும் இருந்தார். அவரிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று ரங்கசாமி நினைத்தார். நரகலாகஇருந்தது. […]
சின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ” விடியல் ” என்ற சமூக நல இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ” விடியல் ” என்றசின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி […]
“இந்த ஓரப்பார்வை எதுக்கு…” “என்னமோ என்னோட கண்ணு ஒன்றக்கண்ணா மாறிட்டு வருது. நிரந்தரமா ஓரப் பார்வை வந்துருமோ…” “ஓரப்பார்வைதா கிளுகிளுப்புக்கு உகந்தது.” “அங்கதா கிளுகிளுப்பு ஆரம்பம்.” “உதட்டுலே ஏதாச்சும் ஒரு சொல் சொல்லப்படாம தொக்கி நிற்கும் அப்புறம்…” “மன்மத லீலையை வென்றார் உண்டா…” “இந்த சினிமாக்காரங்க ஹிரோயின்க எல்லாம் கல்யாணம் பண்ணின ஆம்பளைக எதுக்கு தேடித் தேடித் கல்யாணம் பண்ணிக்கறாங்க.” “சின்ன வயசுப் பையன்களை விட முதிர்ந்த ஆண் தர்ர நீடித்த இன்பம்தா. சின்ன வயசுன்னா […]
1. நூல் : போயிட்டு வாங்க சார் ( நாவல் ) தமிழில்: ச.மாடசாமி ஆங்கில மூலம் : ஜேம்ஸ் ஹில்டன் ( குட் பை மிஸ்டர் சிப்ஸ் ) சிப்பிங் என்ற பள்ளி ஆங்கில ஆசிரியரின் கதை இது. லத்தின், கிரேக்க மொழிகளை பழைய பாணியிலேயே கற்பிப்பதில் விருப்பம் கொண்ட ஒரு பள்ளி ஆசிரியர் பற்றிய நாவல் . நவீன விசயங்களை காது கொடுத்துக் கேட்கிறவரின் பள்ளி அனுபவங்களும், ஆசிரியர் மாணவர் […]
சுப்ரபாரதிமணியன் ——– அவனுக்கு மூன்று நாட்களாக தூக்கமில்லை. அவன் அப்படி ஒன்றும் அழகானவன் இல்லை. அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியானவன் இல்லை.கதைக்கு வேண்டுமானால் கதாபாத்திரமாக்கி கொள்ளலாம். அப்புறம் அவன் அப்பா பெயர் சுந்தரம். அம்மா பெயர் காத்தாயி. இரண்டு பேரும் செத்துப் போய் விட்டார்கள்..அப்புறம் .. அவன் செய்யும் தொழில் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியானது இல்லை.வாடகைக்கு தள்ளுவண்டி எடுத்துக் கொண்டு காய்கறி, பழங்கள் விற்பது.. அப்புறம் .. அப்புறம்…அப்புறம் அவனைப் பற்றி சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை.அப்புறம் அவன் வயது […]