கோவை இலக்கியச் சந்திப்பு என்ற இலக்கிய நிகழ்ச்சி மாதந்தோறும் கோவையில் இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு போன்றவர்களால் காத்திரமான இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய உரைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. மே மாத நிகழ்வில் கனடாவில் வாழும் அகிலின் “ கூடுகள் சிதைந்த போது..” சிறுகதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டமாக அமைந்திருந்தது. ஞானி, யுகமாயினி சித்தன், செல்வி, சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அந்த நூலை பற்றிப் பேசினர். பொதிகைச் சித்தர் சோலை சுந்தரப் பெருமாளின் “ தாண்டபுரம்” நாவலிப்பற்றி விரிவான […]
சீனாவில் தற்போதைய மக்கள் தொகையில் 32 மில்லியன் பையன்கள் பெண்களைவிட அதிகமாக ( இருபது வயதிற்குட்பட்டவர்களில்) அதிர்ச்சியைத் தருகிறது. கருச்சிதைவும், குழந்தைகளின் வளர்ப்புச் சிரமங்களும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. திருமண வயதையொட்டிய ஆண்களின் பெண் தேடலில் இது சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. பெண் குழந்தைகளை வீட்டில் பள்ளி வயதிற்கு முன் பூட்டி வைத்து பாதுகாப்பது, பள்ளிக்குப் போக விடாமல் வீட்டிலேயே இருக்கச் செய்வது, என்று பல அசாதாரண நடவடிக்கைகளும் சில சமயங்களில் காணப்படுகிறது. பள்ளி […]
ஆண்கள் மீதான பெண்கள் வன்முறை நகைச்சுவைக்கான் விசயமாகவும், பட்டிமன்ற கிசுகிசுவிற்காகவும் பயன்படுகிற விசயமாகிவிட்டது. அவ்வகையான் விடயங்களும் , வழக்குகளும் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையில் 90 சதம் இந்தியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தியாவிற்கு ஒத்த புள்ளி விவரங்கள் உள்ளன. முஸ்லீம்நாடுகளில் ஆண்களின் பாலியல் இச்சைக்கு உடன்படாத குடும்ப்ப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை உச்சத்தில் இருக்கிறது. பாலியல் வேட்கையை நியாயப்படுத்துகின்றன அவை. இன்னும் சந்தேகத்தன்மையும், ஒத்துவராத குணமும் குடும்பத்தில் […]
( மு.வ நூற்றாண்டு இவ்வாண்டு; தமிழகமெங்கும் மு.வ நூற்றாண்டு நிகழ்ச்சிகள்: மு.வ நூற்களின் மறு பிரசுரங்கள்: ) பிரான்ஸ் காப்காவின் எழுத்துக்களின் பாதிப்பில் உருவான சமீபத்திய படமொன்று மு.வ. அவர்களின் 67 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கி. பி. 2000 நாவலோடு வெகுவாக ஒத்திருப்பது ஆச்ச்ர்யம் தந்தது. பாதர்ஸம் மென் என்ற நார்வே நாட்டுப்படத்தில் வரும் கதாநாயகன் நம்முடையதைப் போல அல்லாத ஓர் உலகத்தை உருவாக்குகிறான் காதல் ஜோடியின் முத்த்த்தைப் பார்ப்பவனுக்கு அது உயிர்ப்பே இல்லாத எந்திர […]
திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திநகரம் ” செவ்வாயன்று திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முத்தமிழ்ச்சங்கத்தலைவர் கேபிகே செல்வராஜ் தலைமை வகித்தார். . திருப்பூர் மாநகர துணை மேயர் குணசேகரன் “பருத்திநகரம் ” நூலை வெளியிட, சென்னை பத்திரிக்கையாளர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஸ்ணன்., சந்திரகாந்த் தேசய், எக்ஸ்லான் ராமசாமி, திருமகள் குமரேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்.. முன்னதாக திருப்பூரிலிருந்து வெளிவரும் “ கனவு” இலக்கிய இதழுக்கு […]
திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்ற நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் “ அமெரிக்க உளவாளி ‘’ . தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத்தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் எழுத்து புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது.முத்துலிங்கத்தின் கவனம்பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச்சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் […]
திருப்பூர் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் குக்கூ இயக்கம் சார்பில் “முகம்” விருது ஜெயமோகனுக்கு 27/12/11 அன்று அளிக்கப்பட்டது திருப்பூரில் காதுகேளாதோர் பள்ளி முருங்கப்பாளையும், கோதாபாளையம் பகுதிகளில் 300 மாணவர்களைக்கொண்டு 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. அதன் நிர்வாகி முருகசாமியும் காது கேளாத விளிம்பு நிலை மனிதரே. குக்கூ இயக்கம் குழந்தைகளின் மத்தியில் கல்வி, விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக சிவராஜின் தலைமையில் இயங்கி வருகிறது. அதன் சார்பில் “ முகம் “ விருது இயற்கைவேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார், பழங்குடியினமக்கள் தலைவர் […]
இன்றைய கல்வி அமைப்பு முறை தங்களின் மூலதனத்தை அதிகரிக்க முடிந்த வரை இலாபத்தைக் கொள்ளையிடுவதையே குறிக்கோளாய் கொண்ட இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டடமைப்பைக் கட்டிக் காத்து வரும் ஆளும் வர்க்க நலன் பேணும் கல்விக் கொள்கைகளின் பிரதிபலிப்பாகவே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சமூக நலனுக்கான கல்விஅமைப்பு முறை என்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்க நலனுக்கான கல்வி அமைப்பு முறையாக மட்டும் உருவமைக்கப்படடுள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கல்வியால் மாற்றம் என்பது […]
பயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பத்து இயக்குனர்களின் குறும்படங்கள் “கேரள கபே” என்ற பெயரில் முழுத்திரைப்படமாக கேரளாவில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டது முக்கிய நிகழ்வாகும். பலமுன்னனி இயக்குனர்கள் முன்னனி நடிக நடிகர்கள் அதில் பங்கு பெற்றிருந்தனர்.சமீபத்தில் கேரளாவிலிருந்து சில குறிப்பிடத்தக்கக் குறும்படங்கள் வெளியாகியுள்ளன. ஷாஜிகைலாஜின் இயக்கத்தில் பொதுவுடமைத் தத்துவவாதி ஏகேஜி பற்றின படத்தில் அவரின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றின பல்வேறு தகவல்கள் அதை ஒரு சிறந்த ஆவணப்படமாக்கியிருக்கிறது.”மதர்” என்ற படம் கிறிஸ்துவ கன்னியாஸ்திரிக்கு நேர்ந்த […]