நீ யாராக மாற விருப்பம் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர். நான் புலியாக வீரத்தின் சின்னமாக ஆணின் ஆகுருதியாக… நான் தென்றலாக பூவாக எங்கும் உலாவி… ஆடை களைந்து ஆடிய ஆட்டத்தில் உடம்பு சோர்ந்து விடவில்லை என் பிரிய மீனே என்று கொஞ்சினான் என் பிரிய காற்றே என்றாள் அவள். உடம்புகள் பிரிந்து தனித்தனியாக்க் கிடந்த போது புலியாக இருந்த்தாக அவன் சொன்னான். இன்னும் சிங்கமாக, காட்டுக்குருவியாகவும் கூட. நானும் தென்றலாக உலவி வந்தேன் அப்புறம் புறாவாகவும், காடையாகவும் […]
தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், கெளரவிக்கவும் தமிழக அரசு உடனடியாக தமிழ் சாகித்ய அகாதெமியை ஏற்படுத்த வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். 23 எழுத்தாளர்களுக்கு ரூ. 3.4 லட்சம் பரிசு எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சார்பில் சிறந்த நூல்களைப் படைத்த எழுத்தாளர்கள் […]
=சுப்ரபாரதிமணியன் இதழியல் துறையிலும் ஈடுபட்டு தன் நில புலங்களை விற்று தமிழுக்குப் பணி செய்தவர் இலக்குவனார்.. குறள் நெறி, சங்க இலக்கியம், திராவிடக்கூட்டறவு ஆகிய இதழ்களை நட்த்தினார்.அயல் மொழிக்கலப்பால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கியதை உணர்ந்து பிற மொழிக்கலப்பு இன்றியே இதழ்களில் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியவர். பகுத்தறிவேஉ வாழ்தலையும், செந்னெறி போற்றுதலையும் வலியுறுத்தியவர். மொழியின் அழிவிற்கு மொழிக்கலப்பும், பிற மொழிகளின் ஊடுருவலும், திணிப்பும் காரணமாகின்றன. எனவேதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன் நின்று போராடினார். […]
மகிழ்ச்சிக்கான இரகசியம் =============================== இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு காலத்தில் துப்பறியும் நூல்கள் விற்பனையாவது போல இப்போது தன்னம்பிக்கை நூல்கள் விற்பனையாகின்றன. படைப்பிலக்கியம் தரும் மன எழுச்சியும் தன்னம்பிக்கையும் வாழ்வு பற்றிய தரிசனமும் இந்திய சமூகத்தின் அரசியல் நெறிமுறையிலிருந்து நழுவி விட்டதன் அடையாளமாக்க்க் கூட இதை ஒரு வகையில் கொள்ளலாம். வாசகர்கள் இன்றைக்கு பல்துறை சார்ந்த விடயங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தன்னம்பிக்கை சார்ந்த துறைக்கும் […]
“ கனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு ======================================================================== ” கனவு “ இலக்கிய வட்டம் திருப்பூர்” கனவு “ இலக்கிய வட்டத்தின் மே மாதக்கூட்டம் ஓசோ பவனில் நடைபெற்றது. பரிக்சா சாமி தலைமை தாங்கினார். திருப்பூர் குறும்பட இயக்குனர் ரவிக்குமாரின் “ பசி “ குறும்படத்தை அறிமுகப்படுத்தி மதுராந்தகன் உரையாற்றினார். சுப்ரபாரதிமணியன் “ நூற்றாண்டுச் தமிழ்ச் சிறுகதைகளும் இளைய தலைமுறை […]