சுப்ரபாரதிமணியன் திருப்பூரைச்சார்ந்த 114 தியாகிகளின் வாழக்கை வரலாறுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல்.விடுதலைப் போராளிகள் யார் என்ற தமிழ்நாடு அரசு வெளியிட்ட 1972ம் ஆண்டுக்குறிப்பு நூல், கொடிகாத்தக்குமரன் என்ற தியாகி பி எஸ். சுந்தரம் எழுதிய நூல் மற்றும் தியாகி பி ராமசாமி எழுதிய நூல்களின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் சுதந்திரப்போராட்ட வீர்ர்கள் சமிதியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வரும் பி ஆர். நடராஜன் இந்நூலை எழுதியுள்ளார். ஏறத்தாழ 90 ஆண்டுகால சுதந்திரப்போராட்டத்தில் திருப்பூர் பகுதியில் […]
சுப்ரபாரதிமணியன் சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவலுக்குப் பரிசு இலங்கையில் பரிசு . இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் 16/12/17ல் அளிக்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல், தெளிவத்தை ஜோசப்பின் இலங்கை நாவல் ஆகியவை நாவல் பிரிவில் பரிசு பெற்றன.மற்றப்பிரிவிகளில் 10 பேர் பரிசு பெற்றனர். – இலங்கைப்படைப்பாளிகள் தமிழகத்தை நிரம்ப பாதிப்புகளை உருவாக்கினர். பேரா. சிவத்தம்பி, கைலாசபதி போன்றோர் மார்க்சிய […]
வணக்கம். சிங்கப்பூர் மலேசியா பயணத்தில் 12 முதல் 27 வரை இருப்பேன் இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆவல். தொடர்பு கொண்டால் மகிழ்வேன் சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com
” அந்த பீகார் பையனெ எதுக்குடா அடிச்சே ” ” திருட்டுப் பய… கை ..வெச்சுட்டான்.”” ” எங்க..” “ சண்முகம் மாளிகைக் கடையிலே என்னமோ சாமான திக்கித் திணறி கேட்டிருந்தவன் சக்கரை ஒரு கிலோ பாக்கெட் கட்டி வெச்சிருந்ததை எடுத்திருக்கான். ” ” என்ன ஒத்துட்டானா… இல்ல சாத்தனும்னு சாத்தறீங்களா. ” ” ஒத்துட்ட மாதிரிதா உளறுனான். அவன் பாஷை யாருக்குத் தெரியும். ” அவன் பீகார்க்காரன , ஒரிசாக்காரனா , இல்லெ…” ” இப்போ […]
சோற்றுக்கையின் பிசுபிசுப்பு வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம் பழனிக்கு கண்களைக் கூச்ச் செய்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த எண்ணெய் மினுக்கல் போய் கை காயாது.. போகாது என்று தோன்றியது. சாதாரண சோற்று மிச்சம் என்றால் காய்ந்து விடும் . ஆனால் எண்ணெய் கலந்து இந்த மினுமினுப்பு அபரிதமாகி அறையையே நிறைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. வாஷ்பேசின் குழாய் மூடியைத்திரும்பத் திரும்ப திறந்தும் மூடியும் பார்த்தான். இடது கையால் அதன் மேல் படாலென்று […]
தங்கமணிக்கு வயிறு பெருத்துக்கொண்டே போனது. எப்போது வேண்டுமானாலும் பிரசவித்து விடலாம் என்பது போல் பயம் வந்தது கோபிநாத்திற்கு. வலி வந்து விட்டால் பழையனூரில் இருக்கும் ஏதாவது மருத்துவமனையில் சேர்த்து விடலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் வலி வருவதற்கான எந்த அடையாளமும் தங்கமணியிடம் காணப்படவில்லை என்பது கோபிநாத்திற்கு வருத்தமாக இருந்தது. வருத்தம் பிரசவத்தால் உடைந்து போகும். ஜானகி பிரசவத்தின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள். பற்களைக் கடித்துக் கொண்டு முக்க வேண்டும். […]
சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் , திருப்பூர் —————————————————————- உலக சுற்றுச்சூழல் தினம் விழா ஞாயிறு மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் “ அழியும் மரங்கள் “ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திருமதி சரோஜா வெளியிட புலவர் சொக்கலிங்கம்,. சிவராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஜோதி “ கொங்கு நாட்டுச் […]
சுப்ரபாரதிமணியன் பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உLLanண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது தேநீர் கடையில் போய் தேனீர் குடித்து விட்டு கொஞ்சம் நேரம் உட்கார அனுமதி கிடைக்கும். பெண்கள் என்றால் தெருதான். தெருவில்தான் நிற்கவேண்டும். வெயிலில் காயவேண்டும் . முதல் பேருந்து நிறுத்தம் பழைய பழையனூர் . […]
” நிலவளம் “ மாத இதழ் தமிழக அரசின் கூட்டுறவுச்சங்கங்களின் மாத இதழாக 50 ஆண்டுகளாக வெளிவரும் பத்திரிக்கையின் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” – ஆக மே இதழ் வெளிவந்துள்ளது. . அதில் திருப்பூரைச்சார்ந்த இலக்கிய வாதிகள், கல்வியாளர்கள், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் உட்பட பலரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” வெளியீட்டு விழா வியாழன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் […]
சுப்ரபாரதிமணியன் ரகீம் அடித்த பந்து சாலமன் வீட்டு முகப்பில் போய் விழுந்தது. இன்னும் நாலடி தப்பி இருந்தால் வாசலில் நின்றிருந்த காரின் மீது பட்டிருக்கும். சாலமனின் தாத்தா வாசலுக்கு வந்து கையை புருவங்களின் மீது வைத்து தூரமாய் பார்த்தார். அவர் கையிலிருந்த செய்தித்தாள் மனிஷா கொய்லராவிற்கு இரண்டாம் திருமணம் பற்றியும், ராஜராஜ சோழனுக்கு ஆயிரம் ஆண்டு விழா பற்றியும் முகப்புச் செய்திகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. நடிகை ஒருத்தியின் கற்பக்கலைப்பு ரகசியம் மீறி செய்தியாய் கசிந்திருந்தது. அதைப்படித்து விட்டு […]