சுப்ரபாரதிமணியன் ”இந்த வீடுதானா.. ஆத்துமணலுக்காக செத்துபோன பையன் இருந்த வீடுன்னு சொல்லியிருந்தா இத்தனை அலைச்சல் இருக்காது” ஆட்டோக்காரன் சற்று அலுப்புடன் வீதியில் நிறைந்திருந்த புழுதியைப் பார்த்தான். மணியனின் பார்வை இரண்டாம் மாடியில் குத்தியிருந்தது. கண்களின் கீழ் பூத்த வியர்வை சிறு தண்ணீர் பள்ளங்களாகியிருந்தது. உடம்பை ஒரு சிரமத்துடன் நகர்த்தி ஆட்டோவை விட்டு வெளியேறினார். ‘அன்பு இல்லம்’ என்ற பெயர் அழுத்தமான நீல நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது. “பத்து நாளா இங்க வர்ரதுக்கு போலீஸ் தொந்தரவு […]
நாற்காலியிலிருந்து எழ முயன்றவருக்கு தலை சுற்றுவது போல் கிறுகிறுத்தது.அப்படியே படுத்துக்கிடக்கலாம் என்று தோன்றியது.மரணம் வாசலில் வந்து காத்திருப்பதாக பலர் எழுதுவார்கள் . சொல்வார்கள். தான் மரணத்தை எதிர்பார்த்துதான் இருக்கிறேனா என்று அவர் சிலசமயங்களில் சொல்லிக் கொள்வார். கொஞ்ச நேரத்திற்கு முன் எதிர்த்த வீட்டுப் பெண் ஓடிவந்தாள். எட்டாம் வகுப்புப் படிக்கிறாள். ஒரு மதுக்கிடங்கு தீப்பற்றி எரிகிறதாம்.அந்த மதுக்கிடங்கு அவர்கள் பள்ளிக்கு அருகாமையில் இருக்கிறது. தீப்பற்றிய போது பலர் உள்ளே இருந்திருக்கிறார்கள். அவர்கள் என்னவாகியிருப்பார்கள். பள்ளிக்கு இன்றைக்கு […]
பொதுவாக பயணக் கட்டுரை நூல்களில் ‘கட்டுரைகளின் விரிவாக்கமும்” பயணங்களின் காட்சிப் படங்கள் சுருக்கியும் தரப்பட்டிருக்கும். ஞான சைமனின் இந்நூலில் பார்த்த இடங்களை வாசகர்கள் உள்வாங்கி பெறுவதில் முழுமையாக ஈடுபட்டிருப்பது ஒரு முக்கிய விஷயம். 20 நாடுகளுக்குச் சென்றவர் என்ற வகையில் அவரின் உலகக் குடிமகன் அனுபவத்தை 4 நாடுகளின் மீது செலுத்தி இதில் விளக்கியுள்ளார். ஞான சைமன் சிறுகதை எழுத்தாளர் என்ற வகையில் அவரின் சிறுகதைத் தன்மையின் “பளீர்” தன்மை பளிச்சிடுகிறது. பல இடங்களில் தெரிகிறது, […]
. நாற்காலியில் உட்கார்ந்தபடியே அன்புக்கு பாடை கட்டியிருந்தார்கள். பத்து வருசமா எங்கும் போகாமல் நாற்காலியில் உட்கார்ந்தே இருந்தார். வலது பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயல் இழந்துவிட்டது . அதன் பின் ஒரு மாதம் நாற்காலியில் அவரை உட்கார வைத்து அவர் மகன் சிவன் சிகிச்சை செய்தான். மருமகள் சிவமணி எதுவும் கண்டுகொள்ள மாட்டாள். வேலைக்குப் போகும் முன் சிவன் அவரின் உடம்பைத் துடைத்து சோறு ஊட்டி விடுவான். இரவில்தான் அவர் மல ஜலம் கழிப்பார் என்பதால் இரவில் […]
சுப்ரபாரதிமணியன் இந்த மாதம் சேவற்கட்டு இல்லை என்பதை தனக்குள் நிச்சயப்படுத்தி கொண்ட மாதிரிதான் வால்பாறைக்குப் புறப்பட்டுபோனார் பொன்னையன். சேவற்கட்டு தடைபடுவது அவ்வப்போது நிகழ்வதுண்டு. உள்ளூர் முக்கிஸ்தர்கள் சாவு, தேர்தல் நாள் , உள்ளூர் திருவிழா நாட்கள் என்று வருகிறபோது தடைபடும். அல்லது தள்ளிப் போகும். இந்த முறை தடைபட்டது மனதை வேதனைப்படுத்தியது.சேவற்கட்டின்போது கையில் ஆழமாய்,, வெட்டப்பட்ட கொய்யா போல் ,,பதிந்து விட்ட கத்தியின் வடு போலாகிவிட்டது. “ எளசுக என்னமோ தெரிஞ்சோ தெரியொமெயோ பழகிடுச்சுக. என்ன பண்ண […]
டீ சர்ட் போட்ட பொண்ணா இருந்தா கார்மெண்ட்சில வேலை பாத்த ” பொண்ணா இருக்கும் சட்டைப் போட்ட பொண்ணா இருந்தா மில்லில் வேலை பாத்த “ பொண்ணா இருக்கும் . லுங்கி கட்டிய பொண்ணா இருந்தா வீட்டு வேலை பாத்த பொண்ணா இருக்கும் . இல்லீன்னா வீட்லே வேலை பாக்கற பொண்ணா இருக்கும். நைட் கவுன் போட்டப் பொண்ணா இருந்தா வீட்லே சமைக்கறதுக்குன்னே இருக்கற பொண்டாட்டிமாரா இருக்கும் . – இப்படி பெண்களுக்கான டிரஸ் கோட் dress […]
” அப்பாக்கள் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள். பெரும்பாலும் கணவன்மார்கள் பெண்ணியவாதிகளாக இருப்பதில்லை .ஏன் ” என்ற கேள்வியை நண்பர் ஒருவர் திருப்பூர் திரைப்படவிழாவின் ( முதல்நாளில் திரையிடப்பட்டப் படங்கள் அனைத்தும் பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டவை ) படங்களைப் பார்த்து விட்டுக் கேட்டார்.. அவருக்கான பதிலை நானும் சில திரைப்படங்களிலிருந்தே சொன்னேன். “ முஸ்டாங் “ என்ற துருக்கியப் படம் ஒரு குடும்பத்தைச் சார்ந்த அடக்கப்பட்ட சகோதரிகள் ஒவ்வொருவகையிலும் குடும்பத்தை விட்டு வெளியேறுவதைச் சொல்கிறது. பெற்றோரை இழந்து மாமனாலும் பாட்டியாலும் வளர்க்கப்பட்ட பள்ளி […]
வாசலில் வந்து நிற்பவனைப் பார்த்த சுப்ரமணி, “”யாரோ ஆள் கெடச்சுட்டாங்க போலிருக்கு” என்றான். கோபால் பின் பக்கம் தலையைத் திருப்ப முயன்று பின் அக்கறையெடுத்துக் கொள்ளாதவன் போல் அப்படியே நின்றான். பனியன் கம்பனிக்கென்றான இயந்திரங்கள் ஓடும் சப்தம் ரீங்காரமாய் கேட்டது. உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறவனின் மூச்சிரைப்பு போல அது சுப்ரமணிக்கு இப்போதெல்லாம் படுகிறது. மூச்சிரைத்தபடி ஏதோ வாகனம் பின்பக்கம் ஓடிப்போயிற்று. “”என்ன நின்னுட்டே? உள்ளே வர்றது.. நீ யாரைக் கூட்டிட்டு வந்தாலும் வரவேற்க மொதலாளிதா இருக்காறே?” […]
ஈரோடு புத்தகக் கண்காட்சி தமிழகத்தில் நடைபெறும் புத்தக்க் கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றதாய் விளங்கி வருகிறது. மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு இரு முறை வருகை தந்து உரைகள் நிகழ்த்தியுள்ளார். அந்த உரைகளைத் தொகுத்து ஈரோடு புத்தகக் கண்காட்சியின் முக்கியத் தூணாக விளங்கும் . ஸ்டாலின் குணசேகரன் இந்நூலை வெளியிட்டுள்ளார். முதல் உரை “ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் “ என்ற தலைப்பில் அமைந்திருந்தது. கற்பனை சக்தி கொண்ட சமுதாயத்தை மூத்த பத்திரிக்கையாளர்கள் எழுதத் […]
என் அருமை நண்பரும், மலேசியாவின் ஆகச் சிறந்த எழுத்தாளாருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அமரத்துவம் எய்திவிட்டார். தமிழுக்கு நல்ல சிறுகதைகளைத் தந்தவர் ———————————– நடவடிக்கைகள் ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து ….. சுப்ரபாரதிமணியன் பச்சைப் பசுங்கோயில் –இன்பப் பண்ணை மலைநாடு இச்சைக்குகந்த நிலம்- என் இதயம் போன்ற நிலம் ( சுத்தானந்த பாரதியார் ) அய்ந்து நாவல்கள் கொண்டஇத் தொகுப்பை படித்து முடிக்கிற போது மலேசியாவின் […]