Articles Posted by the Author:

 • இரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்

  இரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்

  வெண்ணிற இரவுகளைக் கைகளில் சேகரித்து யாரும் கானவியலாதொரு தேசம் நோக்கி ஓடினேன்.. யாருமற்ற அவ்வெளியில் சாம்பல் மலர்களாலான மழை பெய்து கொண்டிருக்க தோளில் உருபெற்ற வலி மெல்ல மெல்ல பயணித்து விரல்கள் வழி இரவுகளை நனைக்க சில்லிட்டது எனக்கு.. குளிர்ந்து விட்ட கைகளில் நடுங்கிய இரவுகள் மெல்ல உடல்பெருத்து விடியல்களாய் பூப்பெய்து கொண்டிருந்தன..


 • ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்

  ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்

  மேசைமீது ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில் ஊர்ந்தேறிக் கொண்டிருந்தது வெயில் நுகருமொரு சொற்ப மரநிழல்.. நிழல் துப்பிய குளிருணர்வில் புத்தகங்கள் ஒன்றொன்றும் காந்தப்பிணைப்புடன் இறுக்கமடைய, கிழிசல்கள் வழி எழுத்துக்கள் சில வெப்பமொழியில் ஏதேதோ பிதற்றத் துவங்கின.. என் விரல் நீவிய புத்தகமொன்று தான் தானாகவும் தானே மீதமாகவும் இருக்க, அட்டைப்படத்தில் நிறைந்திருந்தனர் சிறுமிகள் சிலர்… அழுக்குச் சீருடையுடனும் நாணயச் சிரிப்புடனும்.. – தேனு [thenuthen@gmail.com]


 • ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..

  ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..

  வானெங்கும் கருந்திரள்கள் நிறைத்திடும் இரவொன்றின் நேர்க்கோட்டில் அசையும் வளைவுகளென நெளிகின்றன இதயத்துடிப்புகள்.. நெற்றி வகிடின் இறுக்கத்தினில் செவ்வானம் ஒன்றை எழுதிடச் சொல்லி நிற்கையிலே அறைமுழுதும் வெளிர்மஞ்சள் ஒளியில் சிறகு விரிக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள் சில.. வானவில்லின் நீளத்தில் பேசி தீர்க்க ஆயிரம் இருப்பினும் ஒற்றை வெட்கம் சூடும் உன்னழகினை யாதென்று எழுதி வார்க்க? ஒவ்வொரு வார்த்தையையும் கோர்த்தெடுத்து உறக்கத்திற்கு பதில் உரைக்கிறேன் நான்.. நிலாக்களைச் சிதறடித்து விளக்குகளைத் தனிமையின் இருப்பில் விட்டு அருகருகே அமர்ந்திருக்கிறோம், இரு இணை விழிகளில் […]


 • பிரதிபிம்ப பயணங்கள்..

  விடியல் பயணத்தின் விளிம்பொன்றில் என்னை விலக்கி அருகமர்ந்தான் கருஞ்சிறகுகளுடன் அவன்.. . அவன் யார்? என்னைக் காணும் வேளைகளில் அவனுள் பிறக்கும் குறுநகைப்பிற்கான தகிக்கும் அர்த்தங்கள் யாது? எனக்கும் அவனுக்குமான இடைவெளியின் அலைவரிசை ஒப்பந்தங்கள் உரைப்பது உண்மையில் என்ன? அவன் என்னைத் தீண்டுகையில் பிரதிகள் இடம்மாற்றப்படுவதை இதழ்களும் செவிகளும் உணர மறுக்கும் தருணங்கள் ஏன்? . இவ்வாறான எனக்காய் உதிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அவனிடம் இருப்பில் இருப்பது வெளிப்படையான மௌனம் மட்டுமே.. அவன் மௌனத்தின் உச்சரிப்பினில் சகலமும் லயித்திருக்க… அவனுக்கான சிறகுகள் எனக்கும் எனக்கான எண்ணங்கள் அவனுக்கும் இடம் மாறியிருந்ததன… தற்சமயம் மௌன சிறகுகளுடன் […]


 • ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்

  ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்

    வார்த்தைக்கூடை நிரம்ப  பலவண்ண பொய்களுடன் வெளியேறுகிறேன் காலைவெயில் நுகரும் வியர்வையுடன்… . ஒவ்வொரு பொய் துழாவியெடுத்து சூடிக் கொள்ளும் வேளையிலும் கண்ணீர்த்துளிகளுடன் என் கற்பனை தோட்டத்தில் ஒரு மலர் உதிர்கிறது… . நிலவு நீண்டிடும் இருளினை அள்ளிப் பருகி நாளின் இறுதியில் நுழைகிறேன், நிர்வாணமாய் நிற்கிறது அருமை தோட்டம்.. . மறுநாள் வியர்வை நுகர நான் வெளியேறுகையில் தோட்டம் நிரம்ப வண்ண மலர்கள் பூத்துச் சிரித்திருக்கின்றன.. . – தேனு [thenuthen@gmail.com]