author

போலி சிரிக்கிறது 

This entry is part 6 of 8 in the series 19 ஜனவரி 2025

வளவ. துரையன்                     அரியாசனம் யாரும்                     அமைத்துத் தராததால்                     அரற்றுகிறது அசல்                     போலிகள் தம்                     பொக்கை வாயால்                     சிரித்துக் கொண்டிருக்கின்றன.                     போலிகள் எப்படியும்                     பொய் எனும் ஆயுதம்                     கொண்டு வெற்றி                     பெறுகிறார்கள்                     காலம்காலமாகவே                     இந்திரன்கள்                     வெற்றி பெற்றும்                     கவுதமர்கள்                     தோற்றுக் கொண்டும்                     இருக்கிறார்கள்                     எல்லாம் முடிந்தபிறகு                     கல்லாய் மாறிப்பின்                     கால்பட்டுப்                     […]

எல்லாமே ஒன்றுதான்

This entry is part 5 of 8 in the series 19 ஜனவரி 2025

வளவ. துரையன்                              எங்கள் வீட்டு                             நாய்க்குட்டி                             சேற்றில் புரண்டு                             வந்தது.                             அதைக்குளிப்பாட்டினேன்                             எங்கள் வீட்டு                             பூனைக்குட்டி                             அணிலைப் பிடித்துத் தின்று                             வாயில் குருதிக் கறையுடன்                             வந்தது.                                                      கையிலெடுத்துத்                             துடைத்து விட்டேன்                             எங்கள்வீட்டு                             மல்லிகைக் கொடி                                            நேற்றடித்த காற்றில்                             அலைபாய்ந்தாட                             அதற்கு ஒரு                              கொழுகொம்பு நட்டேன்.                              என் கடைசிப் பையன் […]

பாட்டியின் கதை

This entry is part 3 of 4 in the series 12 ஜனவரி 2025

வளவ. துரையன் பாட்டி எப்பொழுதும்படுத்துத் தூங்கவைக்கும்போதுகதை சொல்வார்.எல்லாக்கதைகளிலிலும்எங்கள் பாட்டி தன்வலைகளை அறுத்துக் கொண்டுவெளியே வருவார்.உளுத்துப் போன உத்தரந்தான்எனினும் இவ்வீட்டைஉறுதியாகத் தாங்குவார்.கதைகளில் சிலநேரம்அவர் உள்ளே சென்றுகாணாமல் போய்விடுவார்.பேய்க்கதைகள் சொல்லும்போதுபேயாக மாறிவிடுவார்,சாமி கதை சொன்னாலோசாமியாட்டம்தான்.கதை முடிந்துவிட்டதுஎன எண்ணுகையில்சற்றுநேரம் பேசாமல் இருப்பார்.திடீரென கதையைமுன்பைவிட வேகமாகத்தொடங்குவார்.ஒரு கதையிலிருதுஇன்னொரு கதைக்குமுடிச்சுப் போட்டுத் தாவுவார்.இப்பொழுதுஊரின் கிழக்கேதனியாய்ப் படுத்துக் கொண்டுயாருக்குக் கதை சொல்கிறாரோ?

இல்லறப் பேரவை

This entry is part 8 of 8 in the series 29 டிசம்பர் 2024

வளவ. துரையன் சிவன் கோயில்மணி கேட்டுவிழிப்பு வந்தது; இனிசிவனே என்றிருத்தல் ஆகாது என்றெழுந்தேன்.காப்பி கொடுக்கும்போதே நாளைகாப்பிப்பொடி இல்லை;மனைவியின் அவசரத் தீர்மானம்.செய்தித்தாள் படிக்கப் படிக்கச்செக்கச் சிவந்த வானமாயிற்று முகம்;பாலியல் வன்முறை, கடத்தல்,கொலை கொள்ளை, இலஞ்சம் கைதுவாகனவிபத்து எனக் கவன ஈர்ப்புகள்தலையில் தண்ணீர் ஊற்றிமனத்தை உடலைக்குளிரச் செய்தேன்.பெட்ரோல் விலை ஏறுவதால்இருசக்கர வாகனமில்லை;பேருந்தில் பிதுங்கி வழிந்துஅலுவலகம் அடைதல்அதிகாரத்திடம் மல்லுக்கட்டிவிட்டுகோப்புகளில் மூழ்கிவிட்டுக்கரையேறி இல்லறக் கரையில்தரை தட்டினேன்.வீடுவந்தால்மனைவி நினைவூட்டினாள்தான் கொடுத்தஅவசரத்தீர்மானத்தைஆளும் கட்சியால்தள்ளுபடி என்றேன். இப்படித்தான் இன்றுஇல்லறப் பேரவை நிகழ்ச்சிகள்இனிதே நிறைவு

அணையா நெருப்பு

This entry is part 7 of 8 in the series 29 டிசம்பர் 2024

வளவ. துரையன் அன்று வெள்ளை ஆடைஅணிந்த மகான் ஏற்றியது.இன்றும் அணையவில்லையாம்.வழிவழி வந்தவர்கள்தொடர்கிறார்களாம்.வாய்ச்சொல்லில் மட்டுமன்றுவள்ளன்மையிலும்இருக்கிறார்கள்.நாளாக நாளாகமரங்கள் பட்டுப் போகின்றன.குளங்கள் வற்றிப் போகின்றனமனங்கள் மரத்துப் போகின்றனசாலை ஓரத்தில்கையேந்துவரைப் பார்த்தால்கண்களை மூடுகிறார்.இன்றும்அணையா நெருப்புஅவரவர் வயிற்றுள்ளே!

குலதெய்வம்

This entry is part 6 of 10 in the series 22 டிசம்பர் 2024

                          வளவ. துரையன் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும் சுமைதாங்கிக்கல் அந்த இருட்டில் ஆறு பேர் நிற்பதாகத் தோன்றும். பகலெல்லாம் அதனடியில் பழம்பொறுக்கிச் சீட்டாடும் பாவிகள் எங்குதான் போனார்கள் என்று என்மனம் ஏசும். நடையை வேகமாகப் போட நான் நினைத்தாலும் கால்கள் பின்னலிடும். இத்தனைக்கும் புளியமரம் பக்கத்திலிருக்கும் வேப்பமரம்தான் எங்கள் குலதெய்வம்.

வாக்குமூலம்  

This entry is part 5 of 10 in the series 22 டிசம்பர் 2024

                                —வளவ. துரையன்                   நான் உன்னை முழுதும் மறந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனாலும் உன் நினைவுகளெல்லாம் பலாச்சுளைகளை  மொய்க்கப் பறந்து வரும்  ஈக்களாக வருகின்றன. தண்ணீரில் மிதக்கவிட்டக் காகிதக் கப்பல் கவிழ்ந்து விடுமோவெனக் கலங்கும் சிறுவனின் மனமாய்த் தவிக்கிறேன். மலர்த்தோட்டத்தில் எல்லாமே மணம் வீசினாலும் மனத்தில் ஒன்றுதானே வந்தமர்கிறது. இறுதியில் முன்னால் ஓடுபவனை வெற்றி பெற விட்டவனாய்த் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

பார்வை

This entry is part 4 of 5 in the series 8 டிசம்பர் 2024

                  வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள்  காற்றால் மாறுவதைப் போல  மெதுவாக இங்கே  இரக்கமின்றிச்  செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான்  மனக்குகையில்  உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து  மறக்க முயல்கிறேன் நினைவுகளைப் போட்டுக்  கசக்கிப் பிழிந்து  கரும்பறைக்கும் இயந்திரமாக  மனம் கசப்பு கொள்கிறது எல்லாம் காலியானாலும்  சமையல் பாத்திரத்தின்  அடியில் ஒட்டியிருக்கும்  ஒரு சிறு  சோற்றுப் பருக்கையாய்  நீ அமர்ந்து கொண்டிருக்கிறாய் அதனால் பசியாறாது  என்று தெரிந்திருந்தும்  அதையே […]

நம்பிக்கை

This entry is part 3 of 5 in the series 8 டிசம்பர் 2024

                   வெயிலில் நடந்து  வாடும்போதுதான்  நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு  நீர் ஊற்றாதது நடும்போதே நான்  சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு  அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச்  சோறு போடுவதுபோல  அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றி இருப்பார் நான் என்னை  நம்பியா வைத்தேன்  அம்மாவை நம்பித்தானே  அம்மா இல்லையா?

முத்தம் 

This entry is part 4 of 7 in the series 24 நவம்பர் 2024

                             வளவ. துரையன்                 கல்லூரி மாணவனின் அடையாள அட்டை அநாதையாகக் கிடக்கிறது. ஓட்டுநர் முன்பக்கம் சாய்ந்து உறங்குவதுபோலக் கிடக்கிறார். முதுகு ஏறி இறங்குகிறது. காலைப் பிடித்துக் கொண்டு  கதறும்  கிழவர் ஒருவர் கதறலை நிறுத்தவே இல்லை. அலுவலகமோ பள்ளியோ செல்லவேண்டிய அந்தப் பெண்மணி கீழே கிடக்கும் சாப்பாட்டுப் பெட்டியின் நசுங்களைப் பார்க்கிறார். நகரம் பார்க்கலாம் என்றிருந்த காய்கறிகள் வழி தெரியாமல் கீழே சிதறி அழுகின்றன. லேசாகத்தான் மோதினாய் பரவாயில்லை என்கிறது புளியமரம் தன்னை முத்தமிட்டு நிற்கும் அந்தப் […]