யானைக்கு அஞ்சிய நிலவு சோழநாட்டில் ஒரு தலைவியும் அவள் தோழியும் நாள்தோறும் நிலாமுற்றம் செல்வார்கள். அங்குக் காட்சியளிக்கும் நிலவைக் கண்டு மகிழ்வார்கள். ஒருவர்க்கொருவர் மனம் மகிழும்படிப் பேசிக்கொள்வார்கள். அதுபோல ஒரு நாள் இருவரும் சென்றனர். அப்போது தலைவி தோழியைப் பார்த்து, “ஏனடி தோழி! இதோ இந்த முழுநிலவு இருக்கிறதே; இது தினமும் தேய்ந்துகொண்டே வருகிறதே; ஏன் தெரியுமா?” என்று கேட்டாள். அதற்குத் தோழியோ, “எனக்குத் தெரியாது; நீயே விடை சொல்” என்றாள். தலைவி, தோழியைப் […]
ஐங்குறு நூறு என்பது ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் என்னும் வகையில், ஐந்து குறுகிய நூறு பாடல்கள் அடங்கிய தொகுதியாகும். இந்நூலின் நெய்தல்திணைப் பாடல்களை அம்மூவனார் பாடி உள்ளார். அப்பாடல்களில் ஆறாவது பிரிவாக ‘வெள்ளாங்குருகுப் பத்து’ என்பது அமைந்துள்ளது. வெள்ளாங் குருகு என்னும் பறவையைப் பற்றிய செய்திகள் இப்பத்துப் பாடல்களிலும் பயின்று வருதலால் இப்பகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்று பெயர் பெற்றது. வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும், […]
பொய்கைசூழ் புகலிப் பெருந்தகை பொன்னி நாடு கடந்துபோய் வைகை சூழ்மதுரா புரித்திரு வால வாயை வணங்கியே. [171] [பொய்கை=குளம்; புகலி=சீர்காழி; பொன்னி=காவிரி; ஆலவாய்=மதுரை; ஆலம்=நஞ்சு] திருக்குளங்கள் பல நிறைந்த சீர்காழிப் பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் பொன்னி ஆறு என்னும் காவிரி பாயும் சோழநாட்டை விட்டுப் புறப்பட்டு, வைகை ஆறு பாய்கின்ற பாண்டிய நாட்டின் திருஆலவாய் என்னும் மதுரையை அடைந்து வணங்கினார். மதுரையை வணங்குவது என்பது அங்கே அருள்செய்து […]
பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயராலே வழங்கப்படுகிறார். அவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை ருக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேதங்களின் சாரமாக அமைந்துள்ளதால் அவருக்கு ”வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயர் வந்தது. நம்மாழ்வார் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாக நாளில் அவதரித்தார். அவர் தந்தையார் திருநகரியைச் சேர்ந்த காரி […]
பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட வந்து பொருளும்ஒரு பொருநர்கைத் தங்கு சிலைமலை கொண்ட பொழுதுஉல கங்கள் தகைவதுதண்டமே. [161] [பொருநர்=வீர்ர்; சிலை=வில்; தகைதல்=கட்டளை இடுதல்] இவ்வுலகங்களைத் தம் தண்டாயுதத்தால் அன்னை அருளாட்சி செய்து வருகிறார். முன்னொரு காலத்தில் சிவபெருமான் திரிபுரங்களை வெந்து பொடிபட அழித்தபோது வீரரான அவர் கையில் இருந்த வில்லாக இருந்த மேருமலைதான் அன்னையின் கையில் இருக்கும் தண்டாயுதமாகும். ===================================================================================== தடிந்த துரக குலங்கள் உரக பிலங்கள் […]
அயனுடைய ஊர்திஅதன் அன்னத்து ஓர்அன்னமே பயனுடைய கின்னரமும் அதிற்பிறந்த பறவையே. [151] [அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; கின்னரம்=பாடும்பறவை] பிரமனின் வாகனமாக இருக்கும் அன்னப்பறவைகூட இந்த ஆலமரத்தில் வாழும் அன்னங்களில் ஒன்றாகும். தேவருலகத்தில் இனிமையாக இசைபாடும் கின்னரம் என்னும் பறவையும் இந்த மரத்தில்தோன்றிய பறவையே ஆகும். ===================================================================================== பைந்நாகம் இருநான்கும் அதன்வேரில் பயில்வனவே கைநாகம் இருநான்கும் அதன்வீழில் கட்டுபவே. [152] பைந்நாகம்=நச்சுப்பை உடைய பாம்பு; கைந்நாகம்=துதிக்கை உடைய யானை] […]
ஒரே ஒரு பாசுரம் பெற்ற திருப்பவளவண்ணம் என்னும் திவ்யதேசம் காஞ்சிபுரத்தில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ”வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிள்கச்சியூராய் பேராய் கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன் குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான் பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பணிவரையி னுச்சியாய் பவள வண்ணா எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி […]
விரிகடல் கொளுத்தி வேவவிழ வருமிகு பதங்கள் ஆறிருவர் எரிவிரி கரங்கள் ஆறிஎழ எழுகுழை அசைந்த சாகையது. [141] [கொளுத்தி=வெப்பமூட்டி; வேவ=வெந்து போக; பதங்கர்=சூரியர்; ஆறிருவர்=பன்னிருவர்; [தாத்துரு; சக்கரன்; ஸ்ரீயமன்; மித்திரன்; வருணன்; அஞ்சுமான்; இரணியன்; பகவான்; திவச்சுவான்; பூடன்; சவித்துரு துவட்டா] அறி=குளிர்ந்து; குழை=தளிர்; சாகை=கிளை] விரிந்து அகன்று எல்லா இடங்களிலும் பரந்திருக்கும் கடல்களெல்லாம் வற்றும்படி பன்னிரண்டு சூரியர்களும் வெப்பக்கதிர்கள் வீசுவார்கள். அவர்களும் இந்த ஆலமரக் கிளைகளுக்கு […]
“சாமி” என்று வாசலில் இருந்து குரல் கொடுத்தேன். யாரும் வரவில்லை. மீண்டும் கூப்பிட்டேன். முருகசாமியின் மனைவி அருணா வெளியில் வந்து, “வாங்கண்ணே” ஏன் வெளியே நிக்கறீங்க?” என்றாள். உள்ளே சென்றேன். “எப்படிம்மா இருக்கான்” என்று கேட்டுக்கொண்டே மிதியடிகளைக் கழற்றி விட்டேன். “அதற்குள் உள்ளிருந்து, “யாரு அருணா?” என்ற முருகசாமியின் குரல் வந்தது. “அருணா பதில் சொல்வதற்குள், “நான்தாண்டா” என்று கூறிக்கொண்டே அவன் இருந்த அறைக்குள் சென்றேன். கட்டிலில் படுத்திருந்தான். போன வாரம் பார்த்ததற்கு இப்பொழுது மிகவும் இளைத்த […]
மதிதுரந்து வரவொழிந்த மதம் நினைந்து சதமகன் பதிதுரந்து படைஅயின்று சிறிதவிந்த பசியவே. [131] [மதி=சந்திரன்; சதமகன்=இந்திரன்; பதி=இந்திரலோகம்; அயின்று=உண்டு; அவிந்த-அடங்கின] இந்திரன் சந்திரனை விரட்டுகிறான். அதனால் சந்திரன் வெளிவராமல் பாதுகாப்பாய் ஒளிந்து கொள்கிறான். இதைக் கண்ட பேய்கள். இந்திரலோகம் சென்று இந்திரனுடன் போர் செய்து அவனை விரட்டுகின்றன. அப்போரில் இறந்த தேவர்களின் உடல்களைத் தின்று சில பேய்கள் தம் பசி ஆறினவாம். ===================================================================================== கருநிறம் கொடுஉருவு கொம்பு வெருவும் உம்பர் கழிவிடும் […]