author

கசடு

This entry is part 3 of 9 in the series 2 ஜூன் 2019

கசடு      வளவ. துரையன் மறைந்தவர்களின் மாசுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவது மரியாதையன்று மரபுமன்று ரணம் இன்னும் ஆறாவிடினும் ஈக்களை மட்டும் ஓட்டுதலே தற்காலிகப் பணி வேல் கொண்டு பாய்ச்சினால் குருதிக்கறையே காலத்தின் கோலம் புகழுரைகளும் பூமாலைகளும் அமிர்தமே ஆனாலும் அளவுக்கு அதிமானால்…? உச்சி மரக்குளையில் உட்கார்ந்திருக்கும் குரங்கு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. கட்டிப்போட்டிருக்கும் எருமையும் கணக்கு தீர்க்கக் காலம் பார்க்கிறது. அழுக்குகளை அழித்துக்கொண்டு ஓடும் என எண்ணும்ஆறு ஆலயங்களையும்தான் ஆடும்வரை ஆடிப்பார்த்து இப்போது கீழிறங்கி வந்துக் காசு கேட்கும் […]

ஆழமும் தெளிவும் உள்ளவை [வ. ஸ்ரீநிவாசனின் எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது” தொகுப்பை முன்வைத்து]

This entry is part 2 of 9 in the series 2 ஜூன் 2019

வ.ஸ்ரீநிவாசன் மதிநுட்பம் நூலோடு வல்லார் ஆவார். முன்னமே நாஞ்சில்நாடன் அவரைப் பற்றி என்னிடம் வியந்தோதி உள்ளார். அவரை ஒரே ஒரு முறை கோவையில் அவரில்லத்திற்குச்சென்று சந்தித்திருக்கிறேன். நெடுநாள் பழகியவர் போல் அளவளாவியது இன்னமும் நினைவிலிருக்கிறது. அவரெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அண்மையில் வெளியாகி உள்ள “எதைப்பற்றியும் [அ] இதுமாதிரியும் இருக்கிறது”. கட்டுரைத்தொகுப்பு எனச் சொன்னாலும் இதில் உள்ளவை ஒரே கட்டுரையில் அடக்கப்பட்ட பல்வகைப்பட்ட சிறு பகுதிகள் என்று சொல்லலாம். அதாவது பத்தி எழுத்து வகையில் அமைந்தவை. படிக்கச் சலிப்பூட்டாதவை. […]

அரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]

This entry is part 6 of 7 in the series 14 ஏப்ரல் 2019

  வளவ. துரையன்  நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான். ஒவ்வொன்றிலும் பல கதைகள் உள்ளன. சில கட்டுரைகள் சிரிக்கச்செய்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில சிரித்துக் கொண்டே சிந்திக்க வைக்கின்றன. சிரித்தாலே நோய் தீர்ந்துவிடும் என்று அன்த்துவன் தெலா சால் என்பவர் பதினோராம் லூயியின் […]

காத்திருப்பு

This entry is part 5 of 10 in the series 17 மார்ச் 2019

உள்ளிருந்து கொண்டு என் கவிதை வெளிவர மறுக்கிறது. குழந்தைக்குத் சோறூட்டும் தாய் போலக் கெஞ்சிக் கூப்பிடுகிறேன். ஈக்களை விரட்டுவதுபோல மிரட்டியும் அழைக்கிறேன். வருவது போல வந்து  பெய்யாமல் போகும் மழைபோலக் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுகிறது. சொற்களெல்லாம் வந்துவிட்டுக் காத்துக்காத்து மேய்ப்பரில்லா ஆடுகள் போலத் தவிக்கின்றன. உவமைகளும் உள்ளுக்குள்ளேயே அழுகின்றன. பிளவுக்கு வெளியில் தலையைக் காட்டி உள்ளே இழுத்துக்கொள்ளும் நீர்ப்பாம்பாய் அது இன்னும் வந்தும் வராததுமாய் மறைந்து சிரிக்கிறது. பொறுமையாக நூலிழை எத்தனை முறை அறுந்தாலும் பின்னும் […]

அறுந்த செருப்பு

This entry is part 4 of 10 in the series 17 மார்ச் 2019

வளவ. துரையன் காதைக் குடைந்துவிட்டுத் தூக்கிப்போடும் குச்சியாய் என்னை வீசி எறியாதே. சுளையை உரித்துத் தின்ற பின் எறிந்து விடுகின்ற தோலென்றே என்னை நினைக்காதே. மை தீர்ந்தபின் இனி எழுதவே முடியாதென நினைத்து எறிகின்ற பேனாவன்று நான். கைப்பிடி  அறுந்த பையை மீண்டும் தைத்து வைத்துக் கொள்ளலாம் கண்ணே! அறுந்து போன செருப்பு கூட தைத்து வைத்துக் கொண்டால் தக்க காலத்தில் கை கொடுக்கும் அன்றோ? தைக்க ஊசி நூலை விட முதலில் மனம்தான் தேவை.

கேள்வி

This entry is part 3 of 10 in the series 17 மார்ச் 2019

இரும்படுப்பு அருவாமனை என்று கூவிப் போகிறாள் கைக்குழந்தையுடன் கூடை முறம் வேணுமா கேட்டுப் போகிறார் கிழவி ஒருவர் பால்காரரின் கணகண ஒலி இன்னும் பரிதாபமாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறது சாணை பிடிப்பவரின் வண்டிச் சக்கரம் சும்மா சுற்றுகிறது ஓலைக் கிலுகிலுப்பைக் கொடுத்து அரிசி வாங்குபவள் எங்கே போனாளோ? பூம்பூம் மாடு இல்லாமல் மேளச் சத்தம் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது எல்லாமே நவீனமானால் மரபெங்கே போகும் என்ற கேள்வி எழுகிறது.

கவிதை நாற்றுகள்

This entry is part 4 of 9 in the series 10 மார்ச் 2019

வளவ. துரையன் [’தச்சன்’ இராநாகராஜன் எழுதிய “நீரில் நிழலாய் மரம்” ஹைக்கூ கவிதைத்தொகுப்பை முன்வைத்து]       புதுச்சேரியில் நடந்த தமிழ்ச் சிற்றிதழ்கள் மாநாட்டில்தான் நான் முதன்முதலாய் நாகராஜனைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் ‘தச்சன்’ சிற்றிதழை நடத்தி வந்தார். சிறிதுநேரம்தான் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவரின் குடும்பம், மற்றும் இலக்கிய ஆர்வம் போன்றவற்றை அறிந்து மகிழ்ந்தேன்.       அண்மையில் வெளிவந்துள்ள அவரின் ஹைக்கூத் தொகுப்பு நீரில் நிழலாய் மரம்” முக்கியமான ஒன்று. புத்தகம் என்பது ஒரு படிப்பினைத் தரக்கூடியது. […]

10. மறு தரவுப் பத்து

This entry is part 2 of 9 in the series 24 பெப்ருவரி 2019

மறுதரவு என்றால் மீண்டும் வருதல் என்று பொருள். மனம் கலந்த தலைவி தலைவனுடன் அவன் ஊர் சென்று மணம் புரிந்து அவனை ஏற்றுக்கொண்டு விட்டாள். அவளின் அன்னையும் உறவினரும் அவள் மீது கொண்ட கோபம் தணிந்து விட்டனர். இப்பொழுது தங்கள் இல்லத்துக்குத் தலைவியையும், தலைவனையும் அழைத்து விருந்து வைத்து வாழ்த்த விரும்புகின்றனர். இப்படித் தலைவனும், தலைவியும் மீண்டும் வருவதைக் குறிக்கும் பத்துச் செய்யுள்களைக் கொண்டதால் இப்பத்து இப்பெயர் பெற்றது. ==== 1.மறுதரவுப் பத்து மறுவில் தூவிச் சிறுகருங் […]

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

This entry is part 2 of 7 in the series 17 பெப்ருவரி 2019

வளவ துரையன் அவனும் அவளும் மனத்தால் ஒன்றுபட்டுக் கலந்தபின் அவன் அவளைத் தன்னூர்க்கு அழைத்து செல்கின்றான். அவள் தன் குடும்பச்சூழலைக் கைவிட்டு அவனுடன் செல்கிறாள். செல்லும் வழியில் அவர்களின் காதல் அன்பையும், மனத் துணிவையும் கண்டோர்கள் போற்றிக் கூறுவதாகவும், அவர்களைத் தேடிச் செல்பவர்கள் கூறுவதாகவும் இப்பத்துப் பாடல்களும் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. ===================================================================================== 1. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர் யார்கொல் அளியர் தாமே […]

8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து

This entry is part 2 of 8 in the series 10 பெப்ருவரி 2019

தன் மகள் ஒருவனைக் கண்டு காதலித்துக் களவிலே பழகி வருகின்றாள் என்பதை நற்றாயும் ,செவிலித்தாயும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவள் அவனுடன் ஒருநாள் இரவுப் பொழுதில் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டாள் என்பதறிந்து பெரிதும் வருத்தம் அடைகின்றனர். செல்வமாகத் தாங்கள் பேணி வளர்த்த தம் மகள் புதியவன் ஒருவனுடன் கொண்ட காதலால் சென்றுவிட்டாளே என இரங்கும் அவர்கள் நிலையை விளக்கும் பத்துப் பாடல்கள் இப்பகுதியில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ===================================================================================== 1. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து மள்ளர் […]