ஞாழல் என்பது கொன்றை மர வகைகளில் ஒன்று. இது கடற்கரைப் பகுதிகளில்தான் காணப்படும். ‘புலிநகக்கொன்றை’ என இதைக் கூறுவார்கள். இந்தப் பத்துப் பாடல்களும் ஞாழல் தொடர்புள்ளவையாதலால் இப்பகுதி ஞாழற் பத்து எனப் பெயர் பெற்றது. ஞாழற் பத்து—1 எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண்துளி வீசிப் பயலை செய்தன பனிபடு துறையே [எக்கர்=நீர் கொண்டு இட்ட மணல் மேடு; பயலை=பசலை நோய்; பனிபடு துறை=குளிர்ச்சியடைந்த நீர்த்துறை] அவன் அவளை விட்டுவிட்டுப் போயிட்டான்.அவன் பிரிவால அவ வாடறா; […]
பாணன்றவன் அவனுக்கு ரொம்பவும் வேண்டியவன். அவன் கூடவே எப்பவும் இருக்கறவன்; அதாலயே எல்லார்கிட்டயும் கெட்ட பேர் வாங்கறவன்; ஆனா அதைப் பத்திக் கவலைப் படாதே அவனோட ஆசைக்கெல்லாம் தொணை நிக்கறவன். கட்டினவகிட்டயும் தோழிகிட்டயும் போயி அவன் சார்பாப் பேசறவன்; ====================== பாணற்கு உரைத்த பத்து—1 நன்றே பாண! கொண்கனது நட்பே— ததில்லை வேலி இவ்வூர்க் கல்லென் கௌவை எழாக் காலே! [தில்லை=ஒருவகை மரம்; அம்மரத்தின் பால் உடலில் பட்டால் புண்ணாகி விடுமாம்; கௌவை=ஊரார்க்குத் தெரிந்து அலர் தூற்றல்] […]
சங்க நூல்களான எட்டுத்தொகை நூல்களில் ‘ஐங்குறு நூறு’ தனிச் சிறப்பு பெற்றதாகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐவகை நிலங்களைப் பற்றி ஒவ்வொரு நிலத்திற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் கொண்ட நூல் இதுவாகும். இதில் நெய்தல் பற்றிய நூறு பாடல்களை எழுதியவர் அம்மூவனார் என்பவர் ஆவர். நெய்தல் பற்றிய பாடல்கள் பத்துப் பத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ’ஞாழப்பத்து’ என்பதில் அக்கால மக்களின் திருமண நிகழ்வுகள் சிலவற்றை அறிய முடிகிறது. ஞாழல் […]
இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகனுக்குச் சொல்லப்படுவதாகும். தலைவனானவன் ‘கிழவன்’ என்னும் உரிமைப் பெயரோடு சுட்டப்படுவதால் இது கிழவற்கு உரைத்த பத்து எனப் பெயர் பெற்றது. கிழவற்கு உரைத்த பத்து—1 கண்டிகும் அல்லமோ. கொண்க நின்கேளே! முண்டகக் கோதை நனையத் தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் தோளே! [முண்டகம்=சுழிமுள்ளி என்னும் ஒருவகைப் பூ; பௌவம்=கடல்] அவன் இப்பக் கட்டினவளை உட்டுட்டு வேற ஒருத்தியோட போயிட்டான். கொஞ்ச நாள்ல அவன் திரும்பி கட்டினவகிட்டயே போகப்போறான். இது அவளுக்குத் தெரிஞ்சிசிடுத்து. அப்ப […]
நேற்று எழுதிய கவிதையைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன் அது வேறு வடிவங்கள் எடுத்து மன ஆழத்தை வெகுவாய் ஆக்கிரமித்திருந்தது நான் எவ்வளவு அழைத்தும் வர மறுத்து அங்கேயே அதன் எண்ணப்படி சஞ்சாரமிட்டுக்கொண்டிருந்தது மற்றெல்லாவற்றையும் தவிர்த்து அதன் உள்ளிருப்பில் என்னை ஒப்படைத்ததால் ஒருநாள் வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் வேறு வார்த்தைகளைத் தவிர்த்து
நான் கைவிட்ட காதலி வேறொருவனுடன் குடும்பம் நடத்துகிறாள் வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட நண்பன் பணக்காரனாகி எல்லார்க்கும் உதவி செய்கிறான் சண்டை போட்டு விரட்டப்பட்ட அப்பாவும் அம்மாவும் சின்னவனோடு சௌக்கியமாக இருக்கிறார்கள் ராசியில்லையென நான் விற்ற வீட்டில் இப்போது குடும்பமொன்று வளமாக இருக்கிறது எல்லாம் நல்லபடி இருந்தும் இன்னும் நான் நானாகத்தான் இருக்கிறேன்
[ புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் 5—ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆற்றிய பேருரை ] அன்பார்ந்த நண்பர்களே! அனைவர்க்கும் வணக்கம். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறள் தொடர்பான ஓர் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் தலைவர், செயலாளர், உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதிலும் திருக்குறளின் பெயரால் அமைந்த ஓர் இலக்கிய அமைப்பில் நான் பேசிப் பல ஆண்டுகள் ஆகி […]
தோழிக்கு உரைத்த பத்து—1 அம்ம வாழி, தோழி! பாணன் சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் வாழ்துமோ நாமே அருந்தவம் முயறல் ஆற்றா தேமே [கழிசூழ் மருங்கு=kஅழிகள் சூழ்ந்துள்ல கடற்கடைப் பக்கம்; நாணிரை கொளீஇ=தூண்டில் நாணில் இரை வைத்து; முயலல்=செய்தல்] ஆவன் அடிக்கடி அவளைச் சந்திக்க வந்து போறான்; ஆனா கல்யாணம் கட்டற நெனப்பே இல்ல; ஊருக்குத் தெரிஞ்சிட்டா அவனும் வர முடியாது; அவனுக்கும் ஆபத்து; தனக்கும் கெட்ட பேருன்னு நெனக்கறா […]
பாச்சுடர் வளவ. துரையன் தலைவர், இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்—607 002 “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். பெறுவதற்கு அரிய அத்தகைய மனிதப் பிறவியை எடுத்தவர்கள் இவ்வுலகில் அப்பிறவியை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அதுவன்றி, “வெந்ததைத் தின்று விதி வந்தால் மடிவோம்”என்று வாழ்தல் வாழ்வாகாது. வாழவேண்டிய முறைப்படி வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்களைத் தான் “வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. வாழவேண்டிய […]
நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகும். இங்கு வாழும் மக்கள் பரதவர் ஆவர். மீன் பிடித்தலும் உப்பு விற்றலும் அவர்களது தொழில்கள். உள்ளம் ஒருங்கிணைந்த காதலர் பின்னர் கடமை காரணமாகப் பிரிந்த காலத்து ஒருவரை ஒருவர் நினைத்து இரங்குவதே நெய்தல் திணைக்கு உரிய பொருள் ஆகும். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களை எழுதியவர் அம்மூவனார் ஆவர். இவர்தம் இயற்பெயர் மூவன் என்பதாகும். தாய்க்குரைத்த பத்து—1 இதில் இருக்கற பத்துப் பாட்டுகளுமே தோழி சொல்றதுதான்; […]