கவிதாயினி மீனாட்சிசுந்தரமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுப்பு “வனம் உலாவும் வானம்பாடி”. பெரும்பாலும் எல்லாக் கவிதைகளும் இயற்கையையே பாடுபொருளாகக் கொண்டுள்ளன. அதிலும் சூரியன் நிறைய கவிதைகளில் காணப்படுகிறான். கவிதைகளுக்கேற்ற படங்களா? அல்லது படங்களுக்கேற்ற கவிதைகளா? என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது. படங்கள் இருப்பதால் எக்கவிதைக்கும் தலைப்பு அளிக்கவில்லை போலும். முதல் கவிதையில் சூரியன் அப்போதுதான் உதிக்கத் தொடங்குகிறான். அதைக் கவிதாயினி செங்கதிரோன் “உலா போகப் புறப்பட்டான்” என்கிறார். அதுவும் ஒற்றை யானையில் கிளம்பப் போகிறான். அவன் வந்து […]
வளவ. துரையன் தம் தொகுப்பான முதல் தொகுப்பான,”மெல்ல விரியும் சிறகுகள்” என்னும் கவிதைத் தொகுப்பிலேயே நம் கவனத்தை ஈர்க்கிறார் பரிமளாதேவி. காரணம் இவரது கவிதைகளின் எளிமைத்தனம்தான். எந்தவித மறைபொருளோ, படிமம், மற்றும் இருண்மையோ இல்லாமல் நேரிடையாகக் கைப்பிடித்துத் தம் கூடவே வாசகனை அழைத்துச் செல்கின்றன இவர் கவிதைகள். பெண்கள் பெரும்பாலும் வீட்டைவிட்டு வீதிகளுக்கு வந்து ”ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி” என்று பாரதி சொன்னதற்கேற்ப பல்துறை வித்தகராய் விளங்கும் காலம் இது. ஆனாலும் கூட […]
பாச்சுடர் வளவ. துரையன், ஆசிரியர் “சங்கு” இலக்கிய இதழ் ஐங்குறுநூற்றின் இந்தப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களிலும் எருமை வருவதால் இப்பெயர் பெற்றது எனலாம். எருமை மருத நிலத்திற்கு உரிய விலங்காகும். எருமையின் செயல்களெல்லாம் அந்நில மாந்தர்களின் செயல்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன. ஓரம்போகியார் நாள்தோறும் தாம் கண்டு இன்புற்ற காட்சிகளை இப்பாடல்களில் நன்கு புலப்படுத்தி உள்ளார். எருமைப் பத்து–1 நெறிமருப்[பு] எருமை நீல விரும்போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் கழனி ஊரன் மகள்இவள் பழன வெதிரின் கொடிப்பிணை […]
வளவ. துரையன் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் சங்க இலக்கியப் பயிற்சி கொண்டவர்கள் மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடிய அவர்களில் ந. முருகேச பாண்டியனும் ஒருவர். அதிலும் தமிழில் திறனாய்வுச் சங்கிலி அறுந்துபடாமல் தொடர்ந்து இயங்கி வருபவர் அவர். பல்வேறு கருத்தரங்குகளில் சங்க இலக்கியம் பற்றி அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. குறிப்பிடத்தக்க நவீன இலக்கிய இதழ்களிலும் இவை வெளிவந்துள்ளன.மாதவி மற்றும் மணிமேகலை குறித்தும் இரு கட்டுரைகள் உள்ளன, ”சங்க காலத்தில் […]
இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [நிகழ்ச்சி எண் : 168] நாள் ; 21-05=-2017 ஞாயிறு மாலை 6 மணி இடம்: ஆர். கே. வி தட்டச்சகம், கூத்க்தப்பாக்கம் தலைமை ; திரு வளவ. துரையன், தலைவர் இலக்கியச்சோலை திருக்குறள் உரை : திருமதி கவி மனோ பொருள் : புல்லறிவாண்மை கவிச்சரம் : திரு ப. செந்தில்முருகன் வள்ளுவர் முற்றம் திருவள்ளுவராக : முனைவர் திரு ந. பாஸ்கரன் அரசியல்வாதியாக ; திரு வெ. நீலகண்டன் பெண்ணிய […]
நமது மரபே கதைசொல்லல்தான். பின்எழுத்து வடிவம் வந்தபோது கதைகள் எழுதப்பட்டன. இப்பொழுது நிறைய சிறுகதைகள் வருகின்றன. அவற்றில் வடிவங்களிலும் கருப்பொருள்களிலும் மாறுபட்டிருப்பவையே நம் கவனத்தைக் கவர்கின்றன. கதை எழுதும் முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிறுகதைகளைக் காட்சிகள் வழியாய்க் கவனப்படுத்தி நகர்த்தலாம். உரையாடல்கள், வருணனைகள் மூலமாகவும் ஒருகதையைச் சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் இலக்குமிகுமாரன் மன உணர்வுகளாலேயே ‘மருள் கதையை நகர்த்திக்கொண்டு போகிறார். கதையில் இரண்டே பாத்திரங்கள்தாம். உரையாடல்களும் சற்றுக் குறைவுதாம். கதையில் அளவுடன் பின்னோக்கு […]
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரிப்பனையங்கார் பாடியுள்ள “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஆறாம் பாடல் முக்கியமான ஒன்றாகும். இப்பாசுரத்தில் ஆழ்வார்களின் திருநாமங்கள் எல்லாம் கூறப்பட்டு அவர்கள் சூழ்ந்திருக்க சீரங்கநாயகியார் திருஊஞ்சல் ஆட வேண்டுமென நூலாசிரியர் அருளிச் செய்கிறார். ”வீறுபொய்கை பூதத்தார் இருபால் ஞான விளக்கேந்த மயிலையர்கோன் வியந்து காண மாறன்மறைத் தமிழ்மதுர கவிநின் றேத்த வாழ்குல சேகரன்பாணன் கலியன் போற்ற ஆறுசமயத் திருந்தோன் அருகில் வாழ்த்த அணிபுதுவை வேதியன்பல் லாண்டு பாடத் தேறுதொண்டர் அடிப்பொடிதார் […]
இத்தலைப்பில் பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவை நீராடுதலைக்குறிக்கும். மருத நிலத்தில் புனலாடல் மிகவும் முக்கியமானது. பரத்தையரோடு தலைவன் புன லாடுவதும், அதைக் கேட்டுத் தலைவி ஊடற் கொண்டு கூறுவதும், தலைவிக்காகத் தோழி கூறுவதுமாக அமைந்துள்ள செய்யுள்கள் நிரம்பி உள்ள பகுதி இதுவாகும். புனலாட்டுப் பத்து—1 சூதார் குறுந்தொடிச் சூர்அமை நுடக்கத்து நின்வெங் காதலி தழீஇ, நெருநை ஆடினை என்ப, புனலே; அலரே மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந? புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்ற தொளியே! [சூதார் குறுந்தொடி=உள்ளே துளை […]
நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான். ஒவ்வொன்றிலும் பல கதைகள் உள்ளன. சில கட்டுரைகள் சிரிக்கச்செய்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில சிரித்துக் கொண்டே சிந்திக்க வைக்கின்றன. சிரித்தாலே நோய் தீர்ந்துவிடும் என்று அன்த்துவன் தெலா சால் என்பவர் பதினோராம் லூயியின் மனநோயைத் தீர்க்கப் […]
ஒரு படைப்பு அது சிறுகதையோ அல்லது கவிதையோ எதுவாயினும் எதை அது மையமாக்கி உருவானது என்று பார்ப்போமானால் அதற்கு எந்தவித வரையறையையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சாதாரண ஓர் அமாவாசை விரதம் குறித்தும் அது ஒருவரைப் பாடாய்ப் படுத்தி வைப்பதையும் நாஞ்சில் நாடன் ஒரு சிறுகதையாக்கியிருப்பார். ஒரு பெண் எதிர்பாராவிதமாக ஒரு பணக்காரனால் கெடுக்கப்பட்டதை மையமாக வைத்து ஜெயகாந்தன் எழுதியிருப்பார். அப்பாவின் அஸ்தி கரைப்பதை மனத்தைக் கனமாக்கும் விதத்தில் ஜெயமோகன் எழுதியிருப்பார். திருவிழாவில் பொம்மைக்கடை போட்ட […]