1 யானைகளும் குரங்குகளும் காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்த குளங்களை நோக்கிச் செல்கின்றன. குரங்குகள் எல்லாம் இரவில் தங்குவதற்காக மரத்தை நாடிப் போகின்றன. இதைக்கம்பன் இரு அடிகளில் பாடுகிறான் ”தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின” தந்தி என்பது ஆண்யானையையும் பிடி என்பது பெண்யானையையும் காட்டும். மந்தி என்பது பெண் குரங்கினையும், கடுவன் என்பது ஆண் குரங்கினையும் குறிக்கும். யானைகளைச் சொல்லும்போது ஆண்யானை முன்னே செல்லப் பின்னே […]
இப்பகுதியில் அமந்துள்ள பாடல்கள் பத்தும் தோழி சொல்வன போல் அமைந்துள்ளன. எனவே இது ”தோழி கூற்றுப் பத்து என்ப்பட்டது. தோழி எனப்படுபவள் தலைவியுடன் கூடவே பிறந்து வளர்ந்தவள்; மேலும் அவள் தலைவிக்கு நிகராக அன்பும், அறிவும், உள்ளத் தெளிவும்,உள்ளத் துணிவும் பெற்றவள்; அவள் எப்பொழுதும் தலைவியின் நலத்தையே விரும்பி அதற்காகச் செயல்படுபவளாக இருக்கிறாள். தலைவியின் பேச்சைவிட தோழியின் கூற்று, சற்று அழுத்தமும் துணிவும் தெளிவும், உறுதியும் கொண்டதாக நாம் உணர முடிகிறது. தோழி கூற்று பத்து—1 நீருறை […]
வளவ துரையன் புலவிப் பத்து ஐங்குறுநூற்றின் ஐந்தாம் பகுதி புலவிப் பத்தாகும். புலவி என்பது ஊடலைக் குறிக்கும். மருத்திணையின் செய்யுள்கள் அனைத்துமே புலவியைக் காட்டுவதுதான் ஆயினும். தலைவியும், தோழியும் தலைவன் முன்னிலையில் ஊடல் கொண்டு கூறியதை மட்டுமே இங்கு கூறப்படுவதால் இப்பகுதி ‘புலவிப் பத்து” என வழங்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ளப் பத்துப் பாடல்களில் தலைவிய சொல்வதாக ஆறு பாடல்களும் தோழி சொல்வதாக நான்கு பாடல்களும் அமைந்துள்ளன. புலவிப் பத்து—1 ’தன்பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு வெண்பூம் பொய்கைத்து […]
இப்பகுதியில் வரும் பத்துப்பாக்களும் “தோழிக்கு உரைத்த பத்து” எனும் தலைப்பில் அடங்கி உள்ளன. இவை ஒவ்வொன்றுமே “அம்ம வாழி தோழி” என்றே தோழி கேட்கும்படிக்குச் சொல்லியதாகும். தலைவி, பரத்தையர், மற்றும் பிறரும் இப்பாடல்களைக் கூறுகிறார்கள். அதுபோலவே பல தோழிகள் கேட்கிறார்கள். ஆனால் ’தோழி’ என்று ஒருமையில் சொல்லக் காரணம் தோழியாம் தன்மையின் ஒற்றுமை கருதியேயாகும். இனிப் பாடல்களை நம் பேச்சு வழக்கில் காண்போம் தோழிக்குரைத்த பத்து—1 அம்ம வாழி, தோழி! மகிழ்நன் கடனன்[று] என்னும் கொல்லோ–நம்மூர் […]
வேழப்பத்து—14 ”அவன் ஒன்னை உட்டுட்டுப் போயி கொடுமை செஞ்சிருக்கான்; அதை நெனக்காம அவனோட சேந்திருந்த அவன் மார்பையே நெனக்கறையேடி? இது சரியா”ன்னு தோழி கேக்கறா? அவளோ, “சரிதான் போடி, இந்த வேழம்ன்ற கொறுக்கச்சிக்கொடி இருக்க; அது போயி வடு போல சின்னச் சின்ன காயி இருக்கற மாமரத்தோட தளிர் இலையில பட்டு அசையச் செய்யும்டி; அதெல்லாம் இருக்கற ஊரைச் சேந்தவன்டி அவன்; அவன் என்னை உட்டுட்டுடுப் போனது கொடுமைதாண்டி; ஆனா அவன் மார்புதாண்டி இனிமையான பனி போலக் […]
”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்துத் திருமாலால் எங்கும் திருவருள்பெற்[று] இன்புறுவர் எம்பாவாய்” ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 30-ஆம் பாசுரமான இது இந்நூலின் இறுதிப்பாசுரமாகும். பகவான் வங்கக் கடல் கடைந்த விருத்தாந்தம் இங்கு சொல்லப்படுகிறது. ஆயர்குலச் சிறுமிகளைப் பார்த்துக் கண்ணன் […]
எட்டுத் தொகை நூல்களில் மூன்றாவதாக வைத்துச் சிறப்பிக்கப்படுவதுதான் ஐங்குறு நூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்கும் திணைக்கு ஒன்றாக நூறு பாடல்கள் கொண்ட நூல் இது. அந்த நூறு பாக்களும் பத்துப் பத்தாகப் பகுத்து பல்வேறு தலைப்புகளில் அடக்கப்பட்டுள்ளன. அவற்றில் மருதத்திணை மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டு நூலின் முதலில் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் ஓரம்போகியார். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. இவர் […]
[தங்கப்பாவின் “பூம் பூம் மாட்டுக்காரன்” குழந்தைகட்கான பாடல்கள் நூலை முன்வைத்து] குழந்தைப் பாடல்களுக்கு இன்றியமையாதவை எளிமையும், ஓசை நயமுமே ஆகும். சிறுவர் பாடல்களுக்கு இவை இரண்டோடு சற்றுக்கருத்தும் சொல்லப்பட வேண்டும். ஆனால் அக்கருத்து வலிமையாக வலியுறுத்தப்பட்டு திணிப்பதாக இருத்தல் கூடாது. ‘அதோ பாரு காக்கா’ எனத் தொடங்கும் பாடலைக் குழந்தைப் பாடலாகவும், ‘ஓடி விளையாடு பாப்பா’ என்னும் பாடலை சிறுவர் பாடலாகவும் கொள்ள இடமுண்டு. இக்கருத்துகளுடன்தாம் தங்கப்பாவின் அண்மை வெளியீடான “பூம் பூம் மாட்டுக்காரன் “ […]
வளவ. துரையன் உலக அளவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான ஒன்று ஆஸ்கர் விருதாகும். இது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தோன்றிய விருதாகும். தொடக்கத்தில் இதன் பெயர் “அகாடமி அவார்டு” என்பதுதான். 1929—ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் திரைத் துறையைச் சார்ந்த ஒரு சிலர் ஒன்று சேர்ந்து “தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ஸ்” எனும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். அதன் முதல் தலைவராக டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் என்பவர் இருந்தார். […]
பாச்சுடர் வளவ. துரையன் என் நண்பரான ஒரு நவீன இலக்கியவாதி கேட்டார் “உங்கள் தொல்காப்பியத்தில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்கிறீர்களே? அதில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதா?” அவர் உங்கள் தொல்காப்பியமென்று கேட்டபோதே அவரைப் புரிந்து விட்டது. “இவர் போன்ற ஒரு சிலர் பண்டைய இலக்கணமோ. இலக்கியமோ அறிந்திடாமல் அதைத் தீண்டத்தகாததாய் நினைக்கிறார்கள். இவருக்குப் புரியும்படிச் சொல்லவேண்டும்” என்று நினைத்தேன். எனவே நான் அவரைக் கேட்டேன் “குடும்பக் கட்டுப்பாடு என்றால் என்ன?” அவர் நன்கு விடை சொன்னார் […]