வளவ. துரையன் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து] பேராசிரியர் திருமிகு ம.இலெ. தங்கப்பா அவர்களின் படைப்புகளின் அடிப்படைகள் அன்பு, அறம் மற்றும் இயற்கை என உறுதியாகக் கூறலாம். நான் இத்தனை உறுதியாகக் கூறக் கரணியம் யாதெனில் அப்பெருமகனாரை நான் பல்லாண்டாக அறிவேன். அவரை நெட்டப்பாக்கம் பள்ளியில் பணியாற்றும் காலந்தொட்டே வளவனூர் அர. இராசாராமன் அவர்களுடன் சென்று சந்தித்திருக்கிறேன். குறிப்பாக முதலில் நான் சென்றபோது அவர் தென்மொழியிலிருந்து விலகியிருந்த நேரம். தென்மொழியாசிரியர் எழுதிய “ஐயை” […]
வேழம்னா ரெண்டு பொருள் உண்டுங்க; ஒண்ணு யானை; இன்னொண்ணு கரும்பு. பழைய தனிப்பாடல்ல ஒண்ணு வரும்; ஒரு பாணன் போயிப் பாடிட்டுப் பரிசு வாங்கிண்டு வருவான். அவன் மனைவி, “ நீ போயி என்னா வாங்கிண்டு வந்தே”ன்னு கேப்பா; அவன் யானைதான் வாங்கினு வந்திருப்பான்; ஆனா வேழம்னு பதில் சொல்வான்; ஒடனே அவ கரும்புன்னு நெனச்சுக்கிட்டு அப்படின்னா ஒடச்சித் தின்னும்பா; ஆனா இங்க வர்ற வேழம்றது ஒருவகையான புல்லுங்க. நாணல்னு சொல்லுவோம்ல; அது போல; உரையாசிரியர்லாம் […]
1. அந்தக் காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு வழக்கம் உண்டுல்ல; அதுபோல அவன் பரத்தை ஊட்டுக்குப் போயிட்டு வந்தான்; வந்தவன் சும்மா இருக்கலாம அவ தோழிக்கிட்ட போயி “நான் அங்க இருந்தப்போ நீங்க என்னா நெனச்சிக்கிட்டிருந்தீங்க?”ன்னு கேக்கறான். அந்தத் தோழி பதில் சொல்றா; ”நாட்டை ஆளற ராஜா நல்லா இருக்கணும்; நெல்லு நல்லா வெளயணும்; பொன்னு நெறய கெடைக்கணும்; காஞ்சிப்பூவும், செனையாயிருக்கற சின்ன மீனும் இருக்கற ஊர்க்காரனான நீ நல்லா இருக்கணும்; அத்தோட ஒன் தோழனும் நல்லா இருக்கணும்” […]
பாச்சுடர் வளவ. துரையன் தலைவர், இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்—607 002 “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். பெறுவதற்கு அரிய அத்தகைய மனிதப் பிறவியை எடுத்தவர்கள் இவ்வுலகில் அப்பிறவியை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அதுவன்றி, “வெந்ததைத் தின்று விதி வந்தால் மடிவோம்”என்று வாழ்தல் வாழ்வாகாது. வாழவேண்டிய முறைப்படி வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்களைத் தான் “வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. வாழவேண்டிய […]
சிறுகதை என்றால் என்ன? நாவல் என்றால் என்ன எனும் வினாக்களுக்கு இதுவரை சரியான விடை கிடைக்க வில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரே ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு ஒரு சில பாத்திரங்களுடன் படைப்பது சிறுகதை எனலாம். பல்வேறு சம்பவங்களின் கலவையாக நிறைய பாத்திரங்களுடன் தள வருணனைகள் மிகையாகப் பெற்று வருவதே நாவல் எனலாம். இன்னும் கூடச் சொல்லலாம். தனியாக மணம் வீசுமொரு மலரே சிறுகதை; பலமலர்கள் சேர்ந்து கதம்பமாகிப் பலவித மணங்களைத் தருவதே நாவல் […]
வாழ்க்கை எல்லாரையும் புரட்டித்தான் போடுகிறது. சிலநேரங்களில் காரணமே தெரியவில்லை. உலகில் நாமே கண் கூடாகப் பார்க்கிறோம். நல்லவராய் இருப்பவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். வாழ்வில் வெற்றி காண முடியாமல் திணறுகிறார்கள். அதே நேரத்தில் பல வழிகளில் எல்லார்க்கும் துன்பங்கள் செய்யும் தீயவர்கள் நல்லபடியாய்க் காட்சி தருகிறார்கள். இதற்கு என்ன விடை என்று பலரும் தேடினால் இறுதியில் விதி எனும் ஒற்றைச் சொல்லில் முடித்து விடுவார்கள் இது சான்றோர் பெருமக்களால் இன்னும் ஆராயப்படவேண்டும் என்றுதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் […]
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் பாடியருளிய சீரங்க நாயகியார் ஊசல் என்னும் நூலின் இரண்டாம் பாடல் சீரங்க நாயகியார் ஆடி அருளும் ஊசலின் அழகை வர்ணிக்கிறது. ”அந்த ஊஞ்சல் ஒரு மலர்ப்பந்தலின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஊசலைத் தாங்க பதுமராக மணிகளாலான தூண்கள் உள்ளன. விட்டமானது வைர மணிகளால் ஆக்கப்பட்டது. அதிலிருந்து தொங்கும் சங்கிலிகள் எல்லாம் தந்தத்திலாலானவை. ஊசலில் அமைக்கப்பட்டுள்ள தட்டோ மாணிக்கத்தால் செய்யப்பட்டது” என்று கோனேரியப்பனையங்கார் பாடுகிறார். ” துங்கமலர்ப் பந்தரின்கீழ் பதும ராகத் […]
”மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்பது ஒரு சான்றோர் பாடியது. ஆனால் காலம் காலமாக மாதர்தம் நிலயை எண்ணிப் பார்த்தால், அதாவது ஆண்கள் அவர்களை இச்சமுதாயத்தில் நடத்தும் விதத்தைப் பார்த்தால், [சமுதாயத்தில் மட்டுமன்று வீட்டில் கூடத்தான்] அஃதொன்றும் மாதவம் செய்து பிறக்க வேண்டிய பிறப்பு என்று சொல்ல முடியவில்லை. சகோதரர் மனைவியைத் துகிலுரிந்த கதை, மனைவியின் மேல் சந்தேகப்பட்டுத் தீக்குளிக்க வைத்த கதை, காட்டிலே குழந்தைகளுடன் தவிக்க விட்டுச் சென்ற கதை எல்லாம்தான் நமக்கு […]
பாட்டி இடித்த வெத்தல உரலும் பதுங்கி ஆடிய நெல்லுக் குதிரும் வேட்டை என்று ஓணான் அடித்ததும் வேகமாய் ஏரியில் குதித்து மகிழ்ந்ததும் மதிய வெயிலில் அஞ்சி டாமல் மரத்தில் ஏறித் தேனை எடுத்ததும் குதித்தக் குரங்கைக் கல்லால் அடித்ததும் குபீரெனச் சீற ஓடிச் சிரித்ததும் விடிய விடிய கூத்துப் பார்த்து விரலில் பள்ளியில் அடி வாங்கியதும் அடுத்த வீட்டுக் கோழி முட்டையை அறியாமல் போய் எடுத்து வந்ததும் கண்ணா மூச்சி ஆடி மகிழ்ந்ததும் கபடி ஆடிக் […]
ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டுப் பொங்கல் மலராக உதயகண்ணன் இலக்கிய மலர் வெளியிட்டு வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இதை ஒரு தவமாகச் செய்து வருகிறார். இந்த ஆண்டும் வெளிவந்திருக்கிறது இருவாட்சி. மொத்தம் 32 படைப்பாளிகளின் பல்வகையான படைப்புகள் கொண்ட இம்மலரை எஸ். சங்கர நாராயணன் தொகுத்தளித்துள்ளார். முதலில் கதைகளைப் பார்ப்போம். பாரதி கூறுவார். ”ஏடுகளில் இலக்கியத்தில் வீதியில், தெருவில், நாட்டில் காதலென்றார் களிக்கின்றார். ஆனால் வீட்டில் என்றால் வெறுக்கின்றார்”. [சொற்கள் மாறியிருக்கலாம்] இதை […]