மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் ஆகும். இப்பாசுரத்திற்குப் பூர்வாச்சாரியார்கள் மிகச்சிறப்பான அவதாரிகை அருளியிருக்கிறார்கள். கண்ணன் இச்சிறுமிகளிடம் பேசுகிறானாம். ”சிறுமிகளே! வியாசர் ’சாரீரகமீமாம்ஸை’ என்று பெரிய […]
இரு நண்பர்கள் பிரியாமல் இருப்பதைக் காட்ட ஒரு திரைப் படத்தில் விசு இப்படி வசனம் எழுதுவார். ”அவர்கள் இருவரும் நகமும் சதையும் போல” கேட்டவர் உடனே கூறுவார். “ஆமாமாம்; நகச்சுத்தி வந்தா நகம் சதையைத் திட்டும்; சதை நகத்தைத் திட்டும்” பிரச்சனை என்ப்து வளர்ந்துவிட்ட பிறகு நட்பு பிளவுண்டு இரு கூறுகளாகி விடுவது இயல்பாகி விடுகிறது. கூடிப்பழகிய காலமெல்லாம் பறந்து போய் ஒருவருக்கொருவர் கூற்றுவனாக நினைக்கத் தொடங்குகிறார்கள். அடுத்தடுத்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் சிறுவயது முதல் ஒன்றாய் […]
காலை இளவெயில் சூடாக ஒத்தடம் கொடுக்கச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தேன். சுற்றுப்புறச் சுவர் மீது ஒரு காக்கை “உள்ளே வரலாமா?” என்று கேட்பது போல் உட்கார்ந்திருந்தது. மணல் ஏற்றிய ‘டயர்’ வண்டிகள் சென்று கொண்டிருந்தன. கட்ட வண்டிகள் எனப்படும் மரச் சக்கர வண்டிகளின் காலம் முடிந்து விட்டது. காய்கறி வியாபாரி தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு போனார். அவிழ்த்து விடப்பட்ட ஆடுகள் யார் வீட்டில் மேயலாம் என்று வேவு பார்த்துக் கொண்டு சென்றன. திடீரென ஒரு பத்துப் […]
”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் உதவியின்றி எந்தத் தடங்கலும் வராமல் செய்ய முடியாத செயல்கள்தாம். அப்பப்பா, இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் எத்தனை சோதனைகள், எவ்வளவு சிரமங்கள் எல்ல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாய் முடித்தாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டான் பரமு. ’பரமேஸ்வரன்’ என்ற பெயரே ’பரமேஸ்’ என்றாகி இப்போது நண்பர் வட்டாரத்துக்குள் ‘பரமு’ என்றாகி விட்டது. எப்படிப்பட்ட பெயர் […]
வளவ. துரையன் அந்த வனாந்தரமே மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. கருங்காலி மரங்களும், தேவதாரு மரங்களும் வீசிய மெல்லிய காற்றில் கிளைகளை ஆட்டி ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தன. செடிகளும், கொடிகளும் தத்தம் பூக்களைச் சொரிந்து மண்ணை மறைத்து மலர்ப்படுக்கை அமைக்க முயன்று கொண்டிருந்தன. நீர்நிலைகளில் இருந்த முதலைகள் கரையேறி யாருக்காகவோ காத்திருப்பதுபோல் காட்சியளித்தன. தடாகத்தின் மீன்கள் தங்களைப்போன்று முதல் அவதாரம் எடுத்தவன் வரும்போது பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் துள்ளிக் குதித்தன. காய்ந்த தேக்குமர இலைகள் மெதுவாகச் சத்தமிடும் வண்ணம் அவற்றின் […]
ஆதிகால மாந்தன் இயற்கையைக் கண்டுதான் முதலில் அச்சப்பட்டான். அதனால்தான் அதைத் தெய்வமாக வணங்கத் தலைப்பட்டான். இறைவன்தான் இயற்கையின் வடிவாய் இருக்கின்றான் என்று பல சமயச் சான்றோர்கள் கருதியதால்தான் “வானாகி, மண்ணாகி, வளியாகி ஒளியாகி” என்று பாடினர். நிலம், நீர், தீ, காற்று, மண் என்று எல்லாமே நமக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம்தான் அவற்றை முழுக்கச் சுரண்டும் பணியை மெதுவாகச் செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாகக் காடு நமக்கு இயற்கை அளித்த […]
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா!உன் கோயில்நின்[று] இங்கனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்[து] அருளேலோ ரெம்பாவாய்! கடந்த 22- ஆம் பாசுரத்தில் ஆயர் சிறுமிகள் “சங்கமிருப்பார் போல் வந்தோம்” என்றார்கள். அதாவது ”அகங்காரங்கள் ஏதுமின்றி அகதிகள்போல் உன் திருவடியின் கீழ் வந்தோம்” என்று சரணாகதி செய்தார்கள். […]
”இந்த மூணு மாசத்துல நீங்க இப்ப போறது நாலாவது தடவை; இந்தத் தடவையாவது ஒரு நிச்சயம் பண்ணிட்டு வந்துடுங்க. ஆமா சொல்லிட்டேன்” என்றாள் சகுந்தலா. அவள் முகத்தைப் பார்த்தேன். மிகத் தீவிரமாய் இருந்தது. “எத்தனை மொறை போய் வந்திருக்கேன்னு சரியா கணக்கு வச்சிருக்கியே?” என்றேன் சிரித்தபடி. அவளுக்குக் கோபம் வந்ததுபோல் தெரிந்தது. “ஆமாம், இந்தக் கிண்டலுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல; நீங்க சரியாப் பேசிட்டு வரீங்களா? இல்ல, நானும் வரட்டுமா?” என்று கேட்டாள் அவள். “வேணாம், […]
திருமாலின் பெருமையை யாராலும் அளவிட்டுக் கூற இயலாது. அந்தப் பெருமை இப்படித்தான் என்று அறுதியிட்டும் சொல்ல முடியாது. மேலும் அவருக்கு உவமை கூற உலகில் எதுவுமே இல்லை. அதனால் நம்மாழ்வார் அவரை “உயர்வற உயர்நலம் உடையவன்” என்று அருளிச்செய்கிறார். அதாவது அவருடைய உயர்வின் முன்னால் மற்ற உயர்வுகள் எல்லாம் அற்றுப்போகும் அளவுக்கு அளவிட முடியாத பெருமை கொண்டவர் அவர். உவமையே காட்ட இயலாப் பெருமை கொண்டவர் அவர். இந்த உலகின் உள்ள எல்லா ஆத்மாக்களையும் […]
அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் இருபத்திரண்டாம் பாசுரம் இது. கடந்த பாசுரத்தில் “மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து” என்று தாங்கள் போக்கற்று வந்ததைச் […]