ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்! ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில் தோற்ற மாய்நின்ற சுடரே! துயிலெழாய்! மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 21- ஆம் பாசுரம் இது. கடந்த பாசுரத்தின் இறுதியில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினார்கள். அவளும் எழுந்தாள். “என்னை வந்து எழுப்பிப் பற்றிய பின் உங்களுக்குக் […]
வளவ. துரையன் ஒரு படைப்பாளன் ஒரு படைப்பை எழுத நினைக்கும்பொழுது அவன் முன்னே இரு வழிகள் காத்திருக்கின்றன. ஒன்று தன் அனுபவத்தை அப்படியே எழுதுவது அல்லது சற்று கற்பனை கலந்து எழுதுவது. மற்றொன்று பிறரது அனுபவத்தை உள்வாங்கி எழுதுவது. இந்த இரண்டாவது வழியில் பயணம் செய்வது கொஞ்சம் கடினம். ஆனால் தேர்ந்த படைப்பாளன் எல்லாவழிகளையுமே தனக்குச் சாதகமாக்கிக் கொள்வான். இரு வழிகளிலும் பயணம் செய்து தங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெற்ற படைப்பாளர்கள் பலர் உண்டு. ஆனால் […]
வளவ. துரையன் [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’ உலகம் நாம் நினைப்பதுபோல் இல்லை. பெரும்பாலும் நாம் எண்ணுவதற்கு நேர்மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிலும் முரண்கள் வழிப்பட்டதாகத்தான் அது நடந்து செல்கிறது. அது போகும்போது அதன் காலடிகளில் சிக்கி நசுங்கித் தம் வாழ்வை இழப்பவர்கள் பெரும்பாலும் ஒன்றுமே அறியா அப்பாவிகளாகவும் கிராமத்து மக்களாகவும்தாம் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாழ்வின் திரும்பிய பக்கமெல்லாம் சோகம் […]
வளவ. துரையன் “நாளை இந்த இடத்தை மாத்திட வேண்டியதுதான்” என்றான் வேலு. குடித்து முடித்த தன் தம்ளரைக் கீழே வைத்த மோகன் நிமிர்ந்து பார்த்தான். வேலு தன் கையில் இருந்த தம்ளரில் பாதிதான் காலி செய்திருந்தான். பக்கத்தில் இருந்த பாட்டிலில் சரிபாதி இன்னும் இருந்தது. ஆளுக்கு இரண்டு தம்ளர்; அதுதான் அவர்கள் கணக்கு; கண்கள் சிவக்காமல், கால்களைத் ,தடுமாற வைக்காமல், யாரையும் சந்தேகம் கொள்ள வைக்காமல் இருக்க அந்த அளவுதான் சரியாக இருக்கும் என்று அந்த அளவைக் […]
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய் மைத்தடங் கன்ணினாய் நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் பத்தொன்பதாம் பாசுரம். இந்தப் பாசுரம்தான் பட்டரின் ‘நீளாதுங்க ஸ்தநகிரி’ எனும் தனியன் ஸ்லோகம் உருவாகக் […]
பாச்சுடர் வளவ. துரையன் தமிழ் மொழியில் பண்டைக் காலம் தொட்டே உரைநடை என்னும் வகைமை இருந்து வந்துள்ளது. தொல்காப்பியர், “பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று உரைநடை வகையே நான்கென மொழிப” என்று குறிப்பிடுவதிலிருந்து உரைநடையின் இருப்பை நாம் உறுதியாக உணர முடிகிறது. ஆனால் உரைநடை நூல்கள் தொடக்கத்தில் இல்லை. அக்காலத்திய நூல்கள் எல்லாம் பெரும்பாலும் செய்யுள் வடிவில்தான் இருந்தன. சில […]
திடீரென்று வேலன் அந்தக் கேள்வியைக் கேட்பான் என்று முத்துசாமி எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் முத்துசாமி சற்று நேரம் அகழியில் கிடந்த முதலைகளைப் பார்த்தான். யாரையும் பற்றிக் கவலைப் படாமல் நான்கு ஒட்டகச் சிவிங்கிகள் சுற்றிக் கொண்டிருந்தன. இங்கிருந்து பார்த்தாலே தெரியும் வண்ணம் உள்ள புலிகளின் கூண்டருகில் நல்ல கூட்டம் இருந்தது. கடந்த மாதம் வந்த புது வரவான வெள்ளைப் புலியும் ஒரு காரணம். சிறுவர்களுக்கான ரயில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. நிழல் தரும் பெரிய […]
வளவ. துரையன் சிறுவயதிலிருந்தே எனக்குக் கிரிக்கெட் மீது கொஞ்சம் பைத்தியமுண்டு. எங்கள் தெருவின் அணியின் தலைவனே நான்தான். பிற்பாடு பெரியவனான பிறகு ஊரில் அணி ஒன்றைத் தொடங்கி வெளியூர்களெல்லாம் சென்று விளையாடிய காலம் ஒன்று உண்டு. எழுபுதுகளில் இலக்கியத்தின் மீது நாட்டம் அதிகமான போதும் கிரிக்கெட் ஆர்வம் குறையவில்லை. ஒருநாள் முழுதும் விளையாடிவிட்டு மாலையில் வேட்டி சட்டையுடன் [ இதுதான் பண்டைய தமிழ்ச் சொற்பொழிவாளர் உடை ] பட்டி மன்றம் பேசப் போயுள்ளேன். இந்த இருவித ஈர்ப்புகளினால் […]
வளவ.துரையன் சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி அலைந்து பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா மகாமகாபாத்தியாய டாக்டர் உ.வே.சா சாமிநாதையர் அவர்கள் ஆவார். அவரை மிகவும் கவர்ந்த காவியங்களில் ‘வில்லிபாரதமும்’ ஒன்றாகும். ’அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் அமைந்துள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன’ என்று அவரே எழுதியிருக்கிறார். வில்லிபுத்துரார் பாரதத்தில் கீழக்கண்ட பாடலைப் படிக்கும்போது அவருக்கு ஓர் ஐயம் தோன்றியது. ”தண்டார் விடலை தாயுரைப்பத் தாய்முன் அணுகித் தாமரைக்கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றித் தீண்டா னாகிச் செல்கின்றான் […]
வளவ. துரையன் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார். சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படுகையில் அத்தொடர் அவர் மனத்தில் பதிந்துவிடுகிறது. சிந்தாமணிக் காப்பியத்தில் சீவகன் யாழிசைத்துப் போட்டியில் காந்தருவதத்தையை வென்றான். இதனால் கட்டியங்காரன் பொறாமை கொண்டு அங்கிருந்த மன்னர்களை நோக்கிச் சில சொற்களைக் […]