வளவ. துரையன் மிகப் பெரியதாக மெகா நாவல்கள் வரத்தொடங்கிய பின்னர் சிறிய நாவல்களின் வரவு மிகவும் குறைந்து விட்டது. அதிலும் குறு நாவல்கள் என்ற வடிவம் சுத்தமாக அற்றுப் போய் விட்டது. முன்பு ’கணையாழி’ இதழ் குறுநாவல் போட்டி நடத்தி அவ்வப்போது இந்த வடிவத்துக்குப் புத்துயிர் கொடுத்து வந்தது இச்சூழலில் வையவனின் ’ஆச்சாள்புரம்’ எனும் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுதியைப் படிக்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. . ஆச்சாள்புரம் எனும் சிற்றூருக்கு வேணு ஆசிரியராகப் பணிபுரியப் பொறுப்பேற்கிறான். […]
பாச்சுடர் வளவ. துரையன் ஒரே பாசுரம் பெற்ற திவ்யதேச வரிசையில் இடம் பெறுவது திருநிலாத்துண்டம் என்னும் பெயர் பெற்ற திவ்யதேசமாகும். இத்திவ்யதேசம் பல அதிசயங்களைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டதாகும். முதலில் இத்திவ்யதேசம் ஒரு சைவத்திருக்கோயிலின் உள்ளே இருக்கிறது. ஆமாம்; இத்திவ்யதேசம் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோயிலின் உள்ளேதான் உள்ளது. இதேபோல திருக்கள்வனூர் எனும் திவ்யதேசமும் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயிலுக்குள்ளேதான் இருக்கிறது. திருநிலாத்துண்டம் மற்றும் திருக்கள்வனூர் இரண்டும் எப்படி சைவத் திருக்கோயில்களுக்குள் வந்தன என்பது தெரியவில்லை. ஒருவேளை நிலாத்துண்டத்தான் கோயிலும், […]
வளவ.துரையன் விடிந்தும் விடியாத அதிகாலைப்பொழுது. பறவைகள் கூடு விட்டுக் கிளம்பி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. பால்காரர்களின் ‘பாம்-பாம்’ சத்தம் போய் இன்னும் உறங்குபவர்களையும் விழிக்க வைத்தது. ”ஞாயிறுதானே, மெதுவாக எழுந்திருக்கலாம்” என்று எண்ணியவாறே கண்களை மூடிப்படுத்திருந்தவனைத் தொலைப்பேசி ஒலி கிளப்பி விட்டது. “வணக்கம்! யாருங்க பேசறது?” என்றேன் வழக்கம் போல. “நான்தாண்டா தமிழ்மணி பேசறேன், எங்கியும் போயிடாத, இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரேன்” “நீ வர்றது சரி, வா, என்னா செய்தியைச் சொல்லு” என்றேன் அவசரமாக. “வந்து…ஒண்ணுமில்ல” […]
வளவ. துரையன் சிறுகதை என்பது வாழ்வின் ஏதேனும் ஒரு முரணைக் காட்டிச் செல்கிறது. அந்த முரண் என்பது நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் சந்தித்திருப்பதே. அந்த முரணுக்குத் தீர்வு கண்டு வாழ்வை அமைத்துக் கொள்வதும் அல்லது அந்த முரணோடு இணைந்து போய் வாழ்வைச் சீராக்கிக் கொள்வதும் அவரவர் தேர்ந்தெடுக்கும் முறைகள். தான் கண்ட அல்லது கேட்ட நிகழ்வுகளைப் படைப்பாக்கும்போது படைப்பாளன் அந்த நிகழ்வில் உள்ள முரணை நேரடியாகவோ மறைமுகமாகவோ சுட்டிக் காட்டுகிறான். அதே நேரத்தில் அந்த முடிச்சை […]
[ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் : வளவ துரையன் ] நான் லிட்ச்சி மரத்தின் கிளயில் உட்கார்ந்திருந்தேன். தோட்டத்துச் சுவரின் மறுபக்கத்திலிருந்து கூன் விழுந்த ஒரு வயதான பிச்சைக்காரன் பறக்கின்ற வெண்மைத் தாடியுடனும், கூரிய பார்வையுள்ள பழுப்பு நிறக் கண்களும் கொண்டவனாய் என்னைப் பார்த்தான் ” உன் கனவு என்ன “ என்று என்னை அவன் கேட்டான். தெருவில் செல்லும் கந்தையான ஆடை உடுத்தியிருந்த ஒருவனிடமிருந்து வந்த அந்தக் கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. அதுவும் அவன் ஆங்கிலத்தில் […]
தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட் [ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – வளவ.துரையன் ] தரையைப் பெருக்கும் பையன் வந்து வாசல் வழியில் இருந்த தரை விரிப்பில் தண்ணீரை விசிறியடிக்கக் காற்று இப்போது குளிர்ச்சியாக வீசத் தொடங்கியது. நான் என் படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாகத் தெருவை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். மதிய வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்த புழுதி மண்ணாலான தெருவைப் பார்த்துக் கொண்டே யோசனை செய்து கொண்டிருந்தேன். ஒரு கார் வேகமாகப் போக புழுதி […]
வளவ. துரையன் ”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்” என்று மாணிக்க வாசகர் கண்ணப்ப நாயனாரைப் புகழ்ந்து பாடுகிறார். மண்ணுலகின் ஆடவர்களில் கண்ணப்பர் மிகச் சிறந்தவர் என்ற பொருளில், ”கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்” என சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாராட்டுகிறார். திருஞான சம்பந்தரோ, ”வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன், மலராகு நயனம் காய் கணையினால் கிடந்[து] ஈசன் அடிகூடு காளத்தி மலையே” என்று கண்ணப்பரின் வழிபாட்டு முறயைப் போற்றுகிறார். முற்றும் துறந்த பட்டினத்து அடிகளோ, […]
கைப்பேசி ஒலித்தது. எடுத்து யாரென்று பார்த்தேன். கோவிந்தராசனின் அழைப்புதான் அது. ”வணக்கம் கோவிந்து, சொல்லுங்க” என்றேன். ”ஒண்ணுமில்ல, அதான் நேத்திக்கு சொன்னேன்ல; சரியா மதியம் மூணு மணிக்கு வண்டி ஒங்க வீட்டுக்கு வந்திடும். நாலுபேருக்கும் ஒங்க வீட்ல டிகிரி காப்பி. அதைக் குடிச்சிட்டு கெளம்பறோம். ஆறரை மணிக்கெல்லாம் சமயபுரம். அங்கே ஆத்தாளக் கும்பிடணும். அதுக்கப்புறம் சீரங்கம். அங்க பெருமாளச் சேவிக்கறோம். ராத்திரி அங்கியே தங்கிட்டு காலைல திண்டுக்கல் போறோம்” “சரி கோவிந்து, பயணத் திட்டமெல்லாம் சரியாய்த்தான் இருக்கு. […]
[நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து] நவீன எழுத்தாளர்களில் சங்க இலக்கியம் போன்ற மரபிலக்கியப் பயிற்சி உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களிலும் சிற்றிலக்கியங்கள் பற்றியப் புரிதல் உள்ளவர்கள் மிக மிகக்குறைவு என்று உறுதியாகக் கூறலாம். அவர்களில் நாஞ்சில் நாடன் குறிப்பிடத் தக்கவர் ஆவார். தமது படைப்புகளில் ஆங்காங்கே சங்க இலக்கியவரிகளை எடுத்தாள்வது அவருக்கு மிக இயல்பாக வருகிறது. யாருமே அதிகம் படித்தறியாத, அவரே சொல்வதுபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களாக, தமிழ் விரிவுரையாளர்களாக, […]
[ இரவீந்திர பாரதியின் “காட்டாளி” நாவலை முன்வைத்து] நாவல் என்னும் வகைமை சார்ந்த இலக்கியம் பலவிதங்களில் இன்று ஆளப்படுகிறது. மிகப்பெரிய ‘மெகா’ நாவல்களின் காலமாக இது இருந்து வருகிறது. ஒரே ஒரு முடிச்சு வைத்து அதைக் கூறுவதாக இருப்பது சிறுகதை என்றும் பல முடிச்சுகள் கொண்டது நாவல் என்றும் முன்பு கூறினார்கள். இவற்றில் கூட முடிச்சை அவிழ்த்துக் காட்டி அதற்கு ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும் என்றும், வேண்டாம், வேண்டாம் வாசகனே முடிச்சை அவிழ்த்துப் பார்க்கட்டும் […]