[1999—இல் வெளிவந்த வண்ணதாசனின் “மனுஷா..மனுஷா…” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] வண்ணதாசனின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு மௌனம் ஒளிந்து கொண்டே இருக்கும். அது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும். பல வாசகர்களுக்கு அந்த மௌனம் பேசாதவற்றை எல்லாம் பேசும். அந்த மௌனத்தின் ஊடே புகுந்து பயணம் செய்து புதிய வழிகளைக் கண்டறிவதுதான் வாசகருக்குப் பெரிய சவால். அந்த சவாலில் வாசகன் வெற்றி அடையும் போது படைப்பாளருடன் அவனும் ஒன்றிப்போய் விடுகிறான். அவர் கதைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் எஸ்தரில் […]
தலைவர், இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 607002 [டாக்டர் குமார. சிவா எழுதிய “திரிகூடராசப்பக் கவிராயர்—ஓர் இலக்கியப் போக்கு” எனும் நூலை முன் வைத்து] சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை பேரிலக்கியங்களுக்கு நிகரான யாப்பமைதியும், இலக்கிய வளமும், கருத்தாழமும் கொண்டவை. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை சமயச் சார்பு நோக்கில் கடவுளர் பற்றி எழுதப்பட்டுள்ளன என்றாலும் அவற்றில் காழ்ப்புணர்ச்சி இல்லை எனலாம். இன்னும் கூடத் துணிந்து சொல்ல வேண்டுமாயின் சில சிற்றிலக்கியங்கள் அப்போது ஆண்ட குறுநில மன்னர்களைப் புகழ்வதற்காகத் தோன்றியவையாகக் […]
அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்[டு] எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் இருபத்திரண்டாம் பாசுரம் இது. கடந்த பாசுரத்தில் “மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து” என்று தாங்கள் போக்கற்று வந்ததைச் […]
வளவ. துரையன் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரனான கோனேரியப்பனையங்கார் பாடிய “சீரங்க நாயகியார் ஊசல்” எனும் நூலின் முதல் பாடல் சீரங்க நாயகிப் பிராட்டியை இந்த நிலவுலக மக்கள் சிறப்புடன் வாழ அருள் செய்யும் வண்ணம் ஊசல் ஆடுவீராக என்று வேண்டுகிறது. ”தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய” என்று ஆண்டாள் நாச்சியார் பாடியதுபோல் இப்பாடலும் அடியவர் நலத்தையே எண்ணுகிறது. ”நீராழி நிறத்த ரங்கர் அடிகள் வாழ நெடுமகுடப் பணிவாழக் கருடன் வாழப் பேராழி செலுத்திய சேனையர்கோன் […]
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறு மருங்கல் நப்பின்னை நங்காய் திருவே! துயிலெழாய்! உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 20- ஆம் பாசுரமாகும் இது. கடந்த பாசுரத்தில் ‘தத்துவம் அன்று, தகவும் அன்று’ என்று நப்பின்னையைப் பிராட்டியைக் குறை கூறி விட்டோமே. அவளுக்குச் […]
[திலகன் எழுதிய “புலனுதிர் காலம்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து] கவிதையைப் பற்றிக் கூற வந்த கண்ணதாசன் ஒரு முறை சொன்னார். ”உண்மை கால், பொய் கால், ஒளிவு கால், மறைவு கால் சேர்ந்ததுதான் கவிதை”. திலகனின் ’புலனுதிர்காலம்’ கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வந்தது. மேற்கூறிய அனைத்து வகைகளையும் உள்ளடக்கியதாக திலகன் தன் கவிதைத் தொகுப்பை முன்வைத்துள்ளார். ஒரு படைப்பாளனின் படைப்பு எதைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதை இப்போது புறக் காரணிகள்தாம் தீர்மானிக்கின்றன. […]
சோழ மன்னன் உலா வருகிறான். அவன் மீது காதல் கொண்ட ஒரு தலைவி அதைக் கேள்விப்பட்டாள். அவன் ஒவ்வொரு தெருவாக வந்து போவதற்குள் நடு இரவு வந்து விடும். எனவே அவன் தன் வீட்டுக்குப் பக்கத்தில் வரும்போதே அவனைக் கண்டு விட தலைவி எண்ணுகிறாள். இதோ வீட்டுக்கு அருகில் மன்னன் வரும் ஒலிகள் கேட்கின்றன. மனமானது அந்த மன்னனைக் காணும் ஆசையால் தெரு வாசலுக்கு விரைகின்றது. ஆனால் நாணமானது அந்த மனத்தைப் பின்னுக்கு இழுத்து […]
மதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான் நினைவுக்கு வரும். ஆனால் மதுரை மாநகரம் ஸ்ரீவைஷ்ணவம் சார்ந்த திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திருக்கூடல் எனும் பெயரில் திகழ்ந்துகொண்டுள்ளது. பாண்டிய நாட்டின் பதினெட்டுத் திவ்யதேசங்களில் அதுவும் ஒன்றாகும். ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ எனும் பெயரில் வழங்கும் மரபு ஒன்று உண்டு. இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும் மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர். தொண்டை நாட்டுப் […]
[ வளரி எழுத்துக் கூடம் வெளியிட்டுள்ள “பெண்பாக்கள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து] ஆண் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்கையில் அதில் அப்படைப்பாளரை உள் நிறுத்திப் பார்க்காத வாசக உலகம் பெண் படைப்பாளி என்றால் அவரை அப்படைப்பின் மையமாக நிறுத்திப் பார்ப்பது இலக்கிய உலகின் மிகப்பெரிய அவலம். ஒரு படைப்பின் ஓட்டத்தில் வரும் உறுப்பு வருணனைகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை அப்படைப்பின் கருவைக் கொண்டே உணர வேண்டும். எழுத்தாளர் தன் கூற்றாக வெளியிடும் படைப்பில் கூட ஆண் பெண்ணாகவும், […]
இந்நூல் பெரிய கோயில் என்று போற்றப்படும் திருவரங்கத்தில் எழுந்தருளி உள்ள பெரிய பிராட்டியான சீரங்க நாயகித்தாயாரை மங்களாசாசனம் செய்யும் நூலாகும். இதை யாத்தவர் கோனேரியப்பனையங்கார் ஆவார். இவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பேரன் என்பது இந்நூலின் இறுதியில் உள்ள தற்சிறப்புப் பாயிரத்தால் அறிய முடிகிறது. இதோ அந்தத் தற்சிறப்புப் பாயிரம்; தார்அங்கத் திருவரங்கர்க்கு ஊசல் பாடிச் சாத்தினான் பேரனெனும் தன்மை யாலும் ஆருங்கண்டே தெளியும் அவன் சொல் பாட்டின் அதிசயத்தை அறிவன்என்னும் ஆசை யாலும் […]