சிலப்பதிகாரத்தின் கதைத்தலைவன் கோவலன் புகார் நகரை விட்டுப் பிரிந்து செல்கிறான். அதனால் அந்நகர மக்கள் வருந்துகின்றனர். இதற்கு உவமை கூற வந்த இளங்கோ அடிகள் இராமபிரான் அயோத்தியை விட்டுப் பிரியும் போது மக்கள் எவ்வாறு துன்பம் அடைந்தனரோ அதேபோல மக்கள் பெருந்துயருற்றனர் என்கிறார். “அருந்திறல் பிரிந்த அயோத்தி போல பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்” என்பன இளங்கோ எழுதிய பாடல் அடிகளாகும். பகவான் நாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியெனும் பாகத்தை […]
———-வளவ.துரையன்———- ம. ராஜேந்திரன் தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றி ஓய்விற்குப்பின் இலக்கியத் தாகத்தால் கணையாழிக்குப் புத்துயிர் ஊட்டி வருபவர். எட்டுக் கதைகள் கொண்ட தொகுப்பாக “சிற்பியின் விதி” வெளிவந்துள்ளது. மனிதனையும் நாயையும் வைத்து முதல் கதை “கடவுளும் டைகர்சாமியும்” பின்னப்பட்டுள்ளது. கடவுள் ஒருநாள் மனிதனை நாயாகவும் அம்மனிதனின் நாயை அவனாகாவும் மாற்றுகிறார். ஆனால் நாய் மனிதனாக இருக்க விரும்பவில்லை. மீண்டும் நாயாகவே விரும்புகிறது. மனித வாழ்வும் நாயின் வாழ்வும் ஒன்றாக இருக்கிறது என்றே நாய் […]
வளவ. துரையன் சிறந்த வாசகராக, நேர்மையானவிமர்சகராக, இன்னும் கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக என்று பல்வேறு தளங்களிலும் சுமார்அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத்தன் முத்திரையைப் பதித்து வரும் மூத்த எழுத்தாளர்தி.க.சி தனது கருத்துகளை எண்ணித் துணிந்து எழுதிய காரணத்தாலேயே அவர் பலவித எதிர்வினைகளையும்சந்திக்க நேர்ந்தது. “ தனி நபர்களின் திறமைகளை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில்அவரின் குறைகளையும் மூடி மறைக்காமல் சுட்டிக் காட்டியதாலேயே தி.க.சியின் எழுத்துகள்புத்தகங்களாக வெளிவராமல் போய்விட்டன “ என்னும் வல்லிக்கண்ணனின் கூற்று சாலப்பொருத்தமானஒன்றாகும். இந்தஆண்டின் தொடக்கத்தில் […]
பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என நிலப்பகுதியை வகைப்படுத்தி இருந்தனர். அந்தந்த நிலங்களின் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் செய்யும் தொழில்களும் நடந்து வந்தன. பாலை நிலத்தில் வாழ்வோர் விவசாயமோ வேறு தொழில்களோ செய்ய இயலாச் சூழலில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அந்நிலவழிச் செல்பவரிடம் வழிப்பறி செய்து வாழ்வை நடத்தினர். இவர்கள் காலச் சூழலில் வேறு நிலங்களுக்குக் குடியேறியபோதும் பிறர் பொருளைக் களவு செய்யும் தொழிலை நடத்த நேர்ந்தது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சில கிராமங்களில் வாழ்ந்து […]
வளவ.துரையன் ஒளிவிடும் இலட்சியவாதம் ’’உண்மை மனிதர்களின் கதைகள்’’ எனும் அறிவிப்புடன் வெளிவந்திருக்கும் ஜெயமோகனின் சிறுகதைத்தொகுப்பு ‘’அறம்’’ புத்தகத்தை நேர்த்தியான முறையில் வெளியிட்டிருக்கும் ‘வம்சி பதிப்பகத்திற்குப் பாரட்டுகள். ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’’என்றுவாழாமல் கிடைத்த வாழ்வை ஒரு இலட்சியத்திற்காக வாழ்ந்து காட்டியவர்கல்ளை அடையாளம் காட்டி இருக்கிறார். எவ்வளவு உயர்ந்த மனிதராக இருப்பினும் அவர் பற்றிய பதிவை பிறந்தது படித்தது செய்தது இறந்தது என்று எழுதினால் வாசிக்கத் தோன்றும்.அப்படி இல்லாமல் அவரின் ஆளுமைகளை வெளிப்படுத்தும் வ வண்ணம் சிறுகதைகளாக […]