ஜெயமோகனின் அறம் – ஒரு பார்வை

வளவ.துரையன் ஒளிவிடும் இலட்சியவாதம் ’’உண்மை மனிதர்களின் கதைகள்’’ எனும் அறிவிப்புடன் வெளிவந்திருக்கும் ஜெயமோகனின் சிறுகதைத்தொகுப்பு ‘’அறம்’’ புத்தகத்தை நேர்த்தியான முறையில் வெளியிட்டிருக்கும் ‘வம்சி பதிப்பகத்திற்குப் பாரட்டுகள். ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’’என்றுவாழாமல் கிடைத்த வாழ்வை ஒரு இலட்சியத்திற்காக வாழ்ந்து காட்டியவர்கல்ளை…