This entry is part 8 of 8 in the series 28 மார்ச் 2021
அழகர்சாமி சக்திவேல்
வெறி என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் பெரும்பாலும் ஆவேசம் என்று பொருள் கூறுகின்றன. லிப்கோ அகராதி வெறி என்ற சொல்லுக்கு முருகன் பூசை என்று கூட இன்னும் ஒரு பொருளையும் காட்டுகிறது. பழங்காலத்தில் வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளை வழங்கி வந்தனர். ’வெறிகமழ் பொழில்’ ‘வெறிமலர்’ என்றெல்லாம் பழைய செய்யுள்களில் காண முடிகிறது. ஒரு குறியையே நோக்கிச் செல்லும் உறுதியான மனப்போக்கும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் தன் இயல்பு மாறுதலும் வெறி எனப்படும். […]
என்னும் சமண்மூகரும் நான்மறையோர் ஏறும், தமிழ்நாடனும், ரகுமரபில் பொன்னும் பெருநம்பி குலச்சிறையும் போய் வைகையின் வாதுகளம்புகவே. 211 [மூகர்=வறியர்; நான்மறை=நான்கு வேதங்கள்; ஏறு=காளை; ரகு=சூரியன்; மரபு=குலம்; வாது=போட்டி; களம்=இடம்] என்று சூளுரைத்த சமணர்களும், நான்கு வேதங்கள் கற்ற ஆண்சிங்கம் ஞானசம்பந்தரும், தமிழ்நாடனாகிய மதுரைப் பாண்டியனும், சூரியகுலத் திலகமான குலச்சிறையாரும் வைகை ஆற்றின் கரையில் வாதுபோர் நடக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர். கனலில்புகும் ஏடுஇறை கண்ணில் மதன் […]
வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் காலியாக்குகிறேன். குதிரை கனைப்பு தளர்கிறது. வயிறு காலியானால் வாய் எல்லாம் வேள்வி செய்யும் ஒரு குவளை மதுகொண்டு நிரப்பிப்பார் தென்றலில் மயங்காமல் தேடித்தேடிக் கொண்டுவா. பல்லுயிர் ஓம்பப்பழகு. யானையின் துதிக்கையில் தானமாகும் தானியங்கள் களிறுகள் எப்போதும் அசைந்து அசைந்து வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கும். அப்பொழுதும் அவற்றின் கவனம் அங்குசத்தின்மீதே இருக்கும். எல்லாமே தேடிப்பார்த்தால் வயிற்றை நிரப்புவதே வாய்ப்பான தொழில்
அந்தக் கவிஞன் கோடுகளை முக்கியமாக நினக்கிறான். அவன் இணைகோடுகள் என எண்ணிக் கரம் கோர்த்தவை குறுக்கு வெட்டுக் கோடுகளாய் மாறியது அவனுக்கு ஒரு சோகம். மணமக்களை இணைகோடுகளாய் என்று வாழ்த்துவது என்றுமே சேர முடியாதவர்கள் என்றுதான் பொருள்படும். அப்படி வாழ்த்தப்பட்டவர்கள் இன்று வழக்கு மன்றப்படியில் நிற்கிறார்கள். தண்டவாளங்களும் மேலே தொங்கும் மின்சாரக் கம்பிகளும்தான் ஆசிரியர் இணைகோடுகள் என்று சொல்லித் தந்தார் இரண்டுமே ஆபத்தானவை. குறுக்கு வெட்டுக்கோடுகளும் வாழ்வில் முக்கியமானவை. அனுபவம் கற்றுத் தருபவை கண்டிப்புகளும் சங்கடங்களும் அனுபவம்தானே […]
மருத்துவர் அவனைக் காலையில் நடக்கச் சொல்லி விட்டார் நோயில்லை தற்காப்புதான் நடக்கும்போதும் சிந்திக்க வேண்டும் என்பது அவன் எண்ணம் அப்போது புதிய கருத்துகளும் கவிதைகளும் தோன்றும் ஆனால் சரியாக நடக்க வேண்டும் நாம் சரியாக நடந்தாலும் வாகனங்கள் மீது கவனம் தேவை. காலைநடையில்தானே இப்போதெல்லாம் வெட்டுகிறார்கள் வலப்புறம் நடப்பதுதான் சிறந்தது என்பார் ஒரு சிலர் நடை என்றால் ஒழுக்கம் என்று பொருள் கூறுவர். இங்கும் பிறரின் நடைகளே நம் நடையை வழி நடத்துகின்றன பொற்கொல்லன் வருவதை ‘விலங்கு […]
வல்லம் தாஜ்பால் நாடறிந்த கவிஞர். கேட்டோர் பிணிக்கும் தகைமையாய் கேளாரும் வேட்ப மொழிவதாய்ப் பேசும் ஆற்றல் உள்ளவர். நகைச்சுவையோடு கருத்துகளை மனத்தில் பதியவைக்கும் கலை கைவரப் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாகப் பழகுதற்கு இனிய மனிதநேயம் மிக்க பொதுவுடைமைச் சிந்தனை கொண்ட கவிஞர். அவருடைய ஆறு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின் ஏழாவது தொகுப்பாக, “கம்பன் கவியரங்கில்……” என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது. பல கவிஞர்களின் கவியரங்கக் கவிதைகள் நூலாக வெளிவந்துள்ளன. ஆனால் நானறிந்து இதுபோல நூல் வந்ததில்லை. […]