author

தீ உறு மெழுகு

This entry is part 3 of 9 in the series 20 டிசம்பர் 2020

                         நெருப்பில் இடப்பட்ட மெழுகு கொஞ்சம் கொஞ்சமாய் உருகிக் கரைந்து இல்லாமல் போகும். மெழுகு முழுதும் கரைந்து போனபின்னும் அந்த இடத்தில் அந்த மெழுகு இருந்ததற்கான அடையாளம் மிஞ்சி நிற்கும். இந்த மெழுகை உவமையாகக் காட்டி ஐங்குறு நூறு ஒரு காட்சியை விளக்குகிறது. தலைவன் ஒருவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையர் வழி செல்கிறான், அங்கே அவர்களுடன் தங்கி இருக்கிறான். பின் ஒரு நாள் அவன் தன் தலைவியை நாடி வருகிறான். அவன் தங்கலை விட்டுவிட்டுப் […]

எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்

This entry is part 8 of 10 in the series 6 டிசம்பர் 2020

                                                                    எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு அண்மையில்  வெளியாகி உள்ளது. சொற்கூடல் என்னும் பெயரில் வெளியாகி உள்ள இத்தொகுப்பில் மொத்தம் 25 கட்டுரைகள் உள்ளன. “அம்பேத்கரைப் பயிலுவோம்” முதல் கட்டுரை விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டுள்ளது. எஸ்ஸார்சி இக்கட்டுரையில் கூறுபவை சில புதிய கருத்துகள்தாம். அம்பேத்கர் அரிசனங்கள் கோயிலில் நுழைவதை விட அரசியல் உரிமை பெறுவதுதான் முக்கியம் என்று கருதினார். “there is nothing in the entry of tempies” என்பது அம்பேத்கரின் கூற்று. மேலும் காந்தியடிகளை […]

புள்ளிக்கள்வன்

This entry is part 3 of 14 in the series 15 நவம்பர் 2020

                                                                        பண்டைய இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. ஐங்குறுநூறு நண்டைக் கள்வன் எனும் பெயராலே சுட்டிக் காட்டுகிறது. சில நண்டுகளின் மீது புள்ளிகள் இருக்கும். ஆதலால் நண்டைப் புள்ளிக்கள்வன் என்னும் அடைமொழியால் ஐங்குறுநூறு சுட்டிக் காட்டுகிறது. மருதத்திணையின் மூன்றாம் பத்திற்குக் கள்வன் பத்து என்றே பெயராகும். இப்பகுதியில் உள்ள அனைத்துப் பாடல்களிலும் கள்வன் பெயர் காணப்படுவதால் இப்பகுதி கள்வன் பத்து என்னும் பெயரைப் பெறுகிறது.             ”முள்ளி நீடிய […]

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200

This entry is part 6 of 13 in the series 8 நவம்பர் 2020

                              தண்ணார் மதியக் கவிகைச்செழியன்                         தனிமந்திரிகாள்! முனிபுங்கவர் ஓர்                   எண்ணாயிர வர்க்கும் விடாத வெதுப்பு                             இவனால்விடும் என்பது இழிதகவே.          [191]      [தண்ணார்மதியம்=குளிர்ச்சியான முழுநிலவு; கவிகை=குடை; விடாத=விலகாத; வெதுப்பு=சூடு; விடும்=நீங்கிவிடும்; இழிதகவு=அறியாமை]        ”முழுநிலவின் குளிர்ச்சி போல வெண்கொற்றக் குடை கொண்ட, பாண்டிய மன்னனின் பெருமை உடைய அமைச்சர்களே! சமண முனிவர்கள் எட்டாயிரம் பேர்க்கும் விலகாத இந்த வெப்பநோய் இந்தச் சிறுவனாகிய சம்பந்தனால் நீங்கிவிடும் என்பது அறியாமையே ஆகும்.” =====================================================================================                    என்றார்;அவர் என்றலுமே […]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 6 of 13 in the series 25 அக்டோபர் 2020

                                                      உவரிப்பரு முத்தம் நிரைத்த திருப்                               பள்ளிச்சிவி கைப்புடை உம்பர்வர                         கவரிச் சிறுதென்றல் அசைப்ப மிசைக் கொற்றக் குடைவந்து கவிப்பவுமே.          [181] [உவரி=கடல்; பரு=பெரிய; பள்ளி=இடம்; சிவிகை=பல்லக்கு; உம்பர்=வானின்தேவர்; கவரி=விசிறி; மிசை=மேல்;கவிப்ப=மூட]       கடலிலிருந்து சிந்திய பெரிய நல்ல முத்துகள்கொண்டு இழைக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்து வானத்துத் தேவர்கள் எல்லாரும் உடன்சூழ்ந்து வரத்தென்றல் காற்றானது சாமரம் வீச, மேலே வெண்கொற்றக் குடை விரித்து நிழல்தர திருஞானசம்பந்தர் புறப்பட்டார். =====================================================================================                  மேகத்தொரு பந்தர் எடுத்து உடுவாம்         […]

ஒற்றைப் பனைமரம்

This entry is part 10 of 14 in the series 18 அக்டோபர் 2020

உள்ளே போவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எல்லாக் கதவுகளும் திறந்துகொண்டு வருபவரை விழுங்கிவிடக் காத்திருக்கின்றன சிலர் ஏதேனும் ஒருவழி அறிந்து உட்புகுகிறார்கள் அவர்கள் நுழைந்தவுடன் கதவுகள் தாமாக மூடிக்கொள்கின்றன தட்டினாலும் திட்டினாலும் திறக்காதவை அவை அதன் உரிமையாளன் ஆசைக்கயிறு வீசி அலைக்கழிக்கிறான் அதன் காவல்காரனின் கண்களில் உங்களின் வரவு ஆசைக்கங்குகளை ஏற்றுகிறது எருமையும் கூகையும் எங்கும் அலைய நீங்களோ ஒற்றைப் பனைமரம் நிலைக்குமென நம்புகிறீர்கள்

கூகை

This entry is part 9 of 14 in the series 18 அக்டோபர் 2020

                  வலிக்காமலே அடிக்கலாம் என வார்த்தையாடினர் அடித்தல் என்பதும் கடுமையான அன்பின் வழி அப்பா அம்மாவிடமும் அண்ணனிடமும் என்னிடமும் அடையாளம் காட்டியது வசவுகள் அடியைவிட வாழ்வில் மிகவும் ஆபத்தானவை வழியெல்லாம் அடைத்துவிடும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வழிகளை மூடக்கூடாது வானத்து இடியினால் வழிகின்ற வசவும் வலிக்காமல் அடிக்கின்ற மின்னலின் வீச்சும் அடையாளம் காட்டுவது ஆலமரப் பொந்திலிருக்கும் அழகான கூகையைத்தான் ===================================

கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 11 அக்டோபர் 2020

நிழல்                           என்னைப்போலவேஅவனும் கவிதைஎழுதுகிறான் கட்டுரைவரைகிறான் மேடையில்பேசுகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே என்னைப்போலவே கோபப்படுகிறான்லே லேசாகச்சிரிக்கிறான் உறவுகளைநேசிக்கிறான் நட்புகளைநெருங்குகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே அவனும்என்னைப்போலவே மாலதியைநேசிக்கிறான் நாடிவந்தமல்லிகாவை வெறுத்தொதுக்கினான் தேடிச்சென்று புகழடையவிரும்பாதவனை நீயார்எனக்கேட்டேன் நான்தான்உன்நிழல்என்றான் ============================================================================ எழுதுதல்                                 எழுதவேண்டும் ஆமாம்நிறுத்தாமல் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல்உன்னை மறந்துவிடுவார்கள் அதுமட்டுமன்றுஉன்னை மிதித்துஅடித்துப் போட்டுவிடுவார்கள் நீஇருந்தஇடமே தெரியாதபடிக்கு சுவடுகளைஎல்லாம் சுனாமிவந்ததுபோல அழித்துவிடுவார்கள் ஆகவே ஏதாவதுஎழுதிக்கொண்டே இருக்கவேண்டும் புரியவேண்டும்என்பதில்லை புரிந்ததுபோல்எழுதவேண்டும் புரியாததுபோலவும் எழுதவேண்டும். எப்படியோ எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் உன்னிடத்தைப்பிடிக்க அதோஒருவன்வருகிறான் அவன்வந்துஉன் கையைமுறிப்பதற்குள் எழுது      […]

இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து

This entry is part 6 of 12 in the series 4 அக்டோபர் 2020

                             [எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து] சிறுகதை, கட்டுரை, புதினம், கவிதை, மொழிப்பெயர்ப்பு எனப் பலதுறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர் தோழர் எஸ்ஸார்சி. அவரின் அண்மை வெளியீடு “இன்னும் ஓர் அம்மா” எனும் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் பதினாறு கதைகள் அடங்கி உள்ளன. அவற்றில் முதல் ஒன்பது சிறுகதைகள் அம்மா பற்றி உள்ளன. அம்மாபற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே இருக்கலாம் அன்றோ? ”தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாய் உடன் அணைப்பள்” […]

அருளிசெயல்களில் பலராம அவதாரம்

This entry is part 10 of 17 in the series 27 செப்டம்பர் 2020

இந்துமதத்தில், பலராமன் கிருஷ்ணரின் அண்ணன்ஆவார்.இவர் பலதேவன் , பலபத்திரன், கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமன் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதிசேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவருக்கு சங்கர்ஷனர் என்ற பெயரும் உண்டு. இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவி என்ற அவரின் முதல் மனைவிக்கும் பிறந்தவர். இவரது மனைவியின் பெயர் ரேவதி, இவரின் தங்கையின் பெயர் சுபத்திரை ஆவாள். ஆழ்வார்கள் தம் அருளிச்செயல்களில் ஒரு சில இடங்களில் பலராம அவதாரத்தைப் போற்றுகின்றனர். பெரியாழ்வார் பலராமனை “வெள்ளிப் பெருமலைக் குட்டன்” என்று குறிப்பிடுவார். திருமங்கையாழ்வார் திருநறையூர் திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது பலராமனின் நிறத்தைப் போற்றுகிறார். ”திருநறையூர் நிறைய சோலைகளை உடையதாகும். அச்சோலைகளில் பல சுளைகளை […]