டிசம்பர் 2007இல் [பெங்களூரில்] மறைந்த நடனக் கலைஞர் சாந்தா ராவின் நினைவாக அண்மையில் சென்னை நாட்டுப்புறவியல் உதவி மையத்தில் அவர் மீது ஆழ்ந்த அபிமானம் கொண்ட புகைப்படக்காரரும், நடன விமர்சகருமான அசோக் சாட்டர்ஜியின் உரையும், சாந்தா ராவ் குறித்த சில ஆவணங்களின் திரையிடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மங்களூரில் பிறந்து மகராஷ்டிரத்தில் வளர்ந்து தென் இந்திய நடனத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இளம் வயதிலேயே கேரளத்துக்கு வந்து அதன் கலைச்சூழலில் ஒன்றி அங்கு மோகினியாட்டத்தையும், கதகளியையும் கற்று […]
பாதல் சர்க்காருடைய மறைவுக்குப் பிறகு அவர் குறித்து வெளிப்படுத்தப்படும் பல்வேறு உணர்வுகள் பாதல் சர்க்காரின் பொருத்தப்பாடு இன்றைய சிக்கலான சமூக கலாச்சார சூழலில் எப்படி வைத்து மதிப்பிடப்படுகிறது என்பது குறித்த அடிப்படையான பல கேள்விகளை எழுப்புகின்றன. ஏற்கனவே பாதல் சர்க்காரின் நாடகப் பட்டறையில் பங்கேற்றவரும் நாடகச் செயல்பாட்டாளருமான அ.மங்கை பங்கேற்ற குழுக்களின் நிலைப்பாடுகள் பற்றி 1993ம் ஆண்டிலேயே தன்னுடைய கட்டுரையில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். தன்னுடைய படைப்புச் செயல்பாடுகளை காலவோட்டத்தில் பொருத்திப் பார்த்துத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கும் ஒரு […]
’வெளி’ ரங்கராஜன் இன்றைய பின் – நவீன காலகட்டத்தில் புனைவு எழுத்துக்களுக்கும் அ-புனைவு எழுத்துக்களுக்கும் இடையிலுள்ள இடைவெளிகள் மறைந்து அ-புனைவு எழுத்துக்களின் இலக்கியப் பரிமாணம் அதிகமாக உணரப்படும் நிலை உள்ளது. வாழ்வுக்கும், புனைவுக்கும் இடைப்பட்ட கோடுகள் விலக்கப்பட்டுக்கொண்டே வரும்போது புனைவு குறித்த பிரமைகள் நீங்கி இரண்டும் இணையாகப் பயணிக்கும் நிலைகள் உருவாவதோடு ஒரு செறிவான படைப்பு முயற்சி வடிவ நிர்ணயங்களைக் கடந்து வாழ்வை அண்மைப்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் கவிஞராக அறியப்பட்டுள்ள வைதீஸ்வரனின் இக்கட்டுரைகள் கவிதைக்கும், […]