“யூ ஆர் அப்பாயிண்டட் “என்கிற புத்தகம் சமீபத்தில் வாசித்தேன். இதனை எழுதிய திரு. பாண்டியராஜன் மாபா என்கிற மனித வள நிறுவனத்தின் தலைவர். தனது 25 ஆண்டு அனுபவத்தையும் வைத்து இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகம் என்பது குறித்த இந்த புத்தகம், பயன் தரக்கூடிய பல தகவல்களை கொண்டுள்ளது. மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகம் ப்ளஸ் டூ முடித்து அடுத்து என்னை படிப்பில் சேரலாம் என்று யோசிக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் […]
தனது தம்பியைத் தேடி அலையும் ஒரு நடுத்தர வயது முஸ்லீம்,ராணுவத்தில் சேர மறுத்து பாடகனாக விரும்பும் ஒருவன்,தனது ஆடையை எப்போதும் தானே நெய்ய இயலாத ஒரு நெசவாளி,அடுத்த மாசம் சேர்த்து தாரேன் என்று சொன்னாலும் இணைப்பைத் துண்டித்து செல்லும் ஒரு சாதாரண கேபிள் டிவி’க்காரன், தனது துணை திருநங்கை உயிருக்கென எத்தனை முறை வேணாலும் உங்ககூடப்படுக்கிறேன்னு , சுகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்கிது பாரய்யான்னு சொல்ற ஒரு பரத்தை, இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு யுவனின் பலமான பின்னணி […]
தமிழ் மொழி தமிழர்களுக்கான உயிர், உடல், இனம் சார்ந்த அடையாளம். தமிழ்மொழியின் உயர்வு, வளர்ச்சி, அதன் வளமை அத்தனைக்கும் அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெற்ற, படைக்கப்பெறும் இலக்கண இலக்கியங்கள் உறுதுணையாக இருந்துவருகின்றன. தமிழ்மொழியின் சிறப்பு அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெறும் இலக்கியங்களில் உறைந்து கிடக்கிறது என்பது கருதத்தக்கது. செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும் ஒரு சிறப்புக் கூறு நடுவுநிலைமை என்பதாகும். இக்கூறு தமிழின், தமிழர்களின் நடுவுநிலைப் பண்பை வெளியுலகிற்கு எடுத்துரைப்பதாக உள்ளது. பட்டினப்பாலை என்ற பத்துப்பாட்டு நூலில் தமிழர்களின் நடுவுநிலை […]
1. கேள்வி (தீபம்): தாங்கள் எழுத்தாளர் வாழ்க்கையைப் பெரிதும் விரும்புகிறீர்களா? பதில்: இந்தக் கேள்விக்கு எப்படி விடை சொல்லுவது? எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பிழைப்புக்கு முக்கியத்துவம் குறையும். பிழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எழுத்துக்கு முக்கியத்துவம் குறையும். இந்த இரண்டையும் சரிகட்ட முயன்று கொண்டிருக்கிறேன். 2. கேள்வி: எந்த நேரத்தில் அதிகம் எழுதுகிறீர்கள்? பதில்: பெரும்பாலும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து எழுதுவதே என்னுடைய பழக்கமாகும். தொடர்கதை எழுத வேண்டிய நாள் என்று வாரத்தில் ஒரு நாளைத் திட்டப்படுத்திக் கொள்வேன். […]
யுத்த காண்டம் – நான்காம் பகுதி “ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம். சமுதாயம் அல்லது மனித குலம் என்று நோக்கும் போது ஒரு அரசன் அல்லது அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டிய முறை அவன் ஒரு முன் உதாரணமாகப் […]