சூர்யா நீலகண்டன் அந்த குழந்தை அப்பாவிடம் கூறியது அதற்கு ஏன் மீசை வளரவில்லை என்று. அப்பா அதனிடம் கேலியாக மூன்றில் எங்கு மீசை என்று. அப்பாவை கேட்ட அப்பாவிக் குழந்தை தன் செல்லப் பூனையிடம் கேள்வியாக இரண்டில் உனக்கு மட்டும் எப்படி மீசை என்றது. திடீரென பூனையின் மீசையிலேறிய கௌரவத்தில் அப்பாவின் தோரணை அதன் உறுமலில் உருவம் கொண்டது. சூர்யா நீலகண்டன்
இத்தோடு இது நின்றிடுமா.. என்றும் தொடரும் தொடர் கதையா- கேட்கிறான் ஏமாந்த ஒருவன் ! -செண்பக ஜெகதீசன்..
குவிந்த விரல்களூடே குறுக்கும் நெடுக்குமாய் சிவந்த ரேகைகள் வழிகிற உள்ளங்கைச் சிறைக்குள் படபடக்குஞ் சிறுவண்ணாத்தி புலன்களுக்குள் குவியமிலா நெடுங்கனவுச் சிதறுகை. கரைந்திடுங் கணங்களில் வர்ணங்களின் பிசுபிசுப்பும் படபடப்பின் அமர்முடுகலும் ஒருசேர உணர்த்திய விபரீதங்களின் நடுக்கங்களோடு சடாரென விரியும் பிஞ்சுவிரல்களே வரைந்திடுமோ விண்ணளவுக்குமான அதன் விடுதலையை. கிண்ணியா எஸ். பாயிஸா அலி
தொடங்கத்தயங்கி நின்ற எனது காற்புள்ளிகள் உனது மேற்கோள்கள் தொடத்தயங்கும் உனது பதங்கள் எனது வரிகள் தர்க்கங்களைக்கடந்து நிற்கும் உனது விவாதங்கள் எனது வாக்கியங்கள் பொருளை வெளிச்சொல்ல தாமே நாணி நின்ற உந்தன் சொற்கள் எனக்கு இடைவெளிகள் நீ விட்ட இடத்திலிருந்து நான் துவங்கினால் அது கவிதை நீ துவங்கினால் ? – சின்னப்பயல் ( chinnappayal@gmail.com)
யன்னல்கள் ஏதுமற்றிருந்த அந்த ஒற்றையறையின் கதவுகள் சாத்தப்பட்டே இருந்தன எப்போதும் அலறல்களும் கூச்சல்களும் அங்கே கசிய விடப்பட்டிருக்கும் ஒலித்துகள்கள் ஒவ்வொரு அணுவிலும் ஏற்றப்பட்ட உடல் அதிரத்துவங்கும் மௌனமான நேரங்களில் கூட செவிகளில் ரீங்காரமிடும் அந்த அழுகையின் ஒலி அவளிலிருந்து அந்த அறைக்கு விடுதலை தந்தது ஒர் மரணம் மீண்டும் பூட்டப்பட்ட அந்த அறைக்குள் அவள் தனித்து கூச்சல்களும் அலறல்களும் அழுகைகளும் மீண்டு வரமுடியாத் தொலைவொன்றில் .. ஷம்மி முத்துவேல்
எதேச்சையாக எதிர்ப்பட்டவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் எங்கெனத் தெரியவில்லை அவரும் கடந்து சென்றுவிட்டார் இனி ஞாபகம் வந்தும் பயனில்லை காற்று அதன் போக்கில் போகிறது மனதை அதைப் போல் கட்டவிழ்த்து விடமுடியுமா இந்த மழை வேறு நேரங்கெட்ட நேரத்திற்கு வந்து தொலைக்கிறது குடையை எங்கே வைத்தேனென்று தெரியவில்லை புத்தகங்களைப் படித்து கண்களை களைப்படையச் செய்தாலும் தூக்கம் வந்தபாடில்லை தினமும் சூரிய நமஸ்காரம் செய்கிறேன் என் உடலை எரிக்கப்போகும் நெருப்பு அவனிடமிருந்து தானே தோன்றியது என்பதாலா.
01 சாந்தியா அது? சாந்திதான் அது. சாந்தி என்பது எது? o 02 படிப்பதா? படைப்பதா? O 03 எழுத இருக்கிறது இன்னும் ஒரு பாதி. போய்விடுமோ ப்ரூப் ரீடிங்கிலேயே மீதி வாழ்வு? o 04 வெகு எளிதாக போய்வருகிறான் வெளிநாடுகளுக்கு சக எழுத்தாளன். கடை பாக்கிக்காக கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான் கவி சாம்ராட். o
ஆரம்பம் அங்கு இல்லை எனினும் பயணம் அங்குதான் தொடங்கியது போலிருக்கிறது. அரை இரவின் முழு நிலவாய் தயக்க மேகங்கள் தவிர்த்து சம்மதித்த பின்னிருக்கைப் பயணம் முன்னிறுத்திய காதலின் சேதி இருட்டினுள் பொதிந்து வாகனச் சக்கரத்தோடு சுழன்றது. மௌனமே சங்கீதமாய் வழிந்து சன்னமாய் எழுதிக் கொண்ட சித்திரமாய் நீ… முரணாய் அதிர்ந்து கொண்டிருந்த வண்டியின் லயமாய் நான்… எனப் பயணித்த அந்த வேளையின் ஸ்ருதி கலையாது இறங்கும் எல்லையை நீட்டி ஆட்டமும் அதிர்வுகளுமற்ற வாழ்க்கையின் ஒருமித்த பயணத்தின் ஏக்கம் […]
நானெனவும் யாரெனவும் இருமை நிலையடைகிறது மனம் முயன்று செய்த சாதனைகள் நானெனப் பறைசாற்ற இழந்துவிட்ட சந்தோஷம் யாரெனக் கேட்கத் தூண்டுகிறது. நானென நிலைக்கும் போதில் சுயம் வெளிப்படுகிறது நல்ல ஆதரவும் கிட்டாமல் நாங்கூரமும் இட முடியாமல் நடுக் கடலில் தத்தளிக்கிறது படகு யாரெனக் குழம்பும் பொழுதுகளில் கனத்த அமைதி கவிந்து மனச் சலனங்களை மறக்கடிக்கிறது. எத்தனை மூழ்கியும் முத்தெடுக்க இயலாத வறுமையே வாழ்வாய் வசப்படுகிறது. என்னைப் பற்றிய குழப்பத்திற்கு விடை காணாமலேயே உலகக் குழப்பங்களைத் தீர்க்க முற்படுகிறேன் […]
* ஒரு வாக்குறுதியின் நகல் தன்னகத்தே எழுதிப் போகும் சொற்களின் இடைவெளிகளில் உழுகிறது பார்வைகளை அவைச் சொல்லத் தப்பிய தருணங்களை நீட்டும் உள்ளங்கைககள் ஏந்திப் பெற விரும்புவது ஒரு சின்னஞ்சிறிய அறிமுகத்தை மட்டுமே ***** –இளங்கோ